ஈரோடு: அண்ணாசிலை புனரமைப்பு பணிகள்! அமைச்சர் சு.முத்துசாமி நேரில் ஆய்வு!
- உறியடி செய்திகள்

- Sep 2, 2023
- 1 min read
Updated: Sep 3, 2023

மூத்தப் பத்திரிக்கையாளர் ராஜா
ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் தொடங்கபட்டுள்ள அண்ணாசிலை புனரமைப்புப் பணிகளை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் முத்துசாமிஉரிய ஆலோசனைகளை வழங்கி பணிகள் விரைந்து முடிக்கவும் வலியுறுத்தினார்!
திராவிட இயக்க வரலாற்றில், ஈரோடு என்கிற பெயர் மாபெரும் அங்கம் வகிக்கும் மையப் பகுதி என்றால் அது மிகையாகது!
தந்தைபெரியாரின் பாசறையில் பேரறிஞர் அண்ணா.முத்தமிழறிஞர்கலைஞரின் பொதுவாழ்வு பயணம் முதிர்ச்சிப் பெற காரணமானமிடமும், குருகுலமும் என்றே கூறலாம்!
கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர். ஈரோடு மாநகராட்சி செயல்பட்டு வந்த, வீரப்பன்சத்திரத்தில்
பேரறிஞர் அண்ணாவின் நினைவை போற்றும் வகையில் அண்ணாவுக்கு அப்போதைய மாநகராட்சியில் உருவச்சிலை வைக்கப்பட்டது.
காலபோக்கில், சிலை மறுபுனரமைப்பு செய்திட அப்பகுதியில் வலியுறுத்தி வந்துள்ளனர்.!

இதுகுறித்த தகவலறிந்த
தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவுறுத்தல். ஆலோசனைகளின்படி ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.கழகம் சார்பாக ஈரோடு மாநகரம் வீரப்பன்சத்திரம் பழைய மாநகராட்சி அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணாவின் சிலை புதுபிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது.!

இப்பணி தொடங்கபட்ட நிலையில், ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.கழக செயலாளர் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, மதுவிலக்கு மற்றும் ஆயிர தீர்வைத் துறை அமைச்சர் சு. முத்துசாமி வீரப்பன்சத்திரத்தில் அண்ணா வின்சிலை புரைமைக்கும் பணிகளை நேரடி ஆய்வு செய்தார்.!
அப்போது பணியில் ஈடுப்பட்டோரிடம் சிலை அமைப்புப் பணிகள் குறித்து கேட்டறிந்து, ஆலோசனைகளும் வழங்கியதோடு, விரைந்துப் பணிகளை முடிக்கவும் அறிவுறுத்தினார்.!

கழக மாநில ,மாவட்ட, மாநகர, பகுதி கழக, வட்டக் கழக, மகளிர் அணியினர் மற்றும் நிர்வாகிகளும் அமைச்சருடன் உடன் சென்றனர்.




Comments