ராஜ்பவன், தொடரும் சர்ச்சைகள்!அரசியலா செய்கிறார் ஆளுநர் ரவி ஐ.பி.எஸ்!
- உறியடி செய்திகள்

- Oct 28, 2023
- 2 min read
Updated: Oct 28, 2023

கிண்டி, பெட்ரோல் குண்டுவீச்சா! அரசியலா செய்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி! டி.ஜி.பி. விளக்கமும் அம்பலத்திற்கு வந்த பரப்பரப்பு தகவல்களும்!
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய ரவுடியை ஜாமீனில் எடுத்த பாஜ மாவட்ட செயலாளர்: கமலாலயம் மீது குண்டு வீசிய வழக்கில் 2 நாட்களுக்கு முன் வெளியே எடுத்தது அம்பலம்
சென்னை: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத்தை, வேறொரு வழக்கில் திருவாரூர் பாஜ மாவட்ட வக்கீல் அணி செயலாளர் ஜாமீனில் எடுத்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தின் முன்பு உள்ள பகுதியில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி பைக்கில் சென்ற ரவுடி கருக்கா வினோத், திடீரென்று பைக்கை நிறுத்தி விட்டு சாலையின் இடதுபக்கம் நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான காம்பவுண்ட் சுவரை ஒட்டிய நடை பாதையில் நின்று கொண்டு அதாவது சர்தார்படேல் சாலையில் இடது பக்கம் திரும்பும் இடத்தில் நின்று ஆளுநர் மாளிகையை நோக்கி 2 குண்டுகளை வீசியுள்ளார்.

அந்த குண்டுகள் சாலையின் நடுவில் விழுந்து வெடித்தது. பின்னர் மேலும் 2 பெட்ரோல் குண்டுகளை வீச முயன்றான். இதைப் பார்த்த போலீசார், அவனை பாய்ந்து சென்று பிடித்தனர். அவனிடம் இருந்த 2 பெட்ரோல் குண்டுகளை பறிமுதல் செய்தனர். இந்தநிலையில், அவன் இரு நாட்களுக்கு முன்னர்தான் ஜாமீனில் வெளியில் வந்துள்ளான் என்ற தகவல் தெரியவந்தது. அதாவது கடந்த ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி நீட் பிரச்னைக்காக பாஜ மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தின் மீது இதே கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசினான்.
அதில் கைது செய்யப்பட்டு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிறையில் உள்ளான். அவனை யாரும் ஜாமீனில் எடுக்காமல் இருந்தனர்.
இந்தநிலையில் பாஜ அலுவலகத்தின் மீது வெடிகுண்டு வீசிய வழக்கில், திருவாரூர் மாவட்ட பாஜ வக்கீல் அணி செயலாளர் முத்தமிழ்செல்வக்குமார், செசன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து ஜாமீனில் கருக்கா வினோத்தை வெளியில் எடுத்துள்ளார். அந்த வழக்கில் ஜாமீனில் வெளியில் வந்த 2வது நாளில் ஆளுநர் மாளிகை மீது வெடிகுண்டுகளை அவன் வீசியுள்ளான். இதனால், கருக்கா வினோத் ஜாமீனில் வெளியில் வந்த விவகாரத்தில் பல உண்மைகள் மறைந்திருக்கலாம் என்று போலீசாரால் சந்தேகிக்கப்பட்டது.

இதனால் அவனை காவலில் எடுத்து விசாரணை நடத்தினால், அவனுக்கு தூண்டுதலாக யாராவது தலைவர்கள் உள்ளார்களா என்பது தெரியவரும் என்றும் பரப்பரப்பாக பேசப்பட்டும் வந்ததும்.
மேலும், இந்த சம்பவத்தில் பலர் வந்து தாக்குதல் நடத்த முயன்றதாக ஆளுநர் மாளிகை தரப்பிலும்தெரிவித்திருந்தது. ஒருவர் மட்டுமே வந்ததற்கான ஆதாரம் உள்ளது என்று டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்திருந்த நிலையில், இந்த தகவலை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோரும், ஆளுநர் ரவியிடம் நேரில் விளக்கியுள்ளார்.

அதன்பின்னரும் அவர் கருத்து தெரிவித்துள்ளதால், வெடிகுண்டு விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று பல்வேறு வகைலானகூற. இது அரசியல் களத்தை மேலும்சூடாக்கியது. குற்றவாளி கருக்கா வினோத்தை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது.!
இந்த பரப்பரப்பான சூழலில்.........!
ஆளுநர் மாளிகையில்
பெட்ரோல் குண்டு வீசப்பட்ட தாக கூறப்பட்டவிவகாரத்தில் ரவுடியை போலீசார் பிடிக்கும் வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கமளித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.!



ஆளுநர் மாளிகை பெட்ரோல் குண்டு வீச்சு - CCTV வீடியோ வெளியிட்டு தமிழ்நாடு காவல்துறை விளக்கம்
ஆளுநர் மாளிகை பெட்ரோல் குண்டு வீச்சு – CCTV வீடியோ வெளியிட்டு தமிழ்நாடு காவல்துறை விளக்கம்
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசினார். இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பெட்ரோல் குண்டு வீசிய நபரை மடக்கிப் பிடித்தனர்.அவர் தேனாம்பேட்டையைச் சேர்ந்த வினோத் என்பது தெரிய வந்தது. உடனடியாக அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார் இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் ராஜ்பவனில் நடந்த தாக்குதல் குறித்த புகாரை காவல் துறை பதிவு செய்யவில்லை. இந்த சம்பவம் குறித்து தாமாக முன்வந்து பதிவு செய்யப்பட்ட புகார், ஆளுநர் மாளிகை முன்பு நடந்த தாக்குதலை சாதாரணமான நாசகார செயலாக நீர்த்துப்போகச் செய்துவிட்டது. இந்த வழக்கில், அவசரகதியில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, நள்ளிரவில் மாஜிஸ்திரேட்டை எழுப்பி குற்றம்சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டுவிட்டதால், இந்த தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்களை அம்பலப்படுத்த வேண்டிய விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது. நியாயமான விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே இந்த விசாரணை கொலை செய்யப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டது!

இந்நிலையில் ஆளுநர் மாளிகை கூறுவது போல் ராஜ்பவன் ஊழியர்களால் ரவுடி கருக்கா வினோத் பிடிக்கப்படவில்லை. கும்பலாக வந்து ஆளுநர் மாளிகைக்குள் நுழைய முற்பட்டதாக கூறியது ,ஆளுநர் மாளிகை நுழைவாயில் எரித்து சேதப்படுத்தப்பட்டது , ராஜ்பவன் ஊழியர்கள் கருக்கா வினோத்தை பிடித்ததாக கூறியது என அனைத்தும் பொய்யானது எனவும் பாதுகாப்பில் உள்ள போலீசாரே ரவுடி கருக்கா வினோத்தை மடக்கிப் பிடித்தனர்.


ஆளுநர் மாளிகை வெளியிட்ட புகார், முற்றிலும் உண்மைக்கு மாறானது என்று ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து அறிக்கைகளாக வெளிவந்த ‘பொய்’ குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் ஆதாரத்துடன் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் வீடியோ வெளியிட்டு மறுப்பு தெரிவித்து விளக்கமளித்துள்ளார்.!


இந்நிலையில் தொடர்ந்து தங்களின் செயல்பாடுகளில் முன்னுக்குப்பின் முற்றிலும் முரணாக திட்டமிட்டு தமிழ்நாடு அரசுக்கு எதிராகவே இச்சம்பவம் அரசில், தேர்தல் உள்நோக்கமுடையதாகவே மீண்டும் நிருபமாகவே,பார்க்க வேண்டியுள்ளது என்று மூத்த பத்திரிக்கையாளர், அரசியல் பார்வையாளர்களால் பேசப்படுகின்றது.
உறியடி செய்திக்குழு




Comments