அரசுகூட்டுறவுசங்கங்கள் மூலம்பல்வேறுதிட்டங்களை செயல்படுத்துகிறது! அமைச்சர் தா. மோ. அன்பரசன் பேச்சு!!
- உறியடி செய்திகள்

- Nov 22, 2022
- 2 min read

தமிழ்நாட்டில்,கூட்டுறவு வரலாற்றினை போற்றிடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி துவங்கி 20 ஆம் தேதி வரை கூட்டுறவு விழா கொண்டாடப்படுவது வழக்கம். அவ்வகையில் தற்போது கூட்டுறவு அமைப்புகளின் வளர்ச்சியும் அவற்றின் எதிர்காலமும் எனும் தலைப்பில் 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை 7 நாட்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பில் கொண்டாடப்பட்டது.
.
இந்நிலையில் 69 ஆவது கூட்டுறவு வார விழா காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ வரவேற்புரை ஆற்றினார். காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் மேலாண்மை இயக்குனருமான முருகன் திட்ட விளக்க உரையாற்றினார்.....
விழாவில் தமிழக சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா மோ அன்பரசன் கலந்து கொண்டு மாவட்ட அளவில் சிறந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு கேடயமும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும், மற்றும் கூட்டுறவு துறை வார விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார், பின்னர் விழாவில் அவர் பேசியதாவது........

முதன்முதலாக 1984 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் திருவள்ளுவர் ஒரூங்கிணைந்த மாவட்டத்தில் கிராமத்தில் தான் முதல் விவசாய சேவை கூட்டுறவு சங்கம் என்ற பெயரில் துவங்கப்பட்டது என்பது நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கின்றது. இதே ஆண்டில் நகர மக்களின் மேம்பாட்டுக்காக காஞ்சிபுரத்தில் முதல் நகர கூட்டுறவு வங்கி துவங்கப்பட்டது.
தற்போது வரை வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றது. எங்கும் கூட்டுறவு எதிலும் கூட்டுறவு என்று கூறி இத்துறையில் பலவிதமான மக்கள் பயன்பெறக்கூடிய திட்டங்களை ஏற்படுத்தி தந்த முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் வழியில் ஏழை எளிய மக்கள் மற்றும் சமுதாயத்தில் பின்தங்கிய மக்கள் விவசாய பெருமக்கள் உள்ளிட்டோருக்காகவே கூட்டுறவு அமைப்புகளை தி.மு.கழக அரசு முதல்வர் தளபதியின் தலைமையில் பல்வே று திட்டங்களை செயல்படுத்திவருகிறது.
எனவே இதனை பயன்படுத்தி அனைவரும் தங்கள் வாழ்வாதரத்தை உயர்த்திக் கொண்டு, கூட்டுறவு சங்கங்களையும் தொடர்ந்து உங்களுக்கு உதவிடும்வகையில் நடந்துகொள்ள வேண்டும். கூட்டுறவு சங்கங்கள் மூலம் வாங்கும் கடனை உரிய காலத்திற்குள் செலுத்தி பயன்பெற வேண்டும்......

தி.மு.கழக தலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர், தளபதி, மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல் நகை கடன்,பயிர் கடன், மற்றும் சுய உதவி குழுக்களின் கடன் ஆகியவற்றையும் முறையாக தள்ளுபடி செய்தது, கழகத் தலைவர் தளபதி தலைமையிலான, தி.மு.கழக அரசின் வரலாற்று சிறப்பாகும் இவ்வாறாக அவர் பேசினார். .
விழாவில் தொடர்ந்து, அமைச்சர், தா.மோ. அன்பரசன், 116 மாற்றுத் திறனாளிகளுக்கு 42 லட்சமும், பயிர் கடனாக 124 நபர்களுக்கு 81 . 59 லட்சமும், 114 நபர்களுக்கு கால்நடை பராமரிப்பு கடனாக , 29.32 லட்சம், மகளிர் சுய உதவிக்குழு கடனாக 40 குழுக்களுக்கு சுமார் ஒரு கோடி 67 லட்சத்து 65 ஆயிரம் இதேபோல் வீட்டு அடமான கடன், சிறுவணிக கடன், பண்ணை சராக்கடன், தாம்கோ கடன் ,மகளிர் தொழில் முனைவோர் கடன் என மொத்தமாக 953 நபர்களுக்கு 4 கோடி 65 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி வி எம் பி எழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட ஊராட்சிக்கு துணை தலைவர் நித்யா சுகுமார், தாம்பரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம், கூட்டுறவுத் துறை அதிகாரிகள்,தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர்கள், விற்பனையாளர்கள் உட்பட பலரும் விழாவில் கலந்து கொண்டனர்......




Comments