ஆளுநர் ரவியின் பேச்சு! தமிழ்நாட்டு மக்களின் இறையாண்மைக்கு எதிரானது! அமைச்சர் கீதாஜீவன் கண்டனம்!!
- உறியடி செய்திகள்

- Apr 7, 2023
- 1 min read

தமிழக ஆளுநராக பொறுப்பு வகிக்கும் ஆர்.என்.ரவியின் பேச்சு, தூத்துக்குடி மட்டுமின்றி, தமிழ்நாட்டு மக்களுக்கும். இறையாண்மைக்கும் எதிரானது! கண்டனத்திற்குறியது என்று தூத்துக்குடி மாவட்ட தி.மு.கழகச் செயலாளர். அமைச்சர். கீதா ஜீவன் கூறியுள்ளார்....


தமிழக மக்களின் கள போராட்டங்கள், சட்ட போராட்டங்கள் என்று மூலம் சட்ட ரீதியாக நீதிமன்றம் வாயிலாக அந்த வேதாந்தாவின் ஆலை மூடப்பட்டது என்பதை கூட அறியாத ஆளுநரா ஆர்.என் ரவி?
மக்களையும் நீதிமன்றத்தையும் அவமதிக்கும் வகையில் பேசுவது அரசியமைப்புக்கு எதிரானது என்பது கூட தெரியாதவரா?
2009 – 10 ஆண்டில் ரூ. 5 கோடி, 2013-14 ஆண்டில் ரூ 15.00 கோடி என்று காசோலை வாயிலாக நன்கொடை பெற்ற பாஜக, அதன் பின்னர் எவ்வளவு பணம் தேர்தல் பத்திரம் மூலம் பெற்றார்கள். அந்த பணத்திற்காக ஆர்.என்.ரவி தமிழ்நாட்டு மக்களின் இறையாண்மை யை கொச்சைபடுத்துகிறா?
பாஜக ஆளும் கோவா மாநிலத்திலும் வேதாந்தா குழுமத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறதே. அதை பற்றி மூடிமறைத்துவிட்டு அதுகுறித்து ஆர்.என்.ரவிபேசாதது ஏன்?

பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்திலும் வேதாந்தா குழுமத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறதே அதை பற்றி பேசதாதது ஏன்?
பா.ஜ. நண்பர்கள் அதானியை தொடர்ந்து வேதாந்தா குழுமமும் வீழ்ச்சியை நோக்கி செல்வதை பொறுக்க முடியாமல் புலம்புகிறீரா ஆர்.என்.ரவி?
தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான ஆன்லைன் ரம்மியால் பா.ஜ.க. நண்பர்கள் பாதிப்படைவார்கள் என்பதற்காக அந்த சட்டத்தை அங்கீகரிக்கவில்லை என்பதை போல! இப்போது வேதாந்தா அகர்வாலுக்கு குரல் கொடுக்கிறீரா ஆளுநர் ஆர்.என் ரவி?
என்பதை நாகரீகமாக GO BACK என்று சொல்கிறோம்.
ஆர் என்.ரவி, வரம்பு மீறி பேசுவதை நிறுத்த வேண்டும்
, அரசியல் அமைப்பு சட்டத்தை மதிகாமல் பேசுவதை திரும்பபெறவேண்டும் என்கிற கண்டங்கள் தமிழ்நாட்டில் வேகமெடுக்கத்தொடங்கியுள்ளது......

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட தி.மு.கழக செயலாளர் தமிழ்நாடு சமூக நலன், மகளீர் உறிமைத்துறை அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில்....
தமிழ்நாட்டு மக்களின் நலனில் அக்கரையில்லாமல், நீட், ஆன்லைன் சூதாட்டம் உள்ளிட்ட 14 க்கும் மேற்பட்ட தீர்மானங்களை தமிழ்நாட்டு மக்களின் எதிர்காலம்,வாழ்வாதரத்துடன் விளையாடும் வகையில் நிறுத்தி முட்டுகட்டையாய் அமர்ந்திருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி தூத்துக்குடி மக்களின் ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக தன்னிச்சையாக கொதித்தெழுந்து நடத்திய அறப்போரட்டம் குறித்து முழுமையாக அறிந்துகொள்ளாலாம், நீதிமன்ற, அரசியலமைப்பு, சட்டத்தை அவமதிக்கும் வகையிலான விமர்சனங்களும், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கெதிராக நடந்துகொள்வதும் கண்டனத்துக்குறிய செயலாக உள்ளது....
இத்தகைய செயல் தூத்துக்குடி மக்கள் மட்டுமின்றி, தமிழ்நாட்டு மக்களின் வன்மையான, கடும் கண்டனத்துக்குரியது...
இவ்வாறாக அவர் கூறியுள்ளார்.




Comments