மதுரையில், பாதாள சாக்கடை-வளர்ச்சிப் பணிகள்! அமைச்சர் கே.என்.நேரு அதிரடி ஆய்வு!
- உறியடி செய்திகள்

- Dec 26, 2022
- 1 min read


மணவை.எம்.எஸ்.ராஜா.
மதுரையில், மாநகராட்சி திட்டப் பணிகள் - பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் உள்ளிட்டவற்றை அமைச்சர் கே.என்.நேரு அதிரடி ஆய்வு மேற்கொண்டார். பணிகளை விரைந்து முடிக்கவும் ஆலோசனை. அறிவுறுத்தல்களை அதிகாரிகளுக்கு வழங்கினார். பத்திரபதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தியும் உடன் சென்றார்.
தமிழ்நாட்டில்.தி.மு.கழக அரசு. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்டது முதல், மாநகராட்சி, நகராட்சி, பேரூட்ட்சிகளில், கடந்த அதிமுக ஆட்சிகாலத்தை காட்டிலும், வளர்ச்சிப் பணிகள் தீவிரம் காட்டப்பட்டு துரிதமாக நிறைவேற்றப்பட்டு வருகின்றது.
இதன் காரணமாக. கடந்தகாலங்களில் பெய்த புயல், மழை, வெள்ளநீரால் பெரிதளவில் பாதிக்கப்பட்டு வந்த சென்னை மக்கள்தற்போது பெருமளவில் நிம்மதி பெருமூச்சுவிடும் வகையிலான சூழல் நிலவி வருகின்றது.


முத்தமிழறிஞர் கலைஞரின் மிக வும்நம்பிக்கைக்கு பாத்திரமான அமைச்சர்களுள் மிக முக்கிய அங்கம் வசித்த, கே.என்.நேரு தற்போதைய தமிழ்நாட்டின் "முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் நராட்சி நிர்வாகத்துறை, குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக பொருப்பேற்ற குறுகிய காலத்தில் தி.மு. கழகத் தலைவர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் நலன் சார்ந்த சிந்தனைகள் எண்ணங்களுக்கு ஏற்ப மாநகராட்சி, நகராட்சி, பேருராட்சி பகுதி சார்ந்த நலத்திட்டங்கள் குறித்த மாவட்ட, மண்டல வாரியாக ஆய்வுக்கூட்டங்கள், அதிரடி திடீர் ஆய்வுகள் மூலம் பம்பராய் சுழன்று பணியாற்றியும் வருவதும் அனைவரும் நன்கு அறிந்ததேயாகும்.
மேலும், மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், பல்வேறு திட்டப் பணிகளுடன், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழான வளர்ச்சி பணிகளும் முழு விச்சில், முடுக்கிவிடப்பட்டு பணிகள் துரிதமாக நடபெற்று வருகின்றது.


இந்நிலையில், தி.மு.கழகத்தலைவர் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தர வின்படி, தி.மு.கழக முதன்மைச் செயலாளர், சேலம் மண்டல பொருப்பாளர் . தமிழக நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு.நேற்று டிச.25. ஞாயிற்றுக்கிழமை மதுரை மாநகராட்சிப்பகுதிகளில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.மாநகரில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணி நிலவரங்கள் கேட்டற்றது, விரைவாக முடித்திட ஆலோசனைகளையும், அறிவுறுத்தல்களை வழங்கினார்.


இதனை தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வண்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளையும் ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு இடையூறுகள் - தடைகள் இல்லாதவகையில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென்றும், இங்கு நடைபெறும் பணிகளின் களநிலவரங்கள் உடனுக்குடன் தமிழக முதல்வரின் கவனத்திற்கு செல்வதால், பணிகள் மிகுந்த கவனத்துடன் உரிய காலத்தில் முடிக்கவும் ஆலோசனைகளை வழங்கி, பணிகளை முடிக்கியும் விட்டார்.

வணிக வரி பத்திரபதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி, மாநகர மேயர் இந்திராணி பொன்.வசந்தன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தார்கள்.




Comments