பா.ஜ.க.தலைகீழாக நின்றாலும், தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்! புதுச்சேரி நாராயசாமி பேட்டி!!
- உறியடி செய்திகள்

- Oct 31, 2022
- 1 min read

கோவை கார் வெடிப்பு சம்பவத்தை பா.ஜ.க. அரசியலாக்குகிறது தலைகீழாக நின்றாலும் தமிழ்நாட்டு மக்கள் பா.ஜ.க.வின் செயல்பாடுகளை ஏற்கமாட்டார்கள் என்று புதுச்சேரி மாநில முன்னால் முதல்வர் நாராயணசாமி கூறினார்........
கடலூரில் கடந்த சில தினங்களுக்குமுன்னர் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் தெரிவித்த கருத்து குறித்து செய்தியாளர்கள் அண்ணாமலையிடம் கேள்வி எழப்ப முயன்றனர். அப்போது செய்தியாளர்களை பார்த்து, பொது இடம் என்றும் பாராமல் தரம் குறைந்த வகையில் பேசியது, தமிழகம் முழுவதும் களத்தில் பணியாற்றும் செய்தியாளர்கள் மத்தியில் மன உளைச்சலை ஏற்படுத்தியது. மரத்து மேல குரங்கு போல தாவித்தாவி சுற்றி சுற்றி வருகிறீர்கள் என பாஜக தலைவர் அண்ணாமலை தரக்குறைவாக விமர்சனம் செய்திருக்கிறார்.பொது இடத்தில் செய்தியாளர்களிடம் சுயமரியாதை இன்றி பேசி உள்ளார். மேலும் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை தரக் குறைவாக பேசுவது இது முதல் முறையும் அல்ல. இதற்கு முன்பு பாஜக அலுவலகத்தில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை கமாலயத்தில் வைத்து தரக் குறைவாக பேசி இருந்தார். இது மட்டுமல்லாது பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா சமீப காலங்களில் செய்தியாளர்களை தொடர்ந்து தரக்குறைவாக பேசி வருகின்றனர். ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற எந்தவித பாகுபாடும் இன்றி அரசியல் கட்சியினரின் கருத்துக்கள் மற்றும் அவர்கள் சுட்டிக்காட்டும் செய்திகளை மக்கள் மற்றும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லக்கூடிய செய்தியாளர்களை தொடர்ந்து அவமரியாதை செய்யும் பாஜகவினரின் இத்தகைய போக்கு கண்டனத்துக்குரியது என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்துக்களை கூறிவருகின்றனர்.
இதுகுறித்து,புதுவையில் முன்னாள் முதல்வர், காங்கிரஸ் நிர்வாகி நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசும்போது......

, தமிழகத்தில் கோவையில் நடந்த கார்சிலிண்டர் வெடிப்பு சம்பவம் துரதிஷ்டவசமானது.
துரிதமாக செயல்பட்ட தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியது. ஆனால் பாஜக இதை அரசியலாக்குகின்றது. பாஜக ஆளும் மாநிலங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டுதான் வருகின்றது;
பாஜக தலைகீழாக நின்றாலும் தமிழக மக்களின் அனுதாபத்தை பெற முடியாது. பாஜக-வின் சந்தர்ப்பவாத அரசியலை கண்டு மக்கள் ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள்; அண்ணாமலை, பத்திரிக்கையாளர்களை தரக்குறைவாக பேசியது கண்டனத்திற்குரியது இவ்வாறாக கூறினார்............




Comments