top of page
Search

திருப்புனை திருச்சியில் விழா! முதல்வர்ஸ்டாலின் அமைச்சர்உதயநிதி பங்கேற்பு! அமைச்சர் நேரு கள ஆய்வு!!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Dec 16, 2022
  • 2 min read
ree

மணவை, எம்.எஸ்.ராஜா....

திரர் கோட்டம், திருப்புமுனையை ஏற்படுத்தும் திருச்சியில் அமைச்சர் பொருப்பேற்றபின். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், முதன் முதலாக அரசு விழாவில் அமைச்சர்,உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்கான ஏற்பாடுகளையும் - நிகழ்ச்சி திட்டமிடல்களையும் மாவட்ட நிர்வாகத்தை முடுக்கிவிட்டு நேரடிகள ஆய்வுப் பணியில் ஈடுபட்டு, பல்வேறு இடங்களில் ஆய்வுப்பணிகளையும் மேற்கொண்டுவருகிறார் அமைச்சர் கே.என்.நேரு....


திருச்சி வரலாற்றிலும், ஆலம்விருச்சகமாக, மக்கள் பணியில் திகழ்த்து விளங்க,தி.மு.கழகம் வளர்ச்சியில் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சியைப் பெறுவதற்கான, முத்தமிழறிஞர் கலைஞரின் அரசியல் பொதுவாழ்விலும் முழுமையாக வெளிகாட்டியதிலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் மனதில் நம்பிக்கைக்கு பாத்திரமாக,மிக மிக.முக்கிய பங்குவகிக்கும் நகரமாகும்......


குறிப்பாக இன்றைய தி.மு.கழக முதன்மைச் செயலாளர் சேலம் மண்டல கழக பொருப்பாளர். தமிழக நகராட்சி நிர்வாகத்துறைஅமைச்சர் கே.என்.நேரு, ஒன்றுபட்ட திருச்சி மாவட்டத்தின் மாவட்டச் செயலாளராக பொருப்பேற்றபின்னர், தி.மு.கழகம் வளர்ச்சியில் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி தமிழகம் முழுவதும் மிக பெரியதாக்கத்தை ஏற்படுத்திய பகுதியாகவும் திகழ்கிறது......

ree

ஆகவேதான், முத்தமிழறிஞர் கலைஞர், தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் ஆகியோரால், அமைச்சர் நேருவை மாநாட்டு நாயகர் என்றழைக்கப்படும் அளவுக்கு திருச்சி மாநகரம் பெருமைப்பட்டு திகழுகின்றது.

முத்தமிழறிஞர் கலைஞர் காலத்திலும் சரி. இப்போது கழகத் தலைவர். முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் காலத்திலும், இவர்களின் கழக வளர்ச்சி, கழகத்தை அடுத்தகட்டத்திற்கு வளர்ச்சியை நோக்கி பயணித்து வெற்றி காண நினைக்கும் சிந்தனைகளையும், எதிர்பார்ப்புகளையும் உள்வாங்கி தொடர்ந்து தி.மு.கழகத்தின் வளர்ச்சிக்கான திருப்புமுனையை ஏற்படுத்தும் மாநகராக தொடர்ந்து தனது அயராது உழைப்பு, தொண்டர்களிடமும், நிர்வாகிகளிடமும் அரவணைப்பு என்று தனி முத்திரை பதித்து வருகின்றார் அமைச்சர் கே.என்.நேரு.......

ree

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில், தி.மு.கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானார்...


இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா, புதிய வளர்ச்சி திட்டப் பணிகளுக்கான தொடக்கவிழா, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்-ஒலி - ஒளி காட்சிக்கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, இம்மாத இறுதியில் நடைபெறும் என்று தெரிகிறது.....

ree

இதில் தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல்அமைச்சர். தளபதி மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு நலப்பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்து, நலத்திட்ட உதவிகளும் வழங்க உள்ளார். மேலும் தமிழக அமைச்சரவையின் புதிய அமைச்சராக பொருப்பேற்றப்பின் உதயநிதி ஸ்டாலின் முதன்முதலில் கலந்துகொள்ளும் மாபெரும் அரசு நிகழ்ச்சியாகும்.

இந்நிகழ்ச்சிக்கான இடங்களை நேற்று, அமைச்சர் கே.என்.நேரு அண்ணா விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும் பகுதிகளில்நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.....

ree

திருச்சி, தி.மு.கழக.அரசியல் வரலாற்றில், திருப்புனை ஏற்படுத்தும் பகுதி, இங்கு, தமிழக முதல்வரும்,அமைச்சர் பொருப்பேற்றப்பின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதன் முதல்லாக பங்கேற்க்கும் அரசு விழா என்பதால், தி.மு.கழகத்தினர் மிகுந்த உற்ச்சாகத்திலுள்ளனர்.

முன்னதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி திருச்சி மாவட்டம், சனமங்கலம் யானைகள் காப்பகம்-வனவிலங்கு சரணயத்தை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு, அதிகாரிகளோடு ஆய்வு - ஆலோசனைகளையும் மேற்க்கொண்டார்.

ree
ree

அப்போது தமிழக முதல்வர், தளபதி மு.க.ஸ்டாலின். வனத்துறையின் மீதும் வனவிலங்குகளின் பாதுகாப்பிலும், தேவையான அனைத்து விதமான அடிப்படை வசதிகள் செய்து தரவும், இவைகளை பராமரிக்கவும் உத்தரவிட்டு, தனி கவனம் செலுத்தி, அக்கரையுடன் கண்காணித்து வருகிறார். எனவே அதிகாரிகள் தங்களின் பணியில் மிகுந்த கவனம் கண்காணிப்புகளை தீவிரபடுத்தி, சரணாயத்தை மேம்படுத்திடவும், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சுற்றுப்புறங்களையும்,மேம்படுத்துவடன் வனவிலங்குகளை பாதுகாத்து உரியமுறையில் பணியாற்றவும் வலியுறுத்தினார்....

ree

இதனையடுத்து, திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வரலாறு காணாத வகையில் முட்டை விலை அதிகரித்துள்ள நிலையில், முட்டைகளை ஏற்றுமதி செய்ய, இந்திய ஒன்றிய அரசுக்கு வேண்டுகோல் விடுத்திருந்த நிலையில் இதனையடுத்து முதன்முறையாக, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான மலேசியாவுக்கு. திருச்சி விமான நிலையத்திலிருந்து, மாதம் 5. கோடி முட்டை ஏற்றுமதி என்கிற இலக்கின் அடிப்படையில், முதல்கட்டமாக 2. லட்சம் முட்டைகள்.ஏற்றுமதியை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார்.....

ree

தொடர்ந்து இன்று, திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, புங்கனூர் - அல்லித் துறையில் புதியதார்சாலை அமைக்க அப்பகுதியினர் விடுத்த கோரிக்கையை ஏற்று, அதற்கான திட்டமிடல் பணிகள் நிறைவுற்று, ரூ.1.65. கோடி மதிப்பீட்டில், தார்சாலை அமைக்கும் பணியையும் தொடங்கிவைத்தார்.

ree
ree

இதனை தொடர்ந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் பனைவிதைகள் நடும்பணியையும் தொடங்கியும் வைத்தார்.


தொடர்ந்து இன்று அரசு விழா நடைபெறும், அண்ணாவிளையாட்டு திடலில், மீண்டும் நேரில் சென்று, அங்கு பாதுகாப்பு, நிகழ்ச்சி நடத்தும் ஏற்பாடுகள், பார்வையாளர்கள் - முக்கிய பிரமுகர்கள் வருகை, பொதுமக்கள், பயனாளிகளுக்கான ஏற்பாடுகளை கண்காணிப்பு பணிகளை யும் தீவிர ஆய்வு செய்துவருகிறார்

தி.மு.கழக முதன்மைச் செயலாளர்.சேலம் கழகமண்டல பொருப்பாளர் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே .என்.நேரு.......


ree

ree

ஒன்றிய தி.மு.கழகச் செயலாளர், ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ.பழனியாண்டி, திருச்சி மாநகர தி.மு.கழக செயலாளர்.மாநகர மேயர் மு.அன்பழகன், கலெக்டர் பிரதீப்குமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் உடன் சென்றனர்.

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page