அரை,நூற்றாண்டுகோரிக்கை, அக்னிஆற்றின் குறுக்கேபாலம்!! அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்!!
- உறியடி செய்திகள்

- Apr 28, 2023
- 1 min read

ஆசிரியர் மணவை எம்.எஸ்.ராஜா..
தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி அரை நூற்றாண்டு கோரிக்கையான அக்னி ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கும் பணிக்கு அமைச்சர் சிவ.மெய்யநாதன் அடிக்கல் நாட்டி பணியை துவக்கிவைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தவர் வக்கோட்டை, ஆத்தங்கரை விடுதி அக்னி ஆற்றின் குறுக்கோ, பாலம் கட்டித்தர கோரி சுற்றுப் பகுதி மக்கள் கடந்த 50 ஆண்டுகாலமாக கோரிக்கை விடுத்து விடுத்து வந்தனர்.
எல்லோருக்கும் எல்லாம் என்று கிற இலக்கை நோக்கிய திராவிட மாடல் ஆட்சியை முன்னெடுத்து மக்களின் உணர்வுகளுக்கும், அடிப்படை மற்றும் இதர தேவைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு பணியாற்றிவரும் தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு, சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் தமிழ்நாடு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.மெய்யநாதன் வழியாக கொண்டு சென்றாகள்.
இந்நிலையில் சுந்தர்வகோட்டை ஆத்தரங்கரை விடுதி அக்னி ஆற்றின் குறுக்கே 815 லட்சங்கள் மதிப்பீட்டில் பாலம் கட்ட முதல்வர் உத்தரவிட்டார்.

இந்நிலையில் ஆற்றின் குறுக்கே கட்டப்படும் பாலம் கட்டுமானப்பணி துவக்க நிகழ்வு நடைபெற்றது. இதில் அமைச்சர் சிவ-மெய்யநாதன் நேரில் கலந்துகொண்டு கட்டுப் பணிக்காண அடிக்கல்லை நாட்டி பணிகளை தொடங்கிவைத்தார்.
முன்னதாக தொடக்கவிழாவுக்கு வந்த அமைச்சர் சிவ.மெய்யநாதனுக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பளித்தார்கள்..

சுந்தர்வ கோட்டை எம்.எல்.ஏ.சின்னத்துறை, தி.மு.கழக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன், ஒன்றியக்குழுத் தலைவர் கார்த்திக், தி.மு.கழக ஒன்றிய செயலாளர்கள் பரமசிவம், முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர். மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள்.




Comments