பொறியியல் கல்வி கலந்தாய்வில் முதலிடம்! மாணவி நேத்ராவை பாராட்டி பரிசளித்தார்! கனிமொழிகருணாநிதி!!
- உறியடி செய்திகள்

- Jun 28, 2023
- 1 min read

மூத்தப்பத்திரிக்கையாளர் ராஜா
பொறியியல் கலந்தாய்வு தரவரிசையில் முதலிடம் பெற்ற தூத்துக்குடி மாணவி நேத்ரா - வாழ்த்தி பரிசளித்தார் கவிஞர் கனிமொழி கருணாநிதி எம்.பி!
பொதுவாழ்வில் அரசியலுக்கு அப்பாற்பட்டு, கல்வி தொழில், சமூக நலன், பழங்கலை மீட்டெடுப்பு, இளம்பெண் சாதனையாளர்கள் - உள்ளிட்ட சமூகத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டிய, தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கக் கூடியவர்களை உற்சாகப்படுத்தி அவர்களை மேலும் சாதனையாளர்களாக இந்த சமூகத்திற்கு அடையாளம் காட்டப்பட வேண்டும் என்கிற வகையில், தி.மு.கழகத் துணைப்பொதுச்செயலாளர். நாடாளுமன்ற தி.மு.கழக உறுப்பினர்கள்க்குழுத்தலைவர்: தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர். எழுத்தாளர், கனிமொழி கருணாநிதியின் முன்னெடுக்கப்படும் அனைத்து செயல்பாடுகளும் மிகுந்த பாராட்டுக்குறியது என்றால் அது மிகையில்லை!

இந்நிலையில் பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலில் திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீசங்கரா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி பா.நேத்ரா மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். !
ஜூன்27, செவ்வாய்கிழமை தூத்துக்குடி நாடாளுமன்ற அலுவலகத்தில்,திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி ,மாணவி நேத்ரா நேரில் அழைத்து வாழ்த்தி பரிசு வழங்கி மேலும் பல சாதனைகள் படைக்க, நாட்டிற்கு பெருமை சேர்க்க பாராட்டினார்!

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே சிறுத்தொண்டநல்லூர் என்ற கிராமத்தை சேர்ந்த நேத்ரா என்ற மாணவி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 598 மதிப்பெண்கள் பெற்று பொறியியல் கலந்தாய்வு தரவரிசை பட்டியிலில் முதலிடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




Comments