ஈரோடு: தொடரும் மக்களுக்கான நலத்திட்ட உதவிகள்! அமைச்சர் சுமுத்துசாமி வழங்கினார்.!
- உறியடி செய்திகள்

- Sep 20, 2023
- 1 min read
Updated: Sep 25, 2023

மூத்தப்பத்திரிக்கையாளர் ராஜா
ஈரோடு: தொடரும் மக்களுக்கான நலத்திட்ட உதவிகள்! அமைச்சர் சுமுத்துசாமி வழங்கினார்.!
தமிழ்நாடு முதலமைச்சர் தி.மு. கழகத் தலைவர் தளபதி மு .க .ஸ்டாலின் வழிகாட்டல்களின்படி,,முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பாக ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில், கழக நிகழ்ச்சிகள், அரசு நலத்திட்ட உதவிகள், கட்சியின் சார்பிலான நலத்திட்ட உதவிகள் போன்ற மக்கள் நேரடியாக பயன்பெறும் வகையிலான பல்வேறு உதவிகள் அனைத்துத்தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில், மாவட்ட தி.மு.கழகச் செயலாளர், தமிழ்நாடு வீட்டுவசதி - நகர்புற மேம்பாடு, மதுவிலக்கு ஆயர்த்தீர்வைத் துறை மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட பொருப்பு அமைச்சர் சு.முத்துசாமி தனி கவனம் செலுத்தி செயல்படுத்திடும்வகையில் பணியாற்றி வருவது அனைவரும் அறிந்ததே!

இதன் தொடர்ப் பணியாக ஈரோடு ஒன்றியத்திற்குட்பட்ட
அங்காளம்மன் கோயில், பெரிய மாரியம்மன் கோயில், சின்ன மாரியம்மன் கோயில், புதூர் மாரியம்மன் கோவில்,மாகாளியம்மன் கோயில், சிந்தன்குட்டை நெசவாளர் காலனி, ராயபாளையம் காலனி, நசியனூர்,ஆகிய இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.!
பொதுமக்களுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகரப்புற வளர்ச்சித் துறை மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறை அமைச்சர், கோயம்புத்தூர் மாவட்ட பொறுப்ப அமைச்சர் சு. முத்துசாமி வழங்கினார்!

ஒன்றிய செயலாளர் தோப்பு .D .சதாசிவம் மற்றும் கழக மாநில மாவட்ட ,ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் மகளிர் அணியினர் மற்றும் கழக நிர்வாகிகள் கழக சார்பு அணியினர், மூத்த முன்னோடிகள்பெரும் திரளாக கலந்து கொண்டனர்.இடம்: .




Comments