கடலூரில்: வாக்காளர் சேர்க்கும் பணி! தி.மு.க.வினருக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேண்டுகோல்!
- உறியடி செய்திகள்

- Jul 5, 2023
- 2 min read

மூத்தப்பத்திரிக்கையாளர் ராஜா
வாக்காளர் சேர்க்கும் பணியின்போது நமது கழகத்தின் சார்பாக நியமிக்கப்பட்டுள்ள BLA2க்கள் இந்த பணியினை முழுமையாக இருந்து நாடாளுமன்ற தேர்தல் வரை, தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள BLOஉடன் இருந்து கண்காணிக்க வேண்டும்....!
தமிழ்நாடுவேளாண்மை - உழவர்நலத்துறை அமைச்சர்,
கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்,
கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர்,
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.!
தி.மு.கழகத் தலைவர்தமிழ்நாட்டின் முதலமைச்சர், தளபதி மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, வருகின்ற 01.01.2024ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தினை இந்தியத் தேர்தல் ஆணையம் கீழ்காணும் அட்டவணையின்படி அறிவித்துள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும், 2023ம் ஆண்டு சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்திடும் பணி வாக்குச்சாவடி நிலை அலுவலரால் வீட்டுக்கு வீடு சரிபார்ப்பு பணிகள் 21.07.2023 வெள்ளி முதல் 21.08.2023 திங்கள் வரை நடைபெறவுள்ளது.
புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம், 2024ன் போது கோரிக்கை மற்றும் மறுப்புரைகள் அளிக்க அனுமதிக்கப்பட்ட 17.10.2023 முதல் 30.11.2023 வரை உள்ள காலத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படவோ அல்லது வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள பதிவுகளில் நீக்கம் செய்யவோ / திருத்தங்கள் செய்யவோ / இடமாற்றம் செய்யவோ அல்லது ஆதார் எண்ணை இணைக்க விரும்பும் வாக்காளர் / தகுதியுள்ள குடிமக்கள், படிவங்கள் 6,( 6பி, 7 அல்லது 8 ஆகியவற்றைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்டவாறு அளிக்கலாம்.

• அலுவலக வேலை நாட்களில் வாக்குச் சாவடி நிலை அலுவலரிடம் / வாக்காளர் பதிவு அதிகாரி / உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகங்களில் அளிக்கலாம்.
• சிறப்பு முகாம் நாட்களில் அந்தந்த வாக்குச்சாவடி அமைவிடங்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளிக்கலாம்.
• அலுவலக வேலை நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் நிர்ணயிக்கப்பட்ட அலுவலர்களிடம் அளிக்கலாம்.
• பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன், வசிப்பிட முகவரி மற்றும் வயது ஆகியவற்றுக்கான சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். முகவரிச் சான்றாக கீழ்க்காணும் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலை அளிக்கலாம்.
• முகவரிக்கான நீர்/மின்சாரம்/எரிவாயு இணைப்பு ரசீது (குறைந்தது 1 வருடத்திற்காவது)
• ஆதார் அட்டை
• தேசியமயமாக்கப்பட்ட / அட்டைவணைப்படுத்தப்பட்ட வங்கி / அஞ்சல் அலுவலகத்தின் தற்போதைய கணக்கு புத்தகம்.
• கடவுச் சீட்டு
• விவசாயி புத்தகம் உட்பட வருவாய்த் துறைகளின் நில உரிமைப் பதிவுகள்.
அதன்படி, இந்த நாட்களில் வாக்காளரே தாமாக முன் வந்து வாக்காளர்கள் பட்டியலில் உள்ள தங்களது விவரங்களை சரிபார்த்து, விடுபட்ட வாக்காளர்களும், இடம் மாறிய வாக்காளர்களும், 1.1.2024, 01.04.2024, 01.07.2024 மற்றும் 01.10.2024 ஆகிய தேதிகளில் 18 வயது பூர்த்தியடைந்தவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும், பெயர் சேர்க்க படிவம் 6ல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் படிவத்தில் உள்ள உறுதிமொழியினை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். வாக்காளர் பட்டியலில் இடம் பெறும் வாக்காளரின் புகைப்படங்களின் தரத்தை மேம்படுத்தும் விதமாக விண்ணப்பதாரர்கள் 200 dpi resolution கொண்ட புகைப்படங்களை அளிக்க / தரமேற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள். வாக்கு சேர்ப்பதற்கு www.voters.eci.gov.in மற்றும் https://voterportal.eci.gov.in என்ற இணைய தளத்திலும் மற்றும் “வாக்காளர் உதவி” கைபேசி செயலி (VOTER HELPLINE Mobile App) ஆகியவற்றின் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். புதிய வாக்காளர்களை சேர்க்க படிவம் 6ம், அயல்நாட்டு வாழ் இந்திய குடிமகனை சேர்க்க படிவம் 6எ, வாக்காளர் பட்டியல் அங்கீகாரதிற்காக ஆதார் எண் உண்மையென சான்றுரைத்தைல் படிவம் 6பி, நபரின் பெயரை சேர்க்க ஆட்சேபனைக்கான வாக்காளர் விண்ணப்பப் படிவம் / வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே உள்ள பெயரை நீக்கக் கோருவதற்கான விண்ணப்பம் 7ம், குடியிருப்பை ஒரு தொகுதியிலிருந்து வேறு தொகுதிக்கு மாற்றினாலோ அல்லது தற்போது வசிக்கும்
தொகுதிக்குள்ளேயே மாற்றினாலோ அல்லது நடப்பு வாக்காளர் பட்டியலிலுள்ள பதிவுகளை திருத்தம் செய்வதற்கான அல்லது மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெறுவதற்கான அல்லது மாற்றுத் திறனாளிகளை குறிப்பதற்கான விண்ணப்பம் படிவம் 8, ஆகிய படிவங்களை பயன்படுத்த வேண்டும். இந்த படிவங்கள் தேர்தல் ஆணைய இணைய தளத்தில் உள்ளது.

இதனடிப்படையில் 2024ஆம் ஆண்டு ஜனவரி 1ந் தேதி 18 வயது நிறைந்தவர்களின் பெயர்களையும், வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம் பெறாத பெயர்களையும், புதிதாக குடிபெயர்ந்து உள்ள வாக்களர்களின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், தொகுதியிலிருந்து இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் பெயர்களை தற்போதுள்ள பட்டியலில் இருந்து நீக்கவும், தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
அதுசமயம் மேற்கண்ட நாட்களில் நடைபெறும் வாக்காளர் சேர்ப்பு பணியில் மற்றும் சிறப்பு முகாம்களில் நமது மாவட்டத்தில் உள்ள மாவட்ட கழக நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் வாக்குச் சாவடி நிலை முகவர்கள் (BLA2) முன்னாள், இந்நாள், சட்டன்ற, நாடாளுமன்ற பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழக தோழர்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். மேலும் இந்த பணியின் விவரத்தினை மாவட்ட கழகத்திற்கு தெரிவிக்கவேண்டும்,
வாக்காளர் சேர்க்கும் பணியின்போது நமது கழகத்தின் சார்பாக நியமிக்கப்பட்டுள்ள BLA2க்கள் இந்த பணியினை முழுமையாக இருந்து நாடாளுமன்ற தேர்தல் வரை, தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள BLOஉடன் இருந்து கண்காணிக்க வேண்டும். !
இவ்வாறு அமைச்சர் எம் ஆர்.கே.பன்னீர்செல்வம் தனது 'அறிக்கையில் கூறியுள்ளார்.!




Comments