ஈரோடு:மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்றுசக்கர வாகனங்கள் - நலத்திட்ட உதவி!அமைச்சர் முத்துசாமி வழங்கினார் !
- உறியடி செய்திகள்

- Jun 26, 2023
- 1 min read

மூத்தப்பத்திரிக்கையாளர் மணவை ராஜா
ஈரோட்டில் புதிய நியாயவிலைக்கடை திறந்துவைத்து, துறை சார்பிலான வாகனங்களை துவக்கிவைத்து, துறைசார்பிலான புதிய வாகனங்களை தொடங்கிவைத்தும்,மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்ர வாகனங்களையும் வழங்கினார் அமைச்சர் முத்துசாமி!
ஈரோடு மாவட்டத்தில், தி.மு.கழக ஆட்சி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையின்கீழ் அமைந்த கடந்த இரண்டரை ஆண்டுகளில் அரசு துறைகளின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள், மாவட்ட தி.மு.கழகச் செயலாளர் அமைச்சர் சு.முத்துசாமியின் முன்னெடுப்பின் காரணமாக, முதல்வரின் கவனத்திற்கு நேரிடையாக கொண்டு செல்லப்பட்ட நிறைவேற்றப்பட்டும் தொடங்கப்பட்டும் திட்டப் பணிகள் முழுவீச்சாக நடைபெற்று வருகின்றது....!

இந்நிலையில், தி.மு.கழகத் தலைவர்,தமிழ்நாட்டின்
முதலமைச்சர் மு .க . ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி ஈரோடு மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் வழங்கும் விழா நடைபெற்றது!
. இதில் ஈரோடு மாவட்ட தி.மு.கழகச் செயலாளர், தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை மற்றும்மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை அமைச்சர் சு. முத்துசாமி கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு வாகனங்களை வழங்கினார். தொடர்ந்து நலத்திட்ட உதவிகளையும், வழங்கினார்...!

இத்தகைய அரசு நலத்திட்டங்கள் பெற்றவர்களிடம், மேலும் தேவையான உதவிகளை, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பெண்கள் உள்ளிட்ட பயனார் களுக்கு தடையின்றி செய்து தரவும் அறிவுறுத்தினார்!

தொடர்ந்து ஈரோடு மாவட்டம் கூட்டுறவு துறை சார்பாக புதிய நியாயவிலை கடைகள் திறப்பு விழா, துறையின் சார்பில் புதிய வாகனங்கள் வழங்கும் விழாவும் நடைபெற்றது.
விழாவில், அமைச்சர்
சு. முத்துசாமி புதிய கடைகளை திறந்து மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்ததுடன்,
துறையின் சார்பிலான புதிய வாகனங்களை கொடி அசைத்தும் துவங்கிவைத்தார்.!
மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி. வெங்கடாஜலம் மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் துணை மேயர் வி செல்வராஜ், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் நவமணி கந்தசாமி,துணைத் தலைவர் கஸ்தூரி ,மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




Comments