கடலூரில், தி.மு.கழக செயல்வீரர்கள்ஆலோசனை கூட்டம்!அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அழைப்பு!!
- உறியடி செய்திகள்

- Mar 23, 2023
- 2 min read
Updated: Mar 23, 2023


முத்தமிழறிஞர் தலைவர் டாக்டர் கலைஞர் நூற்றாாண்டுவிழா - தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் தளபதியாரின் பிறந்தநாள் விழா-தீவிர கழக உறுப்பினர் சேர்க்கை திருவிழா - வாக்குச்சாவடி முகவர்கள் குழு அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கழக ஆக்கப்பூர்வ பணிகள் குறித்து ஆலோசிக்க நடைபெறுகிறது கழக செயல்வீரர்கள் கூட்டம், பங்கேற்க அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அழைப்பு.....
கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்
மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை அமைச்சர்,
கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்,
கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர்
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அழைப்பு.
இதுகுறித்து விடுத்துள்ள செய்திகுறிப்பில் அவர் கூறியிருப்பதாவது...
.
கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம், வருகின்றமார்ச் 25.சனிக்கிழமை மாலை 3.00 மணியளவில் வடலூர், மங்கையர்க்கரசி திருமண மண்டபத்தில் மாவட்ட அவைத்தலைவர் திரு.து.தங்கராசு தலைமையில் நடைபெற உள்ளது.

கூட்டத்தில் முத்தமிழரிஞர் தலைவர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை கடலூர் கிழக்கு மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடுவது சம்பந்தமாகவும், கழகத்தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதியாரின் பிறந்த நாள் விழாவினை சிறப்பாக, மக்களுக்கும். தொண்டர்களுக்கும் பயனளிக்கும் சீர்மிகு திராவிட இன எழுச்சி விழாவாக தொடர்ந்து கொண்டாடுவது தொடர்பாகவும்.
தலைமை கழக நிர்வாகிகளின் ஆலோசனைகளுக்கு ஏற்பவும்,கழக உறுப்பினர் சேர்க்கையை தீவிரபடுத்துவது சம்பந்தமாகவும்.
வாக்குச்சாவடிகள் குழு அமைப்பது சம்பந்தமாகவும் ......



தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் அண்ணன் தளபதியாரின் தலைமையில் தலைமை கழகத்தில்,நடை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கழக வளர்ச்சிப் பணிகள், சம்மந்தமாக எடுக்கப்பட்ட பல்வேறுமுடிவுகள் சம்பந்தமாக ஆலோசித்து நாம் அனைவரும், பேரறிஞர் அண்ணா முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் அடலேறுகளாய் தொடர்ந்து உலகத் தலைவர்களின் கவனத்தை ஈர்த்து, சிறந்த மக்கள்நலப்பணிகளை முன்னெடுத்து, இந்திய ஒன்றியத்தின் பிறமொழிவாரியான மாநிலங்களுக்கு வழிகாட்டியாய், திராவிட மாடல் ஆட்சியை முன்னெடுத்துவரும் கழகத் தலைவர்தளபதியாரின் கரத்தை வலுபடுத்தும் வகையிலான ஆக்கப்பூர்வமான கருத்துக்களை எடுத்து கூறிட.....

மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, வட்டம், கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகர மேயர், ஒன்றியக்குழுத் தலைவர்கள், நகரமன்ற தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள்,

முன்னாள், இந்நாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட ஊராட்சிக் குழு, ஒன்றியக்குழு உறுப்பினர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி, இலக்கிய அணி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை, தொண்டர் அணி, தொழிலாளர் அணி, மகளிர் தொண்டரணி, வழக்கறிஞர் அணி, மீனவர் அணி, நெசவாளர் அணி, விவசாய அணி, விவசாய தொழிலாளரணி, பொறியாளர் அணி, மருத்துவர் அணி, வர்த்தகர் அணி, ஆதிதிராவிடர் நலக்குழு அணி, சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு, தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி, சுற்றுச் சூழல் அணி, அயலக அணி, அமைப்புச் சாரா ஓட்டுநர் அணி, தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் ஆகிய அணிகளின் நிர்வாகிகள், கழக முன்னோடிகள், கழகத் தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறாக அதில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்....




Comments