top of page
Search

நாலுஆடு, ரபேல் வாட்ச்சு. வீட்டுவாடகை ரூ.3.75. லட்சமா? எங்கேயோ இடிக்கு தப்பா! சமூக வளைதள வைரல் பதிவு!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Apr 16, 2023
  • 2 min read
ree

ஆசிரியர்,மணவை, எம்.எஸ்.ராஜா...


4 ஆடு. ரபேல் வாட்ச்,௹.3.75. லட்சம் வாடகை வீடு, கார் ஆடம்பர வாழ்க்கை! எங்கேயே இடிக்கு தோ அண்ணாமலைசார்!


சமூக வளைதளத்தின் வைரல் பதிவு....




அண்ணாமலையின் ரபேல் வாட்ச் பில்லு கிடைச்சிருச்சி!


பில்லுக்குப் பின்னிருப்பதோ தமிழகம் கர்நாடகா என இரண்டு மாநிலங்களில் நடைபெறும் பரபர ஊழல் வரலாறு.

(கொஞ்சம் நீளமான பதிவு அவசியம் படிக்கவும் அனைத்து குழுக்களிலும் பகிரவும்)

பாஜக தலைவரோ இல்ல வேற யாரோ 5 , 10 லட்சத்துக்கோ அதுக்கு மேலயோ வாட்ச் வாங்குவதில் யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லை.

ree

ஆனா ரெண்டு ஆடு வச்சிருக்க ஏழை விவசாயி என்று வேஷம் போட்டு 4 லட்சம் ரூவாய்க்கு வாட்ச் வாங்கி அதுக்கு கணக்கு காட்ட முடியாம கதை சொல்லிகிட்டு இருப்பது தான் வெட்ககேடு

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அண்ணாமலை தேசப்பற்றுடன் (!?) கட்டியிருக்கும் ரபேல் வாட்ச் அவரோட சொந்த பணத்தில் வாங்கிய வாட்சே இல்லை. அது போலீஸில் வேலை பார்த்த காலத்தில் லஞ்சமாக பெற்றுக்கொண்ட திருட்டு வாட்ச்.

அந்த வாட்ச் உண்மையிலேயே SARVALOKA SERVICES-ON-CALL PRIVATE LIMITED அப்படின்ற பெங்களூர் நிறுவனத்தின் பெயரில் வாங்கப்பட்டுள்ளது! இந்த நிறுவனம் 2014ல் துவங்கப்பட்ட வீட்டு கட்டுமானம் மற்றும் ரிப்பேர் பணிகள் செய்யும் ஆன்லைன் நிறுவனம்.

இந்த நிறுவனம் பின்னாளில் விரிவாக்கம் மற்றும் நிர்வாக மாறுதல்கள் செய்யப்பட்டு HOUSEJOY என்ற பெயரில் செயல்பட ஆரம்பித்தது. ரூ.136 கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டக்கூடிய இந்த நிறுவனத்தின் COOவாக அப்போது நியமிக்கப்பட்டவர் தான் 420 ஆசாமியான சஞ்சித் கவுரவ் (Sanchit Gaurav)

இந்த சஞ்சித் கவுரவின் உள்ளடி வேலைகளால் இந்த நிறுவனத்தை துவக்கிய அர்ஜுன் குமார் மற்றும் சுனில் கோயல் ஆகியோர் அந்த நிறுவனத்தை விட்டே நிர்வாக குழுவால் வெளியேற்றப்பட்டனர் என்பது உள்ளிருந்து வரும் செய்தி!

ree

உள்ளடி அரசியல், நிறுவனத்தின் தரமற்ற சர்வீஸ்களால் கடுப்பானவர்கள் நிறுவனத்தின் மீது புகாரளித்து வந்தனர். இந்தச் சூழலில் தான் COO சஞ்சித் கவுரவ் பொருளாதார குற்றவாளியாக பெங்களூர் நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்டு 3 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார் ( indiankanoon.org/doc/9163051/ )

இந்த நிலையில் தான் அப்போதைய கர்நாடக (அ)சிங்கம், அண்ணாமலை அக்டோபர் 2018 பெங்களூர் தெற்கு DCP- ஆக நியமிக்கப்பட்டார். இதே காலகட்டத்தில் HOUSEJOY நிறுவனத்தின் பெயரில் பல மோசடி புகார்கள் வரத்தொடங்கின. பாதிக்கப்பட்டவர்கள் அந்த நிறுவனத்தின் முன் போராட்டங்களும் நடத்தினர்.

DCP அண்ணாமலையின் காவல் எல்லைக்குள் தான் இது எல்லாமே நடக்குது. மீடியாக்களில் வெளியாகும் செய்திகளையும், பாதிக்கப்பட்டவர்கள் தரும் புகார்களையும் மழுங்கடிக்க நம்ம கிரிமினல் CEO அப்போதைய கர்நாடக ABVP பொறுப்பாளர், தற்போதைய அதே பெங்களூர் MPயான ‘தேஜஸ்வி சூர்யா’வை அணுகுகிறார்

இவ்வாறு நெருங்கிய நண்பர்களான தேஜஸ்வியும் சஞ்சித்தும் சஞ்சித்தின் HOUSEJOY நிறுவனத்திற்கு எதிராக கொடுக்கப்படும் புகார்களை கண்டுகொள்ளக்கூடாது என்பதற்காகவே தேஜஸ்வி சூர்யா மூலம் அப்போதைய DCP அண்ணாமலைக்கு கொடுக்கப்பட்ட வாட்ச் தான் இந்த ‘ரபேல் வாட்ச் BR03-94’!

இதுல இன்னொரு விசயம் என்னன்னா தேஜஸ்வி சூர்யாவும் இதே வாட்சை கட்டிக் கொண்டிருந்தவர் தான்! மோசடி பேர்வழியிடம் லஞ்சமாக பெற்ற வாட்ச்சை கையில் கட்டிக்கொண்டுதான் அண்ணாமலை எல்லோருக்கும் தேசபக்தி பாடம் எடுக்கிறார்.


ஓஓஓஓஓஓஓ.......அரசியல்லே இதெல்லாம் சகஜமாப்பா....

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page