தேவரின் தங்க கவசம் விவகாரம்! நீதிமன்ற தீர்ப்பின்படியே அரசு செயல்படும்! அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்!!
- உறியடி செய்திகள்

- Oct 23, 2022
- 1 min read

மதுரை விமான நிலையத்தில் பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர், தி.மு.கழக மாவட்ட செயலாளர்,ராஜகண்ணப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது.........
பசும்பொன் தேவர் ஜெயந்தி முன்னேற்பாடுகள் உரியமுறையில் செய்யபட்டு வருகிறது.பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சி முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குள் வருவதால் ஏற்பாடுகள் அனைத்தும் சீராக நடைபெற்று வருகிறது மாவட்ட ஆட்சியர் மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் திமுக கழகத்தினுடைய, நிர்வாகிகள். தோழர்கள் அனைவரும் கலந்து கொள்கிறார்கள். தேவரின் தங்க கவசம் அதிமுக தரப்பினராக உள்ளார்கள்.....

தேவரின் தங்க கவசம் குறித்த வழக்கு வருகின்ற 26 ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் வரஉள்ளது நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கிறதோ அதன்படி நடந்து கொள்வார்கள். அரசும்,நீதிமன்ற உத்தரவின் படி செயல்படும். தேவர் ஜெயந்தி முன்னிட்டு வாகன அணிவகுப்பு உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகள் நிகழ்வது தடுக்கும் வகையில்,அந்தந்த கிராமங்களில் இருந்து வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.,
தேவர் குருபூஜைக்கு மக்கள் சென்று வர தனி வழி., முக்கிய பிரமுகர் செல்வதற்கு தனி வழி., என்று, எந்தவித பிரச்சினையும் இல்லாமல் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மண்டபங்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்ப்பதற்கும்., வாகனங்கள் நிறுத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதில்எந்தவித குறைபாடும் இருக்காத வகையில் பணிகள்செய்யப்பட்டு வருகின்றது....
தி.மு.கழகத் தலைவர் தமிழக முதல்வர்.தளபதி மு.க.ஸ்டாலின், மற்றும் சமுதாயத் தலைவர்களும், மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டவர்கள் வந்த செல்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் தேவர் குருபூஜையில் முதல்வர் கலந்துகொள்வது பற்றியசுற்றுப்பயணம் விவரம் இன்னும் வரவில்லை சுற்றுப்பயணம் அறிக்கை வந்தவுடன் தேவர் ஜெயந்திக்கு முதல்வர் வருகை தருவது பற்றி தெரியும்.
இவ்வாறாக அவர் கூறினார்.




Comments