ஆளுநரா! ஆர்.எஸ்.எஸ். தொண்டரா? ஆர்.என்.ரவியின் சனாதான கருத்துகளுக்கு!! தொல்.திருமாவளவன் கண்டனம்!!
- உறியடி செய்திகள்

- Oct 31, 2022
- 1 min read

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இல்லை, ஆர்எஸ்எஸ் ரவி என்று நான் ஏற்கனவே பலமுறை சொல்லி இருக்கிறேன். அவர் வெளிப்படையாகவே ஆர்.எஸ்.எஸ் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார். தமிழக அரசுக்கெதிராக செயல்படுகிறார்என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்........
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இந்தச் சம்பவம் குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் சர்ச்சையை கிளப்பும் வகையிலான பேசியதால் வீண் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, சென்னையில் செய்தியாளர்களிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்.தொல்.திருமாவளவன்
கூறியதாவது........

'நவம்பர் 1ஆம் தேதி மொழி வழி மாநிலம் பிரிந்ததால் அந்த நாள் மொழி வழி தேசிய உரிமை நாளாக கடைபிடிக்கப்பட்டு, அன்று விசிக சார்பில் 3 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதுவரை சிங்கள கடற்படையினர் தான் தாக்குதல் நடத்தி வந்தனர். இப்போது இந்திய கடற்படையினர் நடத்திய தாக்குதலால் வீரவேல் என்பவர் பாதிக்கப்பட்டு,சிகிச்சை பெற்று வருகிறார்........
இந்திய கடற்படையின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்தும், அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற குழு குடியரசு தலைவரிடம் வழங்கிய அறிக்கையில் அலுவல் மொழி குறித்த அறிக்கையின்படி, இந்தி. பேசாத பிற மாநிலங்களில் இந்தியை திணிக்கிற முயற்சியை கண்டிக்கும் வகையிலும், மாநில உரிமைகளை தொடர்ந்து பறித்து வருகிற பாஜக அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளோம்.......

சமீபத்தில் ஊடகவியலாளர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். அது மிகுந்த வேதனை அளிக்கிறது. ஊடகவியலாளர்களின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். இது போன்ற அவமதிப்புகள் ஏற்புடையது அல்ல. ஊடகவியலாளர்களின் உணர்வுகளை மதித்து தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தன் கருத்துக்கும், செயலுக்கும் வருத்தம் தெரிவிப்பார் என்று நம்புகிறேன்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இல்லை, ஆர்எஸ்எஸ் ரவி என்று நான் ஏற்கனவே பலமுறை சொல்லி இருக்கிறேன். அவர் வெளிப்படையாகவே ஆர்.எஸ்.எஸ் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார். .........

அவர் என்ன பொறுப்பில், பதவியில் இருக்கிறார் என்பதையெல்லாம் மறந்துவிட்டு ஆர்.எஸ்.எஸ் தொண்டராகவே கருத்துகளைப் பேசி வருகிறார்.
பதவியை மதிப்பதில்லை
மாநில அரசின் சட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார். மாநில அரசையும் அவர் பொருட்படுத்துவதில்லை. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களை அவர் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. தமிழக ஆளுநரின் போக்கு வேதனை அளிக்கிறது. அவர் தான் வகிக்கும் பதவியை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
தேசியக் கொடியை நாம் ஒன்றாக வைத்திருக்கிறோம். தேசிய கீதத்தை ஒன்றாக வைத்திருக்கிறோம். அரசமைப்புச் சட்டத்தை ஒன்றாக வைத்திருக்கிறோம். ஆனால் அந்தந்த மாநிலங்கள் தனித்து இயங்க அரசமைப்புச் சட்டமே அனுமதி அளித்திருக்கிறது. அதற்கு எதிராக வும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசுக்கெதிராகவும்,ஆளுநர் ரவி பேசியும்,செயல்பட்டும் வருகிறார்.
இவ்வாறாக அவர் கூறினார்....




Comments