தமிழ்நாட்டில், சாதி, மதம் கடந்து, பெரியார். அண்ணா.கலைஞர் வழியில் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!
- உறியடி செய்திகள்

- Feb 20, 2023
- 1 min read

திராவிட மாடலை முத்தமிழறிஞர் கலைஞரின் அரசியல், சாணக்கியத்தை பின்பற்றி, பட்டியலினத்தவர்களை மதிப்புறச் செய்யும், முதல்வர், மு.க.ஸ்டாலின்!
அன்று
1990’ல் திமுக ஆட்சியின் போது அன்றைய ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் சென்னை வநதார். அவரை வரவேற்க தமிழ்நாடு அரசின் சார்பில் ஒரு அமைச்சரை அனுப்பினார் முதல்வர் கலைஞர். அவர் தான் அமைச்சர் தங்கவேல், கைத்தறிதுறை அமைச்சர்.
விமான நிலைய வரவேற்பு முடிந்ததும் நீங்கள் எந்த தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்டீர்கள்? என்றார் ஜனாதிபதிவெங்கிட்ராமன்.
சங்கரன் கோயில் என்றார் தங்கவேலு.
“ஓ… அது தனிதொகுதியில்ல!” என்று கேட்ட வெங்கட்ரமன், அவர் சாதியை உறுதி செய்தவுடன் வெங்கட்ராமனுக்கு சுருக் என்றிருந்தது.
யாரை நீ பார்த்தால் தீட்டு … தொட்டால் தீட்டு … என்று நினைக்கிறாயோ, அவனது கைகளைக் குலுக்கி விட்டுத் தாம் தமிழ் நாட்டிற்குள் கால் வைக்க முடியும்
என்று செயலில் உணர்த்தினார் மாபெரும் ஆளுமையான கலைஞர்.
இன்று
சில மாதங்களுக்கு கன்னியாகுமரியில்
அது தக்கலை குமாரபுரம் கோவில்
கோவில் வடத்தேரை இழுக்காதீர் என அமைச்சர் அண்ணன் அமைச்சர் மனோ தங்கராஜை இழிவுபடுத்த பார்த்தது பாஜக!
நாட்டின் குடியரசு தலைவர் ஒரு மாநிலத்திற்கு வந்தால் மாநிலத்தின் பிரதிநிதி வரவேற்று உடனிருக்கவேண்டும் என்பது கட்டாய மரபு.


எந்த அமைச்சரை மதமாய் பார்த்து தடுக்க நினைத்தார்களோ அந்த அமைச்சரையே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள்ளும், சங்கிகள் கூழை கும்பிடு போட்டு திரியும் ஈசாவிற்குள் குடியரசு தலைவருடன் கெத்தா அமர்ந்து கொண்டு இருக்க செய்திருக்கிறார். திராவிட தமிழினத்தையும், பட்டியலைத்து பாமர மக்களை யும். தந்தை பெரியார் வழியில். பேரறிஞர் அண்ணா.முத்தமிழறிஞர் கலைஞர் கொள்கை வழியில், பாசிச சக்திகளுக்கு சிம்ம சொப்பமாக திகழ்கிறார், திராவிட மாடல் ஆட்சியை முன்னெடுத்துவரும், தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின்.....
பிலால் அலியார்
துபாய்




Comments