ஈரோடு: கீழ்பவானியாறு விவசாயிகள் கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை! அமைச்சர் சு.முத்துசாமி உறுதி!!
- உறியடி செய்திகள்

- Apr 26, 2023
- 1 min read

ஆசிரியர் மணவை எம்.எஸ்.ராஜா...
ஈரோடு கீழ்பவானி ஆற்றுவாய்க்கால்கள் புனரமைப்பு ஆலோசனைக்கூட்டம்! அமைச்சர் சு.முத்துசாமி பங்கேற்பு, விவசாயிகள் கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை அதிகாரிகளுக்கு வலியுறுத்தல்!
தி.மு.கழகத் தலைவர்,தமிழ்நாட்டின் முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்கள், ஆலோசனைகளுக்கு ஏற்ப இன்று ஏப்,26.புதன்கிழமை
ஈரோடு மாவட்டம் கீழ் பவானி பாசன விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று
கீழ்பவானி திட்டத்தின் கீழ் வாய்க்கால் பகுதிகள் புனரமைப்பு மேற்கொள்வது குறித்து விவசாயிகளுடனான கலந்தாலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்ஈரோடு மாவட்ட தி.மு.கழக செயலாளர். தமிழ்நாடு
வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி தலமையில்மாவட்ட
காலை- 10.15 மணி அளவில்,
நடைபெற்றது.
கூட்டத்தில் வாய்க்கால் பகுதிகள் புனரமைக்கும் பணிகள், குறித்தும் விவசாய பணிகளுக்கான வசதிகள் பற்றியும் மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைச்சரிடம் விவசாயிகள் கருத்துக்களை எடுத்துக் கூறினார்கள். விவசாயிகளின்
கோரிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகத்தின் மூலம் துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அமைச்சர் சு.முத்துசாமி கேட்டுக்கொண்டார்.
மேலும் பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு உரிய அனுமதியுடன் பெற்றுத்தருவதாக அமைச்சர் கூறினார்..
மேலும் தமிழ்நாட்டில், விவசாயிகள், உழவர் பெருமக்களின் வாழ்வாதாரத்தின் மீது உண்மையான அக்கரை கொண்டு, தி.மு.கழக ஆட்சியில், தனிநிதிநிலை அறிக்கை தந்து, விவசாயமும் - விவசாயிகளும் நாட்டின் கண்கள் என்ற லட்சியம் கொண்ட நம் முதல்வர் தளபதியார் வேளாண்மை - உழவர் நலத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து தாயுள்ளத்துடன் - தனி கவனம் செலுத்து பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.....
மாவட்ட ஆட்சியர், பொதுபணி துறை அதிகாரிகள், மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.




Comments