top of page
Search

திருச்சி, சமயபுரத்தில் 18. ஜோடிகள் இல்லறம் இணையும் விழா! அமைச்சர் கே.என்.நேரு நடத்தி வைத்தார்!!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Dec 4, 2022
  • 1 min read
ree

மணவை.எம்.எஸ்.ராஜா....

டிச.4.

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் வளகத்தில் 18. ஜோடிகளுக்கு இந்துசமய அறநிலையத்துறை சார்பில், இலவச திருமணங்கள். அமைச்சர் கே.என்.நேரு நடத்தி வைத்து வாழ்த்தினார்.......


திருச்சியை அடுத்த சமயபுரம் மாரியம்மன் கோவில். தமிழக மட்டுமின்றி, உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் நம்பிக்கைக்கு உகந்த ஆலையமாகும்....


தி.மு.கழக தலைவர், தமிழக முதல்வர் .மு.க.ஸ்டாலின் தலைமையில் பொருப்பேற்றபின் அறநிலையத்துறை சொத்துக்கள், களவுபோன சாமி சிலைகள். கோவில்கள் சீரமைப்பு, புனரமைப்பு, கும்பாபிஷோகங்கள், என்று அதிக முக்கியத்துவமளித்து பல்வேறு நலப்பணிகள் தொடர்ந்துநிறைவேற்றப்பட்டு வருகிறது..

ree

இதில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகவேண்டும் என்கிற தந்தைபெரியாரின் கொள்கையை, அவர் வழியில் வந்த பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் கண்ட கனவை ஆட்சிப்பொருப்பேற்ற குறுகிய காலத்தில், ஆகமவிதிகளை முறைப்படி பயின்று, பயிற்சி பெற்ற அனைத்து சாதியினரையும்

அர்ச்சகர்களாகும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தியது உலக அளவிலான முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகின்றது......

ree

இதில் மற்றெரு பயனுள்ள திட்டமாக 2021 - 20221ம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் மண்டலங்கள் வாரியான கோவில்களில், ஆண்டுக்கு 500, ஜோடிகளுக்கு இலவச திருமணமங்கள் நடத்திடும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.


அதன்படி தமிழக அரசின் கீழ் செயல்படும் இந்துசமய அறநிலையத்துறையின் மூலமாக, சகலவிதமான சீர்வரிசைகளுடன் இலவச திருமணத்திட்டத்தின் மூலம் ஏழை, எளியோர் பயன்பெற்று தங்கள் வாழ்க்கையை அமைத்து கொள்ள வழிவகை செய்து வருவது குறிப்பிடதக்க பயனுள்ள திட்டமாகும்.........

ree

இந்நிலையில் இன்று சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோவிலில், தமிழக இந்துசமய அறநிலையத்துறை சார்பில், 18. ஜோடிகளுக்கான திருமண திருமணத்தை தி.மு.கழக முதன்மைச் செயலாளர், தமிழக நகராட்சி நிர்வாகம்- குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையேற்று நடத்தி வைத்தார். முன்னதாக மணமக்களுக்கு திருமாங்கல்யத்தை எடுத்து கொடுத்து அச்சதை தூவி மணமக்கள் வாழ்வாங்குவாழ வாழ்த்தியவர். சீர்வரிசை பொருட்களையும் வழங்கினார்..........

ree

இதனை தொடர்ந்து. தி.மு.கழத்தின் கருப்பு. சிவப்பு வண்ணம் போல் மணமக்கள் என்றும் இணைந்து மகிழ்வுடன் வாழவும் வாழ்த்தினார்.......

ree

இந்நிகழ்வில், சட்டமன்ற உறுப்பினர்கள். கதிரவன்,செளந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், தியாகராஜன். திருச்சி மேயர் மு.அன்பழகன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளாச்சி பிரதிநிதிகள், மணமக்களின் - பெற்றோர் - உறவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள்...

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page