ஈரோடு: வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல்! முடிவுற்றப் பணிகள் தொடக்கம் அமைச்சர் சு.முத்துசாமி பங்கேற்பு
- உறியடி செய்திகள்

- Aug 22, 2023
- 1 min read

மூத்தப் பத்திரிக்கையாளர் ராஜா..
ஈரோடு மாவட்டம், மாநகரத்திற்குட்பட்ட பகுதிகளில்,தார்சாலை அமைக்கும் பணி, புதிய தண்ணீர்தொட்டி, பள்ளி கட்டிடம் திறப்பு, பொது மக்களுக்கு அர்ப்பணித்தல், உள்ளாச்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கு வாகனம், கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்கும் நிகழ்ச்சிகளில் அமைச்சர் சு.முத்துச்சாமி பங்கேற்பு!
ஈரோடு, கோவை, மாவட்டங்களில், அடிப்படை வசதிகள், கட்டமைப்புகள். மக்கள்நலத்திட்டங்கள், வளர்ச்சித்திட்டப் பணிகள் உள்ளிட்ட அரசு திட்டப் பணிகளை ஈரோடு மாவட்ட தி.மு.கழகச் செயலாளர், கோவை மாவட்ட பொருப்பு அமைச்சர், தமிழ்நாடு மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் வீட்டுவசதி, நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி சூராவளிச்சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு பணிகளை முடுக்கிவிட்டு விரைவுப்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்கள், ஆலோசனைகளின்படி கொண்டு செல்லும் வகையில் பணியாற்றி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று வருகின்றார்.!

இந்நிலையில்,தி.மு.கழகத் தலைவர்,தமிழ்நாட்டின் முதலமைச்சர் தளபதி மு. க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி ஈரோடு மாவட்டம் ஈரோடு மாநகரத்தில் தார் சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை ,மற்றும் தண்ணீர் டேங்க் திறந்து வைத்தல் மற்றும் புதிய பள்ளி கட்டிடம் திறந்து வைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவில் ஈரோடு மாவட்ட தி.மு.கழகச் செயலாளர், தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறைஅமைச்சர் சு. முத்துசாமி கலந்து கொண்டு வளர்ச்சித் திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில்உள்ள ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு புதிய வாகனம் வழங்கும் நிகழ்ச்சி மற்றும்கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் அரசு நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் சு. முத்துசாமி வழங்கினார் .

மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜகோபால் சுன்க்ரா, எம்.எல்.ஏ.இ.வி.கே.எஸ்.இளங்கோவன்,
, ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் துணை மேயர் வி. செல்வராஜ் மண்டல தலைவர்கள் ,மாமன்ற உறுப்பினர்கள், மற்றும் கழக மாநில, மாவட்ட ,மாநகர, பகுதி கழக,வட்டக் கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




Comments