top of page
Search

பெண் எஸ்.பி.பாலியல் புகார், வழக்கு! டி.ஜி.பிக்கு தண்டனை! ஜாமீனும் வழங்கியது நீதிமன்றம்!!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Jun 17, 2023
  • 2 min read
ree

பெண் எஸ்.பி.பாலியல் புகார், வழக்கு! டி.ஜி.பிக்கு தண்டனை! ஜாமீனும் வழங்கியது நீதிமன்றம்!!


பாலியல் புகாரில் தண்டனை பெற்ற 3வது போலீஸ் அதிகாரி ராஜேஷ்தாஸ் என்று தெரியவந்துள்ளது. இது காவல் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏறப்டுத்தி உள்ளது!


எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது, தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்தவர் ராஜேஷ்தாஸ். இவர், பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.20 ஆயிரத்து 500 அபராதமும் விதிக்கப்பட்டது.


தமிழகத்தில் உள்ள போலீஸ் அதிகாரிகளில் பாலியல் புகாரில் சிக்கி சிறைத் தண்டனை பெற்ற முதல் ஐபிஎஸ் அதிகாரி இவர்தான். இதற்கு முன்னர், சோலை முத்தையா என்ற எஸ்பி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் மேல் முறையீட்டில் அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால், பாலியல் புகாரில் சிக்கி தண்டனை பெற்றது ராஜேஷ்தாஸ்தான். இவர், தூத்துக்குடியில் எஸ்பியாக பணியாற்றியபோது, கணவன், மனைவி பிரச்னைக்காக புகார் கொடுக்க வந்த பெண்ணை ஒரு வாரம் தனது அலுவலகத்திலேயே வைத்துக் கொண்டதாக புகார் எழுந்தது.


அப்போது இந்த அளவுக்கு விழிப்புணர்வு இல்லாததால் அந்த புகார் செயல் இழந்ததாக கூறப்படுகிறது.

அதேபோல தென் மண்டல ஐஜியாக இருந்தபோது, சிவகங்கையைச் சேர்ந்த சிறுமி உள்பட பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக புகார் எழுந்தது. அதில் ஒரு சில குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். ஒரு இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அந்தப் புகாரில் இன்ஸ்பெக்டருக்கு மேல் உள்ள அதிகாரிகள் அனைவரும் தப்பி விட்டதாக கூறப்படுகிறது.

இவ்வாறு ராஜேஷ்தாஸ் பணியாற்றிய இடங்களில் எல்லாம் பெரிய அளவில் பாலியல் புகார்கள் எழும். ஆனால், அந்தப் புகாரில் அவர் மீது யாரும் குற்றம்சாட்டாமல் இருந்து வந்தனர்.


பெண் எஸ்பி விவகாரத்தில் அவர் வசமாக சிக்கிக் கொண்டார்!


இவரைப் போல, அரியானா மாநில டிஜிபியாக இருந்த ரத்தோர், தனது மகளின் தோழியாக உள்ள 14 வயது சிறுமியை 1990 ஆகஸ்ட் 20ல் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. அந்த சிறுமி ஒரு டென்னிஸ் வீராங்கனை. இந்த சம்பவத்தில் ரத்தோருக்கு ஆதரவாக சிலர் களம் இறங்கினார். இதனால் சிறுமி 1993 டிசம்பர் 28ல் தற்கொலை செய்து கொண்டார். ஆனாலும்

அதேபோல, பஞ்சாப் டிஜிபியாக இருந்தவர் கே.பி.எஸ்.கில். இவர், தீவிரவாதிகள் ஒழிப்பில் சிறந்து விளங்கியதால் இவரை நாடு முழுவதும் உள்ள போலீசார் ''சூப்பர்காப்'' என்று அழைத்தனர். ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு வழிகாட்டியாக இருந்தார். பின்னர் அகில இந்திய டென்னிஸ் சம்மேளனத்தின் தலைவராகவும் இருந்தார். இவர் போலீஸ் பணியில் இருந்தபோது ஒரு விழாவில் பெண் ஐஏஎஸ் அதிகாரியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து அந்த ஐஏஎஸ் அதிகாரி புகார் செய்தார்.

இந்தப் புகார் மீது ஆரம்பத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. அப்போதைய அரசு மற்றும் கவர்னராக இருந்தவர்கள் பெண் ஐஏஎஸ் அதிகாரியிடம் சமரசம் பேசினர். மன்னிப்பு கேட்க வைப்பதாகவும் தெரிவித்தனர். ஆனால் வழக்கை நடத்திய ஐஏஎஸ் அதிகாரி, 1996ல் கே.பி.எஸ்.கில்லை குற்றவாளி என்று அறிவித்தது. பின்னர் அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதன்பின்னர் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. பின்னர் 2017ல் கே.பி.எஸ்.கில், தனது 82வது வயதில் மரணம் அடைந்தார். நாட்டிலேயே இரு டிஜிபிக்கள் மீதுதான் பாலியல் புகார்கள் கொடுக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் பாலியல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற முதல் ஐபிஎஸ் அதிகாரி ராஜேஷ்தாஸ்தான்.

ஐஜி மீது பாலியல் புகார்?

ராஜேஷ்தாஸ் போல, எடப்பாடி ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜியாக இருந்த முருகன் மீது, பெண் எஸ்பி பாலியல் புகார் தெரிவித்திருந்தார். இந்தப் புகார் மீது போலீசார் ஆரம்பத்தில் விசாரணை நடத்தாமல் இருந்தனர். பின்னர் பெண் அதிகாரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த பிறகு, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. தற்போது அந்த வழக்கில் விசாரணை நடந்து வருகிறது.

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page