மழைபாதிப்பு நிவாரண உதவி!கீழ்பவானிஆற்றுவாய்க்கால்சீரமைக்கவும் அமைச்சர்.சு.முத்துசாமி வலியுறுத்தல்!!
- உறியடி செய்திகள்

- Dec 11, 2022
- 2 min read

மணவை, எம்.எஸ்.ராஜா.
ஈரோடு மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி, ஆறுதல் கூறி மக்கள் குறைகளை கேட்டறிந்து,கீழ்பாவாணி ஆற்றுவாய்க்காலில் ஆய்வு மேற்கொண்டு வாய்க்கால், உடைப்பையும் துரிதமாக சரிசெய்யவும் இன்று அமைச்சர் சு.முத்துச்சாமி நேரில் ஆய்வு செய்து அரசு அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.......
தென்மேற்கு வங்கக்கடல். பகுதியில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் புயல் கடந்த சில தினங்களாக தமிழக மக்களை மிரட்டி வந்தது. இந்த மாண்டஸ் புயல் நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு மாமல்லபுரம் அருகே புயலின் முதல் பகுதி கரையை தொட்டது. இது நேற்று அதிகாலை 2.30 மணிக்கு கரையை கடந்தது. ஆனாலும், 4 மணி வரை புயல் காற்று கடுமையாக வீசியது. புயல் கரையை கடப்பதற்கு முன்பாக இரவு 6 மணி முதல் பலத்த சூறாவளி காற்று அடித்து நொறுக்க தொடங்கியது. சுமார் 75 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. கரையை கடந்த நேரத்தில் காற்றின் வேகம் இன்னும் அதிகரித்தது. அதே நேரத்தில் பலத்த கனமழையும் இடை, இடையே பெய்து கொண்டிருந்தது. மேலும் பல்வேறு மாவட்டத்தில் புயல் காற்றின் தாக்கம் அதிகமாக இருந்தது......

நான்கு பக்கமும் சுழன்று, சுழன்று . பலத்த சூறாவளி காற்று வீசிய போதிலும் பெருத்த சேதம் எதுவும் ஏற்படவில்லை. அரசு எடுத்த முன்எச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பெரும் பாதிப்புகள் தவிர்க்கப்பட்டது. இந்த நிலையில் மக்களை அச்சுறுத்தி வந்த மாண்டஸ் புயல் கரை கடந்தாலும் தமிழகத்தில் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல், மழையால் தமிழகத்தில், குளம், குட்டைகள், ஏரிகள் நிரம்பி, குடியிருப்பு, சாலைகள், தரைப்பாலங்களில் மழை வெள்ளநீர் உபரியாக சென்று குடியிருப்புப் பகுதிகளில் சூழல தொடங்கியது, இதனை தடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் துரிதமாக மேற்க்கொள்ள உத்தரவிட்டதையடுத்து, நிவாண, மீட்பு, முன்னெச்சரிச்சை நடவடிக்கைகளும். தீவிரப்படுத்தப்பட்டு அதற்கான பணிகளும் தமிழக அரசால் விரைவாக நடைபெற்று வருகிறது...

இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில், தி.மு.கழகத் தலைவர்,தமிழ்நாட்டில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் நடவடிக்கைகள் தீவிரப்படுத்துள்ளது.
ஈரோடு மாவட்டம், கூரப்பாளையம், தோப்பானி காலனி பகுதியில், புயல், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தி.மு.கழகத் தலைவர்,தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, இன்று.ஈரோடு மாவட்ட தி.மு.கழக செயலாளர் தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துச்சாமி நேரில் சென்று அப்பகுதி மக்களுக்கு அரிசி, உள்ளிட்ட நிவாரணப் பொருட்க்களை.வழங்கினார். தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக செய்து தரவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.......

இதனை தொடர்ந்து கீழ்பவானி பாசன வாய்க்காலில், மேட்டுக்கடைவாய்க்கால்மேடு பகுதியில் ஏற்பட்ட வாய்க்கால் உடைப்பு பற்றி அறிந்த அமைச்சர் சு.முத்துச்சாமி உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து சென்று ஆய்வு செய்து, வாய்க்கால் உடைப்பை உடனடியாக சரி செய்யவும், பணிகளை துரிதபடுத்தி, விரைவாக முடித்திடவும் வலியுறுத்தினார்.
மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை, வருவாய்துறை, சுகாதார அதிகாரிகள், தி.மு.கழக நிர்வாகிகள் உடன் சென்றார்கள்.




Comments