top of page
Search

fr. ஸ்டேன்சாமி திட்டமிட்டு படுகொலையா? அம்பலமான ஹேக்கிங் அதிர்ச்சி தகவல்கள்! ஒன்றியஅரசின் பதில்என்ன?

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Dec 21, 2022
  • 2 min read
ree

பாதிரியார் ஸ்டேன் சாமி மீது கூறப்பட்ட ஆவண குற்றச்சாட்ட கள், அவரின் மடிக்கணனியில் திட்டமிட்டு ஹேக்கிங் செய்து, புனே காவல்துறையே திணித்துள்ளதாக குற்றச்சாட்டுகள் வலுப்பெற தொடங்கியுள்ள நிலையில், ஒன்றிய அரசு இது குறித்து பதிலளிக்கவும், வலியுறுத்தல்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளது....


ஸ்டேன் சுவாமி: லேப்டாப் ஹேக் செய்யப்பட்டு ஆவணங்கள் திணிக்கப்பட்டது? - அமெரிக்க அறிக்கை சொல்வது என்ன?

4hr31 shares

திருச்சி மாவட்டம் விரகனூரில் பிறந்த பாதிரியார் ஸ்டேன் சுவாமி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக செயல்பட்டுவந்தார்.

மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக 2018-ம் ஆண்டு பாதிரியார் ஸ்டேன் சாமி உள்ளிட்ட 16 பேர் பீமா கோரோ கான்வழக்கில் புனோபோலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இவர்களை நகர்புற நக்ஸலைட்டுகள் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சனம் செய்தார், என்.ஐ.ஏ-வால் தடைசெய்யப்பட்டமாவேஸ்ட் இயக்கத்துடன் தொடர்புடையவர்களில்இவரும் ஒருவர் என்று,கைது செய்யப்பட்டார். மேலும் மோடியை கொலை செய்ய திட்டம் நீட்டியதாகவும், ஒன்றிய அரசை அரசை கவிழ்க்க சதி செய்ததாகவும்,பொய்க்குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டிருப்பதாக சமூகச் செயற்பாட்டாளர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் அரசியல் கட்சியினரும் குற்றம்சாட்டினர்.

ree

ஸ்டேன் சாமி

83 வயதான பாதிரியார் ஸ்டேன் சுவாமி, பார்க்சின்சன் என்ற கைநடுக்க நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். கை நடுக்கம் காரணமாக அவரால் சாப்பிடவோ, தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை, எனவே தண்ணீர் உறிஞ்சிகுடிக்க குழாய் வேண்டுமென்று கேட்ட கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. ஆனாலும், அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. கைநடுக்கம் காரணமாக அவரால் உணவு உட்கொள்ள முடியவில்லை. அதனால், அவருக்கு சாப்பிட ஒரு ஸ்பூன் வழங்க வேண்டும் என்று சிறை நிர்வாகத்திடம் கேட்டபோது, ஸ்பூன் வழங்க சிறை நிர்வாகம் மறுத்துவிட்டதாக சர்ச்சை எழுந்தது. அவருக்கு ஸ்பூன் வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வேண்டுகோள் வைக்கப்பட்டது. அவரின் ஜாமீன் மனு நீதிமன்ற விசாரணையில் இருந்தபோதே, அவரின் உடல்நிலை மோசமாகி சிறையில் அவர், 2021ம் ஆண்டு,ஜூலை 5ம் ந் தேதி மரணமடைந்தார்.2018-ம் ஆண்டு, மகாராஷ்டிரா மாநிலம் பீமா கோரேகானில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியையொட்டி பெரும் வன்முறை ஏற்பட்டு, ஒருவர் உயிரிழந்தார்.

அங்கு வன்முறையைத் தூண்டியதாக கவிஞர் வரவர ராவ், வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெல்டும்டே உட்பட பலர் என்.ஐ.ஏ-வால் கைது செய்யப்பட்டனர். அவர்களில் சிலருக்கும் மட்டும் ஜாமீன் கிடைத்திருக்கிறது. மற்றவர்கள் இன்னும் சிறையில் இருக்கிறார்கள். அதே வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்டேன் சுவாமி, மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது.

பீமா கோரேகான்

அந்தக் குற்றச்சாட்டை

ஸ்டேன் சுவாமி

உறுதியாக மறுத்தார். ஸ்டேன் சுவாமியின் கணினியில் இருந்த ஆவணங்களின் அடிப்படையில் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால், அவரின் கணினி 'ஹேக்' செய்யப்பட்டு, அதில் போலியான ஆவணங்கள் திணிக்கப்பட்டன என்று ஸ்டேன் சுவாமியின் ஆதரவாளர்கள் கூறிவந்தனர்.

ree

இந்த நிலையில்தான், பாதிரியார் ஸ்டேன் சுவாமியின் கணினியில் பல குற்றவியல் ஆவணங்கள் திணிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்செனல் கன்சல்டிங் என்ற டிஜிடல் தடயவியல் நிறுவனம் ஒன்று தற்போது அறிக்கை அளித்திருக்கிறது.

ஸ்டேன் சுவாமி பயன்படுத்திய கணினியை அவருடைய வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தின் அனுமதியுடன் அமெரிக்காவின் உள்ள தடயவியல் நிறுவனத்துக்கு அனுப்பினர். அந்த கணினியை ஆய்வு செய்த நிறுவனம், தற்போது தனது இறுதி அறிக்கையை ஆதாரப்பூர்வமாக அளித்திருக்கிறது. 'மாவோயிஸ்ட் கடிதங்கள்' என்று குறிப்பிடப்படும் கடிதங்கள் உட்பட 44 ஆவணங்கள் ஸ்டேன் சுவாமியின் கணினியில் இருந்ததாக என்.ஐ.ஏ தரப்பு கூறியது. அந்த ஆவணங்கள், ஸ்டேன் சுவாமியின் கணினியில் ஹேக்கர்களால் 2014 -லிருந்தே டார்கெட் செய்யப்பட்டு திணிக்கப்பட்டதாக அர்செனல் கன்சல்டிங் அறிக்கை தற்போது கூறுகிறது.

பீமா கோரேகான் வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஸ்டேன் சுவாமி உள்ளிட்டோர்

மேலும், ஸ்டேன் சுவாமிக்கு தெரியாமல் ஹேக்கர்களால் அந்த ஆவணங்கள் அவரின் கணினியில் திணிக்கப்பட்டிருப்பதையும் ஆர்சேனல் கன் சல்டிங் தடயவியல் நிறுவனம் ஆதாரப்பூர்வமாக நிரூபித்திருக்கிறது. அந்த ஆவணங்களை ஒருமுறை கூட அவர் திறந்து பார்க்கவில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கை பற்றிய விவரங்கள் அமெரிக்காவில் வெளியாகும் 'வாஷிங்டேன் போஸ்ட்' பத்திரிகையில் உடனடியாக வெளியானது.

பீமா கோரேகான் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் 'நகர்ப்புற நக்சலைட்கள்' என்றெல்லாம் விமர்சிக்கப்படுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டேன் சுவாமியைப் போலவே, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்ற அனைவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று வாதிட்டுவருகிறார்கள். இந்த நிலையில், ஸ்டேன் சுவாமி மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் என்று சொல்லப்பட்டுவந்த ஆவணங்கள் பொய்யானவை, மடிக்கணனி ஹேக் செய்யப்பட்டு, பல்வேறு போலியான ஆவணங்கள் என்ற உறுதிசெய்யப்பட்டிருப்பதால், பழைய குற்றச்சாட்டுகள் மீண்டும் உயிர்பெற்றிருக்கிறது. ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகள்- செயல்பாடுகளை விமர்சிப்பவர்களை நகர்புற நக்ஸலைட்டுகள். தேசதுரோகிகள் என்று முத்திரை குத்தும்போக்கு 2018 க்கு பிறகு தலைதூக்கி கோரதாண்டவும் ஆட தொடங்கியது. அவ்வாறாக முத்திரை குத்தப்பட்டவர்களில் ஒருவரான ஸ்டேசன் சாமி மீதான குற்றச்சாட்டு ஆவணங்களாக அவருடைய மடிக்கணினியில் ஆதாரம் ஹேக்கர் மூலமாக புடுத்தப்பட்டிருப்பதும், இதனை புனோ காவல்துறையே செய்திருக்கும் உண்மையையும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதற்கு ஒன்றிய அரசும்,

என்.ஐ.ஏ.வும் என்ன பதில் சொல்லப்போகிறது? மக்கள் மத்தியில் சமூகநலப் பணிகளை தொடரும், சமூக செயல்பாட்டாளர்கள் பாதுகாக்கப்படுவார்களா என்கிற கேள்விகள் வலுவடைந்து வருவதால், என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page