top of page
Search

தூத்துக்குடி அருகே அகழாய்வுப் பணிகள்!கவிஞர் கனிமொழி கருணாநிதி, எம்.பி தொடங்கிவைத்து ஆய்வு!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • May 22, 2023
  • 1 min read
ree
ree


தூத்துக்குடி அருகே, ஆதிச்சநல்லூர் அருகிலுள்ள அகரம் பகுதியில், இந்திய தொல்லியல் துறை சார்பிலான அகழாய்வுப் பணிகளை திமுக துணைப் பொதுச் செயலாளர், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி கருணாநிதி தொடங்கி வைத்து ஆய்வும் மேற்கொண்டார்!


தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொருப்பேற்ற கால முதல் தொல்லியல்துறை சார்ந்த பழங்கால மக்கள் வாழ்விட அடையாளங்கள், பண்பாடு, நாகரீகம், வசிப்பிடம் உள்ளிட்டவற்றை மீட்டெடுத்து உலகுக்கு தமிழர்களின் வாழ்வாதார பெருமைகளை வெளிகாட்டுவதில் தீவிர முனைப்பு காட்டி வருவதுடன் அதற்கான பணிகளை முடுக்கிவிட்டு தீவிரப்படுத்தியும் வருகின்றது.

ree

இதே போல், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைகளின்படி பழங்கால கலைகள், வீர விளையாட்டுக்கள். கிராமிய கலைகளை மீட்டெடுத்துவரும் பணிகளில் நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி கருணாநிதியும் தீவிர முனைப்புடன் அதற்கானபணிகளை முன்னெடுத்தும் வருகின்றார் என்பதும் குறிப்பிடதக்க ஒன்றாகும்.


தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரைச் அடுத்த திருக்கோளூரில் நடைபெற்று வரும் அகழாய்வில், சுடுமண் குழாய்கள், செம்பு காசுகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

. இன்று மே22. திங்கட்கிழமை, திமுக துணைப் பொதுச் செயலாளர் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற தி.மு.கழக உறுப்பினர்கள் குழுத் துணைத் தலைவர் கவிஞர் கனிமொழி கருணாநிதி அகழ்வு ஆராய்ச்சி பணிகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

ree

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து, புதைக்கப்பட்ட மக்களின் வாழ்விடப் பகுதிகளை கண்டறியும் வகையில், ஆதிச்சநல்லூர் அதனை சுற்றியுள்ள திருக்கோளூர் உள்ளிட்ட பகுதிகளில் தொல்லியல் துறையினர் அகழாய்வு பணிகள் மேற்கொண்டுள்ளனர்.

ree

கடந்த பிப்ரவரி மாதம் 6 – ஆம் தேதி தொடங்கிய இந்த அகழாய்வில், பண்டைய கால மக்கள் பயன்படுத்திய, பல வண்ணங்கள் கொண்ட பாசிகள், சுடுமண் உருவங்கள், செம்பு காசுகள், மெருகேற்றப்பட்ட சிவப்பு, கருப்பு நிறத்திலான பானை உள்ளிட்ட ஏராளமான தொல்லியல் பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. இதனால் தொல்லியில் துறையினர் மட்டுமின்றி அனைவரும்மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page