உரம் பூச்சிமருந்து அதிக விலைக்கு விற்றால்! கடும் நடவடிக்கை பாயும்! வேளாண்மைதுறை அமைச்சர் எச்சரிக்கை!
- உறியடி செய்திகள்

- Jun 11, 2023
- 2 min read

மணவை எம்.எஸ்.ராஜா....
உரம் பூச்சிக்கொல்லி மருந்துகளை அதிக விலைக்கு விற்றால் உரிமம் ரத்து
வேளாண் அதிகாரி எச்சரிக்கை
தமிழகத்தில் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை அதிக விலைக்கு விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட விற்பனை நிலையங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்!
தி.மு.கழக உயர் மட்ட செயல்திட்டக்குழு உறுப்பினர், கடலூர் மாவட்ட தி.மு.கழக செயலாளர் தருமபுரி மாவட்ட பொருப்பு அமைச்சர், தமிழக வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்எச்சரிக்கை விடுத்துள்ளார்!
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது!

சொன்னதை மட்டுமல்லாது, மக்கள் நலன் காண சொல்லாமல் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின், சில தினங்களுக்கு முன்னர் தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்ட நீர் வழிப்பாதைகளின் புனரமைப்பு, வளர்ச்சிப் பணிகளையும், வருகிற 12,ம். ந் தேதி தனது பொற்கரங்களால் மேட்டூர் அணையை திறந்து டெல்டா பகுதி விவசாயம் வளம் கொழிக்கச் செய்ய வேண்டும் என்கிற உயரிய சிந்தனையோடு, மேற்க்கூறிய மாவட்டப் பகுதிகளில் காவிரியாற்று நீர்வழித்தட ஆறுகள், வாய்க்கால்கள் சீரமைப்புப் பணி, கட்டமைகப்புப்பணிகளையும் கொழுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது நேரடியாக வந்து பணிகளை ஆய்வு செய்து, ஆலோசனைகள் அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நெல். கரும்பு. மக்காச்சோளம். சோளம். பருத்தி தென்னை .வாழை. மரவள்ளி வெங்காயம் மற்றும் காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது குறிப்பாக இயற்கை விவசாயம் மற்றும் வேளாண்மைக்கு, தி.மு.கழகத்தலைவர் தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அதிக முக்கியத்துவம் அளித்து இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து வருகிறது விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்யும் பயிர்களுக்கு அதிக அளவில் இயற்கை உரங்கள் மின்னூட்டங்கள். உயிர் உரங்கள் மற்றும் உயரிய பூச்சிக்கொல்லிகளை மருந்துகளை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.

உயிர் உரங்கள் 300 பட்டை உரங்கள் மற்றும் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் ட்ரைக்கும் விரிடி. சூடோமோனஸ்.
பிவேரியா .
ஆகியவை அனைத்து வட்டார வேளாண் விரிவாக்க மையங்களிலும் இருக்கிறது பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துவதன் மூலம் நிலம் மற்றும் சுற்றுப்புறம் மாசுபடுவதை தவிர்ப்பதோடு மண்வளத்தை மேம்படுத்தி உற்பத்தி செலவையும் குறைக்கலாம் மேலும். நற்சில்லா உணவையும் மக்களுக்கு உற்பத்தி செய்து கொடுக்க முடியும் அதனால் விவசாயிகள் வேளாண் துறை மூலம் வயல்களில் மண் பரிசோதனை செய்து பயன்படுத்திக் வேண்டும் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் வாங்கும் போது உரிமம் பெற்ற உரம் மற்றும் பூச்சியுள்ளி விற்பனையாளர்களிடம் உரிய விற்பனை ரசீது. பெற்று வாங்க வேண்டும்.

தமிழகத்தின் முதுகெலும்பாக பணி செய்யும், விவசாயிகள், உழவர் பெருமக்களுக்கு
போலி உரம் மற்றும் பூச்சிகளை மருந்துகள் விற்பனை செய்தாலோ அல்லது அதிக விலைக்கு விற்றாலோ சம்பந்தப்பட்ட விற்பனை நிலையங்களில் உரிமம் ரத்து செய்யப்படும் இதுபற்றிய புகார்கள் ஏதுமிருந்தால் அருகிலுள்ள துறை அலுவலர்களிடம் தெரிவிக்கலாம். அவ்வாறு வரப்படும் புகார்கள் மீது தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி உடனடி கடும் நடவடிக்கை தயவு தட்சண்யமின்றிஎடுக்கப்படும்!
இவ்வாறாக அவர் கூறியுள்ளார்.




Comments