top of page
Search

சூடாகும்ரபேல்வாட்ச்!ஆன்லைன்ரம்மிதடைக்கு குரல் எழுப்பாதது ஏன்? அண்ணாமலைக்கு கோவை செல்வராஜ் கேள்வி?

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Dec 19, 2022
  • 3 min read
ree

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடைக்காக குரல் எழுப்பாதது ஏன்? என்று முன்னால் எம்.எல்.ஏ.கோவை, செல்வராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்....


இது தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

திமுகவினர் என்னுடன் ஊழல் குறித்து விவாதிக்க விரும்புவதால், நான் அதை எதிர்கொள்ள ஆவலுடன் இருக்கிறேன். நான் தமிழ்நாடு பாஜக தலைவராக பொறுப்பேற்றதுக்கு முன்பு, மே மாதம் 2021ல் வாங்கிய எனது ரபேல் கடிகாரத்தின் விவரங்கள், அதன் ரசீது மற்றும் எனது வாழ்நாள் வருமான வரி அறிக்கைகள், 10 ஆண்டுகால எனது வங்கிக் கணக்குகளின் பரிவர்த்தனைகள் (எனது ஒவ்வொரு வருமானமும் காட்டப்படும்), ஆகஸ்ட் 2011 முதல் ஐபிஎஸ் அதிகாரியாக நான் பொறுப்பேற்றது முதல் ராஜினாமா செய்யும் வரை ஈட்டிய வருமானம் , எனக்கு சொந்தமான அசையும் அசையா சொத்துகளின் விவரங்கள், என்னிடம் உள்ள ஆடு மற்றும் மாடுகளின் எண்ணிக்கை என அனைத்தையுமே விரைவில் பிரதமர் நரேந்திரமோடியை போற்றும் நம் தமிழக மக்களை சந்திப்பதற்காக மாநிலம் முழுவதும் நான் மேற்கொள்ளவிருக்கும் பாதயாத்திரையின் முதல் நாளில் வெளியிடுவேன். அன்றைய தினம் நான் பத்திரிக்கையாளர்களை சந்தித்து மேல் குறிப்பிட்ட அனைத்து விபரங்களையும் பொதுவெளியில் வெளியிட உள்ளேன்.

நான் அறிவித்ததை விட ஒரு பைசா அதிகமான சொத்தை யாரேனும் கண்டுபிடித்தால், எனது சொத்துக்கள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்க நான் தயார்.....

ree

இதே போல வருமான விவரங்களையும் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விவரங்களையும் திமுகவினர் மற்றும் திமுக தலைவர்கள் தமிழ்நாடு சகோதர சகோதரிகளின் முன்னிலையில் வெளியிட தயாரா?.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக சமூக வலைதளங்களில், நெட்டிசன்கள்- தி.மு.கழக ஆதரவாளர்- இளைஞர்கள் உள்ளிட்டவர்கள், பதிவிட்டுள்ளதில் கூறியிருப்பதாவது...

பிரான்ஸ் நிறுவத்திற்காக, உலகில் வெறும் 500 கை கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட, 5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள ரஃபேல் வாட்ச் ஐ, வெறும் 4 ஆட்டுக்குட்டி மட்டுமே சொத்தென சொல்லும் ஆட்டுக்குட்டி அரசியல்வாதி, அண்ணாமலை, கட்டியிருக்கிறார். அவர் வாங்கின ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட்டால், ஏழை எளியவர்கள், தமிழக மக்கள் அனைவரும் வாங்கி மகிழலாம்.

வெளிநாட்டு வாட்சை கட்டியிருக்கும் தேசியவியாதி, மன்னிக்க தேசியவாதி, ஆடு வளர்த்து சேர்த்து 5 லட்ச ரூபாய் வாட்ச் கட்டும் அளவுக்கு உயர்ந்தது எப்படி?

வார்ரூம் வழியாக தொழிலதிபர்களை மிரட்டினால் இப்படியெல்லாம் பணம் கிடைக்குமா?

ree

கடிகாரம் வாங்கிய ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட முடியுமா? இல்லை வழக்கம்போல ஏமாத்து, பம்மாத்து, வேலை தான் வருமா?

மோடி யின் ஊழல் பணத்தில் எழுபதாயிரம் கோடி ரூபாய் செலவு செய்து திமுக வை அழிக்க அவதூறு பரப்ப செலவு செய்த கணக்கை முதலில் ஆட்டுக் குட்டி அண்ணாமலை கணக்கு காட்ட முடியுமா?

கட்சி நடத்தற. எல்லோரும் ஆட்சியை பிடிக்க தான் ஆசைப்படுவது இயற்கை. இதுல என்ன தவறு?, அதுல ஒரு ஞாயமிருக்கு. அது தப்புமில்லை. எல்லாரும் அப்படி தான் செயல்பட முடியும்.

ஆனா, நாங்க ஊழலுக்கு நெருப்பு உளுத்துபோன பருப்பு ன்னு உருட்ட கூடாது. அது உண்மையுமில்லை. பச்சை பொய் அது.

அண்ணாமலை மாநில தலைவரா பொறுப்பேற்ற பிறகு மட்டும், மோடியின் தமிழ்நாடு வருகை, அமித்ஷா வருகை, மத்திய அமைச்சர்கள் வருகைன்னு வெறும் வரவேற்புக்கு மட்டுமே ஆன செலவு சர்வ சாதாரணமா 500 கோடியை தாண்டும் என்பதெல்லாம் மிக இயல்பாகவே வெளிப்படையாகவே தெரியும்.

வெறுமனே இந்த 500 கோடி ஏதுன்னு மட்டும் சொல்லுடா பார்ப்போம்

இது இல்லாம, 2021 தேர்தல்ல, 20 தொகுதியிலயும் ஓட்டுக்கு 1000, அதுக்கப்பறம் நடத்துன ஒவ்வொரு பொதுக்கூட்டத்துக்கும் ரூ.300+ பிரியாணி இதுக்கெல்லாம் ஏதுடா பணம்ன்னு மட்டும் சொல்லட்டும். பார்ப்போம்

எப்படி பார்த்தாலும் சர்வ சாதாரணமா 1000 கோடி செலவு பண்ணிருப்பாரு அண்ணாமலை.

ரஃபேல்வாட்ச் க்கு ஆட்டுக்குட்டி வித்து செலவு பண்ணுனன்னு சொல்றது, நம்பற மாதியே இல்லை யே !

இந்த 1000 கோடிக்கு எலிக்குட்டி எங்கேயிருக்கீது, என்ன இது வித்தயா?

இனிமே எங்கயாச்சும் ஊழலுக்கு நெருப்புன்னு சொல்லிகிட்டு திரிஞ்சா............

சம்பளக் கணக்கை வெளியிடுகிறேன், சாம்பார் கணக்கை வெளியிடுகிறேன் என கம்பி கட்டும் கதைகளையெல்லாம் மக்களிடம் சொல்ல வேண்டாம். மக்கள் ஒன்னும் முட்டாள்கள் இல்லை,இவை அனைத்தும் ‘பல்பு’ வாங்கிய அரவக்குறிச்சி தேர்தல் மனுவிலேயே இருக்கிறது. இவர் என்ன வெளியிடுவது? யார்க்கும் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியும்.

எங்கோ போகிற ஓணானை வேட்டிக்குள் விட்டுக் கொண்டது போல ரபேல் ஊழலை மீண்டும் மக்களிடம் நினைவூட்டி கதறும் சந்தர்ப்பவாதிகளிடம் கேட்பது எளிய கேள்விதான்.

பல லட்சம் மதிப்பு கொண்ட வெளிநாட்டு கடிகாரம் கட்டுவதுதான் தேசபக்தியா? இதுதான் நீங்கள் மூச்சுக்கு, மூச்சு,அளந்துவிடும் மேட் இன் இந்தியா வா?

தேர்தலுக்குப் பிறகு வாங்கியதாகச் சொல்லிவிட்டால் ‘வேட்பு மனுவில் ஏன் கணக்கு காட்டவில்லை’ என்ற கேள்வியை தவிர்த்துவிடலாம் என ‘புத்திசாலித்தனமாக’ மே 2021 இல் வாங்கியதாகச் சொல்லும் அந்த

ஐந்து லட்ச ரூபாய் கடிகாரத்திற்கான பில் இருக்கிறதா அல்லது இனிமேல்தான் தயார் செய்ய வேண்டுமா?

அண்ணாமலை ட்விட்டர்-சமூக ஆர்வலர்கள். அரசியல் நோக்கர்களின் பனிப்போர் தற்போது அதிகரித்திருப்பது தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னால் எம்.எல்.ஏ.செல்வராஜ் கூறியதாவது...

ree

தமிழக முதல்வரின் கடும் நடவடிக்கைகளால். சட்டம்- ஒழுங்கு அமைதியாக உள்ளது. தமிழக அரசு மீது குறை. சொல்லும். பா.ஜ. அண்ணாமலை. ஏராளமான இளைஞர்களை காவு வாங்கிய, பொதுமக்களை அச்சுருத்தி வரும் ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க சட்டம் இயற்ற தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது. உண்மையிலே தமிழக மக்கள் மீதும், இளைஞர்கள் மீதும் அக்கரையிருந்தால், ஆன்லைன் சூதாட்ட சட்டத்தை கிடப்பில் வைத்துள்ள ஆளுநரை வலியிருத்தி குரல் எழுப்பத்தயாரா?

அதிமுக மாஜி அமைச்சர்களின் ஊழல் பட்டியல் என்னிடம் உள்ளது. விரைவில் அவற்றை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைத்து. மக்களுக்கு உண்மையை தெரிய வைப்பேன்....,

ree

கொரோனா காலத்தில், ஏழை - எளிய மக்களுக்கு, வங்கி கடன் வட்டியைக் கூட தள்ளுபடி செய்யாத ஒன்றிய அரசு, தங்களுக்கு விசுவாசமான, 540, தொழிலதிபர்களுக்கு, ரூ.12.50. லட்சம் கோடிகளை தள்ளுபடி செய்துள்ளது. மக்களுக்காக செயல்படாமல், தொழில் அதிபர்களான அரசாகத்தான் செயல்பட்டு வருகின்றது,. எனவே பா.ஜ.க. தமிழகத்தில் மட்டுமில்லை, ஒன்றியத்திலேயே காணாமல் போய்விடும், அதேபோல் பா.ஜ.வுக்கு பயந்து இப்போது, 4. அணிகளாக உள்ள அதிமுக, விரைவில் 8. அணிகளாக சிதறி, அடுத்த 6 மாதங்களுக்குள், அனைத்தும் காணாமல் போய்விடும். இவ்வாறாக கூறியுள்ளார்.

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page