எத்தனை கண்டமுடா சாமி!ஜெயலலிதாவின் மகள் நான் ஜெ. ஜெயலட்சுமி! கொடைக்கானலில் பேட்டி!
- உறியடி செய்திகள்

- Sep 16, 2023
- 1 min read
Updated: Sep 17, 2023

மூத்தப்பத்திரிக்கையாளர.ராஜா...
எத்தனை கண்டமுடா சாமி!
ஜெயலலிதாவின் மகள் நான் ஜெ. ஜெயலட்சுமி! கொடைக்கானலில் பேட்டி!
ஜெ. மறைவிற்கு பின்னர், சசிகலா, தினகரன், உள்பட கட்சியின் முக்கிய பிரமுகர்களின் எதிர்வினைகள் ஒரு பக்கம்!
ஜெ.தீபா. ஓ.பி.எஸ்.உள்ளிட்டவர்களின் எதிர்நிலைப்பாடு ஒரு பக்கம்!
கோடநாடு கொலை, கொள்ளை தொடர்புசர்ச்சைகள்! நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு என்று அடுக்கடுக்காக நீளமாக முறைகேடு குற்றசாட்டுக்கள் ஒரு பக்கம் என்று, டெல்லிக்கும் - சென்னைக்கு பறந்து வரும் எடப்பாடிக்கு அடுத்தகட்ட இடியாக இப்போது ஒரு சம்பவம் அரகேறியுள்ளது!

அவர் மேலும் கூறும்போது! என் அம்மா ஜெயலலிதாவை முதல்வராக இருந்த போது இரு முறை சந்தித்து உள்ளேன். மருத்துவமனையில் இருந்தபோது ஒருமுறை சந்தித்தேன்.!
ஜெயலலிதா நடிகையாக இருந்த போது அவர் வசித்த வீட்டில் நான் வசித்து வருகிறேன்.!
அங்கு அவர் எழுதிய டைரி உள்ளது. அவர் பயன்படுத்திய ஆடைகள் உள்ளிட்டவை என் வசம் உள்ளன!.
பல காரணங்களுக்காக நான் வெளிப்படையாக அவரது மகள் என்று என்னை அப்போது அடையாளப்படுத்திக் கொள்ள முடியவில்லை.!
ஜெயலலிதா மகள் என்பதற்கான டி.என்.ஏ டெஸ்ட் உள்ளிட்டவைகளை நீதிமன்றத்தில் கொடுக்க உள்ளேன்!
. தற்போது புதிய கட்சி ஒன்றை தொடங்கியுள்ளேன். அகில இந்திய எம்ஜிஆர் முன்னேற்ற கழகம் என்பது எனது புதிய கட்சியின் பெயர். கட்சியின் சின்னமாக இரட்டை ரோஜா ஏற்படுத்தப்பட்டுள்ளது.!
இரட்டை இலைக்கு பதிலாக, போட்டியாக இரட்டை ரோஜா சின்னம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
கட்சி நிர்வாகிகளை சந்திப்பதற்காக தான் கொடைக்கானல் வந்துள்ளேன்.!
எதிர்வரும் எம்பி தேர்தலில் எனது கட்சி 39 தொகுதிகளிலும் போட்டியிடும். எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை. எனது அம்மா ஜெயலலிதாவின் ஆசைகளை நிறைவேற்றுவதற்காகவே புதிய கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடுகின்றேன்.!
எனது கட்சியின் கொள்கை என்பது எனது மக்களுக்கான தேவை என்பதுதான் அம்மாவின் ஆசை!
. எனது அம்மா ஜெயலலிதாவின் இறப்பில் சந்தேகம் உள்ளது. பலர் இதற்கு காரணமாகவும் உள்ளனர்.!

இவ்வாறாக அவர் கூறினார்.! இத்தகவல் இணையத்தில் வைரலாக்கப்பட்டும் வருகின்றது!
ஒரு மனிதனுக்கு எத்தனை கட்டமுடா சாமி!
என்ன? இப்பவே கண்ணை கட்டுதா!
அட அரசியல்லாலே இதெல்லாம் சகஜமா?
காலம்தான் பதிலளிக்க வேண்டுமோ!




Comments