சபாஷ் கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு!பா.ஜ.க. மோசடி கட்சி! சுப்பிரமணியசுவாமி ட்விட்டால் பரபரப்பு!
- உறியடி செய்திகள்

- Jun 14, 2023
- 2 min read

பாஜக ஒரு மோசடி கட்சி! செந்தில்பாலாஜி கைது பற்றிய சு.சாமி ரீட்வீட் - சர்ச்சை!
சுப்பிரமணியசுவாமி அதிரடி!
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை இன்று அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. இந்நிலையில் தான் பாஜகவை ஒரு மோசடி கட்சி எனக்கூறி சிரிப்பை அடக்க முடிக்கவில்லை என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ரீட்வீட் செய்து இருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. சமீபத்தில் இவரது சகோதரர் அசோக், உறவினர்கள் நண்பர்கள், நெருக்கமான ஒப்பந்ததாரர்கள், தொழிலதிபர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை நடந்தது.
இதையடுத்து நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை, கரூர் வீடுகளில் சோதனை நடத்தினர். மேலும் தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்து சோதனை மேற்கொண்டனர்.
செந்தில் பாலாஜியின் வீடு, அலுவலகத்தில் 17 மணிநேரம் சோதனை நடந்து முடிந்தது. இதையடுத்து செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அப்போது நெஞ்சுவலி எனக்கூறி அவர் துடித்தார். இதையடுத்து செந்தில் பாலாஜியை சென்னை ஒமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதையடுத்து இன்று நீதிபதி மருத்துவமனைக்கு சென்ற நிலையில் செந்தில் பாலாஜிக்கு 28 ம் தேதி நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டார்.இதன்மூலம் செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட வேண்டும். ஆனால் அவர் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளார். இதற்கிடையே தான் வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பிலும் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. மேலும் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு நாளைஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தான் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமின்றி செந்தில் பாலாஜியை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என அமலாக்கத்துறையும் மனு செய்துள்ளது. இந்த 2 மனுக்கள் மீதான இறுதி முடிவு நாளை எடுக்கப்பட உள்ளது.
இந்நிலையில் தான் செந்தில் பாலாஜி கைதுக்கு முதல்வர் ஸ்டாலின், திமுக அமைச்சர்கள், திமுக எம்பிக்கள் மற்றும் திமுகவின் கூட்டணி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் பழிவாங்கும் நடவடிக்கையாக மத்திய பாஜக அரசு அமலாக்கத்துறை மூலம் செந்தில் பாலாஜியை கைது செய்திருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதேபோல் காங்கிரஸ், ஆம்ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், மகாராஷ்டிரா மாஜி முதல்வர் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா உள்பட பல கட்சிகளும் இதனை பழிவாங்கும் நடவடிக்கை என்றும், ஜனநாயகத்துக்கு எதிரான செயல் எனவும் விமர்சித்து உள்ளன.

இதற்கிடையே தான் செந்தில் பாலாஜியின் கைது குறித்து பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி பதிவு தற்போது ட்விட்டரில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சுவாமில்லியன் என்ற பெயரில் ட்விட்டரை பயன்படுத்தும் ஒருவர்,
அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சியின் காலத்தில் நடந்த முறைகேட்டில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். பாஜக ஒரு மோசடி கட்சியாக உள்ளது'' என ட்வீட் செய்துள்ளார்.
இந்த ட்வீட்டை சுப்பிரமணியன் சுவாமி தனது பக்கத்தில் ரீட்வீட் செய்துள்ளார். பொதுவாக ட்விட்டர் பக்கத்தில் இன்னொருவரின் ட்விட்டை ரீட்வீட் செய்வது என்பது அதில் உள்ள கருத்தை ஏற்பது போன்றதாகும். அந்த வகையில் பார்த்தால் பாஜக ஒரு மோசடி கட்சியாக இருக்கிறது என்பதை சுப்பிரமணியன் சுவாமி ஏற்றுக்கொண்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சுப்பிரமணியன் சுவாமி சமீபகாலமாக ஒன்றிய பாஜக அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் தான் சுப்பிரமணியன் சுவாமி இந்த ட்விட்டர் பதிவை ரீட்வீட் செய்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது!
இருப்பினும் கூட இதில் சின்ன முரண்பாடு உள்ளது. அதாவது அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது 81 பேருக்கு அரசு வேலை தருவதாக கூறி ரூ.1.62 கோடி மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. இந்த முறைகேடு, பணமோசடி தொடர்பாக தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளனர்.
செந்தில் பாலாஜியின் கைதுக்கு காரணமாக உள்ள முறைகேடு புகார் கடந்த 2011-2016 காலக்கட்டத்தில் நடந்தது. அப்போது தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடந்தது. முதல்வராக ஜெயலலிதா இருந்தார். அந்த சமயத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோதுதான் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தது என்பது நினைவில் கொள்ள வேண்டியது முக்கிய விஷயமாகும்.
சராம்




Comments