வீட்டுவசதி வாரிய நிலங்கள் ஆக்கிரமிப்பு! விரைவில் நடவடிக்கை !!அமைச்சர் சு.முத்துசாமி தகவல்!!!
- உறியடி செய்திகள்

- Nov 18, 2022
- 1 min read
Updated: Nov 18, 2022

மணவை, எம்.எஸ்.ராஜா
தமிழக வீட்டுவசதி வாரியத்தின் நிலங்களை ஆக்கிரமித்துள்ளவர்கள், தொடர்ந்த வழக்குகளை விரைந்து முடிக்க ஒய்வு பெற்ற நீதியரசரின் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. என்று அமைச்சர் சு.முத்துச்சாமி கூறினார்....
சென்னையில், ஈரோடு மாவட்ட தி.மு.கழகச் செயலாளர், தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துச்சாமி, வீட்டுவசதி வாரியத்தின் மூலம் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது....

தமிழ்நாட்டில், தி.மு.கழகத் தலைவர், தமிழக முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான கழக அரசு வீட்டுவசதித்துறை மூலமாக பல்வேறு பல்வேறு திட்டப் பணிகளை செயல்படுத்தி வருகின்றது.....

சென்னையில் அரும்பாக்கம் சிந்தாமணி உட்பட 4 முதல்வரின் வழிகாட்டுதலின்படி திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றது. அரும்பாக்கத்தில் வணிகரீதியில் கட்டுமானபணிகள் நடைபெற்று வருகின்து.
இங்கு குடியிருப்பு ஏற்றவகையில் 19 தளங்களை கொண்டதாக தனித்தனியாக கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றது.

இந்த திட்டம் அடுத்த ஆண்டு இறுதியில் நிறைவு பெறும். இதன்மூலம் வீட்டுவசதி வாரியத்திற்கு வருவாய் கிடைக்கும் வகையில் அமையும்.
தமிழ்நாட்டில் 61. இடங்களில் கட்டப்பட்ட 10 ஆயிரம் குடியிருப்புகள் மோசமடைந்துள்ளது அவற்றை அகற்றி வீட்டுவசதி வாரியத்தின் உதவியுடன் புதிய குடியிருப்புகள் கட்ட ஆய்வு நடைபெற்று வருகிறது. இன்றைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இதே இடத்தில் 30. ஆயிரத்தும் மேலான குடியிருப்புகள் கட்ட முடியும்.....

61. இடங்களில் 11.இடங்களில் புதிதாக வீடுகள் கட்ட கோரிக்கைகள் வந்துள்ளது. இதில் 5.இடங்களில் கட்டுமான நிறுவனங்களுடன், விரைவில்குடியிருப்புதாரர்கள் ஒப்பந்தம் செய்ய வாய்ப்புகள் உள்ளது.
ஏற்கனவே கட்டப்பட்டு விநியோகமாகாலுள்ள 8. ஆயிரத்திற்கும் கூடுதலான வீடுகளை விற்பனை செய்யவும், வாடகை குடியிருப்புகளாக மாற்றவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. வீட்டுவசதி வாரிய நிலங்களில், ஆட்சேபனைகளுக்குரிய வகையில் வசிப்போருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதால், சம்மந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதை, துரிதமாக முடிக்க தமிழக முதல்வர் தளபதியாரின் ஆலோசனையின்படி ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறாக அவர் கூறினார்.




Comments