அச்சமா.வெறுப்பா,சனாதானமா?ஆர்.என்.ரவியை மிரள வைத்ததா! உறியடி இணைய செய்திதளம்! தலைவர்களும் கண்டனம்!
- உறியடி செய்திகள்

- Jan 8, 2023
- 2 min read
Updated: Feb 1, 2023

மணவை.எம்.எஸ்.ராஜா.
ஆர்.என்.ரவியை மிரளவைத்ததா? உறியடி இணையத்தின் (uriyadi.Com) செய்திகள்! ஆர்.என்.ரவியின் அச்சம் வெறுப்பு பேச்சு ஏன்? தமிழ்நாட்டின் தலைவர்கள் கடும் கண்டணம்!
நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில், தி.மு.கழகத்தின் தலைவர், தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி பொருப்பேற்ற காலமுதல் உறியடி இணையதளயதளத்தில் (uriyadi.com) தி.மு.கழக அரசு மக்கள் நலத்திட்டங்கள். அனைத்து அரசுத்துறை.நலத்திட்டங்கள். வளர்ச்சிப் பணிகள், அடிக்கல் நாட்டு விழா. திறப்பு விழா, மருத்துவத்துறை சார்ந்த நிகழ்ச்சிகள், பாராளுமன்றத்தில் தி.மு.கழக உறுப்பினர்களின் செயல்பாடுகள் உள்ளிட்ட அரசு துறைகளின்செயல்பாடுகளையும் தி.மு.கழகத்தின் வளர்ச்சி குறித்த அனைத்துத்தரப்பு.நிகழ்வுகளையும் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் தனது ஊடகப் பணிகளை துரிதமாகவும், விரிவாகவும் செய்து வருவது பலரும் அறிந்ததே!

இந்நிலையில், முதல்வர் நிகழ்ச்சி முதல்-அமைச்சர் பெருமக்களின், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் .தி.மு.கழக முக்கிய நிர்வாகிகளின் நிகழ்ச்சிகள், அரசு நிகழ்வுகள்பற்றிய செய்திகளில். பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் உயிர் மூச்சு. வாழ்நாள் கொள்கையை அவரால் பயிற்றுவிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணாவால், பாராளுமன்றத்தில் பல்வேறு சனாதான சக்திகள் மத்தியில், பல்வே று இடையூறுகள், எதிர்ப்புகளுக்கு மத்தியில் பேராடி பெற்று தந்து.முத்தமிழறிஞர் கலைஞரால் இன மொழி உணர்வோடு கட்டி காத்துவந்த, "தமிழ்நாடு என்னும் உயிர் சொல்லாடலை" ஏற்று. அவர்கள் காட்டிய வழியில் " "தமிழ்நாட்டின்"முதல்அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் என்றே குறிப்பிட்டு செய்திகளை திராவிட பராம்பரிய உணர்வானவர்கள் பின்புலத்தோடு, ஊடக உலகில் 30 ஆண்டுகளை கடந்துபணியாற்றிவரும்"உறியடி இணையதளத்தின், செய்திகளில். தமிழ்நாடு என, குறிப்பிட்டு பிரசூரம் செய்துவந்தது......
இது தமிழ்நாட்டின் மீதும், மொழி .இனத்தின் ,மீது பற்றுக்கொண்டவர்கள். திராவிட உணர்வாலர்கள். தமிழறிஞர்கள்
பலராலும் பாராட்டப்பட்டும் வந்தது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர். சனாதானாத்தை, மதத்தின், இனத்தின்.மொழியின் பெயரால் பிரித்தாளும் சூழ்ச்சியை ஆளுநராக வந்த ஆர்.என்.ரவி. பின்பற்றுவதாக குற்றச்சாட்டப்பட்டு வந்த நிலையில், அடுத்தகட்ட சர்ச்சையாக, தமிழ்நாட்டை, தமிழகம் என்றுதான் அழைக்க வேண்டும் என்ற ஆர்.என்.ரவியின் தமிழர்களின் உணர்வுகளை கேலி கூத்தாக்கும் வகையிலான பேச்சு, தமிழ்நாட்டில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் மத்தியில் கடும் அதிருப்த்தியை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.
ஆர்.என்.ரவியின் இத்தகைய தமிழர்களுக்கு எதிர்மறையான கருத்துக்கு அரசியல் தலைவர்கள், நடுநிலையாளர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றது....
இதனை தொடர்ந்து தி.மு.கழக பொருளாளர். நாடாளுமன்ற தி.மு.கழக உறுப்பபினர்கள் குழுத்தலைவர்,டி.ஆர்.பாலூ.ம.தி.மு.க., பொதுச்செயலாளர் மாநிலங்கவை,உறுப்பினர்,வை.கோ.
அ.தி.மு.க. அமைப்புச்செயலாளர், முன்னால் அமைச்சர் டி.ஜெயக்குமார். விடுதலை சிறுத்தைகளின் கட்சித் தலைவர் சிதம்பரம்.நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமா.அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன். மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் எம்.எச்.ஜவராஹில்லா மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹசன், மார்க்ஸிஸ்ட் கட்சி செயலாளர் பாலகிருஷ்ணன். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர். கி.வீரமணி. பிரபல திரைப்பட ஒளிபதிவாளர்.பி.சி.ஸ்ரீராம். உள்ளிட்ட அரசியல் இயக்க தலைவர்கள் - சமூகநீதி ஆர்வலர்கள். தமிழ்மொழி, இனப்பற்று கொண்ட நடுநிலையாளர்கள், மூத்த பத்திரிக்கையாளர்கள், அரசியல் பார்வையாளர்கள் விமர்சர்களாலும் ஆர்.என்.ரவியின், தமிழ்நாட்டை, தமிழகம் என்றுதான் அழைக்க வேண்டும் என்கிற அப்பட்டமான சனாதானா கருத்துக்கு கடும் எதிர்வினையை தொடர்ந்து ஆற்றிவருவது, மங்கிப் போல தமிழர்கள் உள்ளங்களிலும், உணர்வுகளிலும் பசு மரத்து ஆணிப் போல தமிழ்மொழி பற்று மறுபதிவாகிவருவது தமிழர்கள் அனைவருக்கும் மட்டும்ல்ல, (உறியடி இணையத்தளத்திற்கும் uriyadi.com) தமிழ் உணர்வாளர்கள். தமிழராய் பிறந்த தமிழ்மொழி நேசிக்கும் அனைவரும் வரவேற்கும் நிகழ்வாக ஒளிவீச தொடங்கியுள்ளது....
அன்றும் இன்றும் என்றும் தமிழர்கள் நாம்!
தமிழ்நாடு திராவிட இனத்தின் வழித்தோன்றல்கள் நமக்கு பெற்று தந்து காட்டி காத்து, நமக்கு வழங்கியுள்ள எவருக்கும் கிடைக்காத விலைமதிப்பற்ற கொடை.....
வீழ்வது நாமாகயிருப்பின்!
வாழ்வது தமிழ்மொழியும் - தமிழ்நாடாகவும் இருக்கட்டும்!!
உறியடி இணைய செய்திதளம்.
செய்தி குழுவினர்கள் .....




Comments