ஈரோடு: அரசு திட்டப்பணிகள்தொடக்கம்! கூடுதல்அடிப்படைவசதிகள்!அமைச்சர் சு.முத்துசாமி துரித நடவடிக்கை!
- உறியடி செய்திகள்

- Jul 3, 2023
- 1 min read

மூத்தப் பத்திரிக்கையாளர் மணவை ராஜா....
ஈரோட்டில் முடிவுற்ற அரசுத் திட்டபணிகளை தொடங்கிவைத்தும், புதியப் பணிகளுக்கு அடித்தல் நாட்டி, பணிகளை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கிவைத்து, தேவை யான, கூடுதல் அடிப்படை ஏற்பத்தித்தர அதிகாரிகளிடம் வலியுறல்!
சமத்துவபுரத்திறப்பு விழாவில் தந்தைபெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையும் செலுத்தினார்....!
ஈரோடு வடக்கு நலத்திட்டங்கள் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நலதிட்ட பணிகளை நேற்று ஜூலை,2. ஞாயிறு காலை 10 மணிக்கு நடைபெற்றது...!

புதிய கட்டிடங்களை திறந்தும், புதிய திட்டங்களுக்கு பூமிபூஜையும் நடைபெற்றது.
தி.மு.கழகத் தலைவர்,ஒரு தமிழ் நாட்டின் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி....!

விழாவில்,குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் திறப்பு விழா, குறிச்சி உண்டு உறைவிட பள்ளி திறப்பு விழா, குறிச்சி வாரச்சந்தை திறப்பு விழா, குறிச்சி சமுதாயக்கூடம் திறப்பு விழா, குறிச்சி சமத்துவபுரம் திறப்பு விழா, கருங்கண்ணி காட்டூர் புதிய சாலை திறப்பு விழா, மைலம்பாடி அங்கன்வாடி கட்டிடம் மற்றும் எச்.எஸ். கட்டிடம் திறப்பு விழா,
கவுந்தப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மிதிவண்டி நிறுத்தம் திறப்பு விழா, மற்றும் பவானி வட்டாரத்தில் எம் ஜி எஸ் எம் டி பணிகள் அடிக்கல் நாட்டு விழா, குட்டிபாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி கட்டிடம் திறப்பு விழா,

கவுந்தப்பாடி ஊராட்சி வார சந்தை வளாகம் திறப்பு விழா, ஓடத்துறை ஊராட்சி பனங்காட்டூரில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் கட்டிட திறப்பு விழா. உள்ளிட்ட விழாக்களில்,....!

ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.கழக செயலாளர் தமிழ்நாடு வீட்டுவசதி, நகர்புற வளர்ச்சி, மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் கலந்துகொண்டு முரவுற்றப் பணிகளை துவக்கியும், தொடங்கியும் வைத்து, புதிய திட்டபணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பணிகளையும் தொடங்கிவைத்தார்.

முன்னதாக குறிச்சியில் நடைபெற்ற சமத்துவபுரம் தொடக்கவிழாவில் கலந்துகொண்டு புதிய சமத்துவப்புரத்தை திறந்துவைத்த அமைச்சர் சு.முத்துசாமி, அங்கு அமைக்கப்பட்டிருந்து தந்தைபெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.!
இதனை தொடர்ந்து, இப்பகுதி மக்களின் அடிப்படை வசதி, .குடிநீர், மின்சார விளக்குகள், சுகாதார பணிகளையும், தேவைக்கு ஏற்ப ஏற்படுத்தி தந்திடவும் பொதுமக்கள் தரப்பில் கோரப்படும், கோரிக்கைகள் மீது தனி கவனம் கொண்டு உடனுக்கு துரித நடவடிக்கை எடுத்து நிறைவேற்றிட தந்திடவும், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனைகள், அறிவுறுத்தல் வழங்கி, வலியுறுத்தியும் அமைச்சர் சு.முத்துசாமி கேட்டுக்கொண்டார்!

மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜகோபால் சுக்ரா, அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி. வெங்கடாசலம் ,வடக்கு மாவட்ட செயலாளர் என் நல்லசிவம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், தி.மு.கழக,மாநில ,மாவட்ட, மாநகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர் சார்பு அணியினர் , உள்ளிட்ட பலர் கொண்டனர்.




Comments