பெரும் எதிர்பார்ப்பிலிருந்த! குருபூஜை தங்க கவசம் !! யாருக்கு? உயர்நீதிமன்ற கிளை அதிரடி தீர்ப்பு!!!
- உறியடி செய்திகள்

- Oct 26, 2022
- 1 min read

குரு பூஜை' தங்கக் கவசம் யாருக்குச் சொந்தம்...? - உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
கடந்த 2014 ஆம் ஆண்டு அதிமுக பொதுச்செயலாளர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முத்துராமலிங்க தேவர் கோவிலில் உள்ள தேவர் சிலைக்கு அணிவிக்க தங்கக் கவசம் ஒன்றை வழங்கியிருந்தார்.
தேவர் ஜெயந்தி தினங்களில் மட்டும் அந்த தங்கக் கவசமானது தேவர் சிலைக்கு சாற்றப்படும். மற்ற நேரம் அவை மதுரையில் உள்ள வங்கி லாக்கரில் வைக்கப்படும்.
இந்நிலையில் தற்பொழுது அதிமுகவில் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே ஒற்றைத் தலைமை தொடர்பாக சிக்கல்கள் ஏற்பட்டு இரு அணிகளாக செயல்பட்டு வரும் நிலையில், அந்த தங்கக் கவசத்தை வங்கி லாக்கரில் இருந்து எடுத்து தேவர் சிலைக்கு சாற்ற யார் பொறுப்பேற்பது என்ற சிக்கல் அதிமுகவில் உருவெடுத்துள்ளதது......
இரு தரப்பினரும் மாறி மாறி அதற்கான உரிமையைக் கோரி வந்த நிலையில், இது தொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று மூன்று மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், சிறிது தாமதத்திற்குப் பிறகு தற்போது தீர்ப்பானது வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தங்கக் கவசத்தை ஓபிஎஸ்,ஈபிஎஸ் உள்ளிட்ட யாருக்கும் வழங்காமல் வருவாய்த் துறையினரிடம் வழங்கவும், காவல்துறை எஸ்.பி.தலைமையில் விழாவுக்கு எடுத்துச் சென்று, பின்னர் மீண்டும் வங்கி லாக்கரில் பாதுகாப்புடன் கொண்டுவந்து வைக்கவும் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
மேலும் எடப்பாடி ஆதரவாளர் திண்டுக்கல் சீனிவாசன் முறையீட்டு மனுவும், ஓ.பி.எஸ். மனுவின் காரணமாக தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த ஆண்டு அதிமுகவைச் சார்ந்த எந்த அணியும் தங்கக் கவசத்தைப் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து எடப்பாடி விழாவில் பங்கேற்பதை தவிர்த்து, சென்னையிலுள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யவுள்ளதாகவும், அதற்கான அனுமதி-பாதுகாப்பு கேட்டு சென்னை காவல் ஆணையரிடம் மாஜி ஜெயக்குமார் நேரில் மனு கொடுத்துள்ளதாகவும் தெரிகிறது.




Comments