பா.ஜ.க.ஆட்சியில், வரி விலைவாசி உயர்வு!! மக்கள் பறி தவிப்புதான் சாதனையா? அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!!!
- உறியடி செய்திகள்

- Dec 25, 2022
- 3 min read

மணவை, எம்.எஸ்.ராஜா.
8 ஆண்டுகால , பா.ஜ.க.ஆட்சியில் வரி, விலைவாசி உயர்வால் மக்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியானதுதான் சாதனையா? அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!!
தூத்துக்குடி, இரண்டாம்கேட் போஸ் கேட், பிரையண்ட் கேட் உள்ளிட்ட இடங்களில்,பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழா ஆகிய இடங்களில் நேற்று தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டங்கள் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி,வடக்கு மாவட்ட தி.மு.கழக செயலாளர் தமிழ்நாடு சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு, அன்பழகன் தி.மு.கழகத்திற்கும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் பாடுப்பட்டது குறித்து பேசுனார். அப்போது அவர் பேசியதாவது:

இனமான போராசிரியருக்கு புகழ் சேர்க்கும் வகையில் தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் தளபதி.மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளபடி, சுமார் ரூ. 7,500 .கோடி மதிப்பீட்டில் தமிழத்திலுள்ள பள்ளிகள் பாராமரிப்பு, அடிப்படை வசதிகள் உள்ள்ளிட்டபுனரமைப்பு,பணிகள் நடைபெறவுள்ளது. தமிழக முதலமைச்சராக தளபதி. மு.க.ஸ்டாலின் பதவியேற்ற ஒன்றை ஆண்டு காலத்தில், தேர்தல் வாக்குறுதிகளில், சுமார் 70 சதவீதம் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அதன் மூலம் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பையும், வாழ்வாதாரத்தையும் இந்த அரசு உருவாக்கியுள்ளது. மேலும் வேலைவாய்ப்பு - போட்டித் தேர்வுகள்.உள்ளிட்டவற்றிற்க்கு தங்களின் அறிவுதிறமையை,பள்ளி கல்லூரியில் படிக்கும் போது வளர்த்துக்கொண்டு எவ்வித அச்சமோ, மன உலைச்சலை லோ, ஏற்படகூடாது என்கிற அடிப்படையில். நமது வருங்கால இளைய சமுதாயமான மாணவச்செல்வங்களுக்கு,திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம். போன்ற பல்வேறு நலத்திட்டங்களும்,செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
பிரசித்தி பெற்ற,தூத்துக்குடி பெருமாள் கோவில் சந்தனமாரியம்மன் கோவில் திருப்பணிகள் முழுவீச்சில்நடைபெறுகின்றன. அறநிலைத்துறையில் காலியாக இருந்த பணியிடங்களும் நிரப்பபட்டுள்ளது.

மதங்களுக்கு எதிரான இயக்கமல்ல.தி.மு.கழகம், கட்டாய மத திணிப்பை, மதத்தின் பெயரால் மக்களிடம், வெறுப்புணர்வு. விரோதத்தை ஏற்படுத்துவதைத்தான் எதிர்கின்றோம் ., நீண்ட எதிர்பார்ப்புடன் கோரிக்கை விடுத்து வந்த. விவசாய பெருமக்களின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாட்டில் ஒன்றைலட்சம் விவசாயிகளுக்கு மும்முனை மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக விவசாய உற்பத்தி பரப்பளவும், விவசாய உற்பத்தியும் அதிகரித்துள்ளது.
கடந்த ஆட்சியாளரகள் கண்டும் காணாமல் விட்ட லட்சக்கணக்கானோர் வாழ்வாதாரம் காக்கும் வகையில் பனைதொழில் பாதுகாக்கப்பட்டு, முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் தளபதியாரின் அனைத்து துறை மக்கள்திட்ட களும், மக்களுக்குவிரைவாக சென்றடைந்து,பயனளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு.17 அமைப்புகளை கொண்ட நல வாரியங்கள் அமைத்துள்ளது. கடந்த அ.தி.முக. ஆட்சியில் மூடக்கி வைக்கப்பட்டிருந்தவாரியங்கள். புத்துயிர் அளிக்கப்பட்டு, தி.மு.கழக தலைவர்.தளபதி தலைமையிலான ஆட்சி வந்த பிறகு முனைப்புடன்செயல்பட தொடங்கியுள்ளது. இவற்றில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கும், குடும்பத்தாருக்கும். திருமண உதவி, கல்வி உதவி. போன்ற பல்வேறு நலதிட்ட உதவிகள் தனி கவனத்துடன் விரைந்து வழங்கப்பட்டும் வருகிறது.

2030,ல். தமிழ்நாடு மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்த நாடாக உருவாதற்கு முதலமைச்சர் திட்டமிட்டுள்ளார். அதற்கானப் பணிகளை திட்டமிட்டு வல்லூர்களோடு கலந்த ஆலோசித்து உரிய நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட்டு வருகிறது.தொழில் தொடங்குவோர்க்கு தொழில்கடன்கள், சிறப்புசலுகைகள், முன்னுரிமை, அதேபோல,மகளிர் சுய உதவிகளுக்கு தொழில் உள்ளிட்ட பல்வேறு கடன் வசதிகள், முதல்வரின் அறிவுறுத்தலின்படி, விரைந்து வழங்கப்படுகிறது. முதல்வரின் தலைமையிலான, கழக அரசு பொருப்பேற்றவுடன், கல்வித்துறை யின் மீது தனி கவனம் கொண்டு, பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.தமிழகத்தில் 1500 பள்ளிகளில் காலை உணவு வழங்கப்படுகிறது. இத்திட்டம் முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பு பார்வையில் உள்ளது.
தமிழகத்தில் உள்ள குழந்தைகளுக்கு சத்துக்குறைவால் என்ன என்ன. குறைபாடுகள் உள்ளது என்பதை கணக்கிட்ட போது 45 ஆயிரம் குழந்தைகளுக்கு சிறிய நோய்கள் என இருந்ததை கண்டறியப்பட்டு அதற்கான சிகிச்சைகள் - மக்கள்நலத்துறை மூலம் அளிக்கப்பட்டடு வருகிறது.
மேலும்.மக்களை தேடி மருத்துவம் திட்டம் பல கிராமத்தில் உள்ள முதியவர்கள் , மாற்றுத்திறனாளிகளுக்கு.பலன் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
பொங்கல் திருநாளுக்கு 1000 வழங்கும் திட்டத்தை வருகிற 2ம் தேதி முதலமைச்சர் தளபதியார் தொடங்கி வைக்கிறார். இதேபோலதேர்தலில் கொடுத்த பெண்கள் உரிமைத் தொகை, ரூ 1000 வாக்குறுதியும் விரைவில் நிறைவேற்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றது.
.
நாட்டில்,எல்லா தரப்பினரை பாதிக்கும் வகையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு டோல்கேட் கட்டணம் உயர்வு விலை, வாசி உயர்வு. பிறந்ததுமுதல்-சுடுகாடுவரை செல்லும்வரை, ஜி.எஸ்.டி.வரி, வரி உயர்வு வரி உயர்வு, பொருளாதார சீர்கேடு. பணமதிப்பிழப்பு, என்று சாமன்ய மக்களின் வாழ்க்கையும் - எதிர்காலமும் .கேள்விக்குறியாகியாக்கப்பட்டுள்ளது. இது போன்றவைகள்தான் 8 ஆண்டுகால பா.ஜ.க.ஆட்சியின் சாதனையாக உள்ளது. இந்தியாவில் சிறந்த முதலமைச்சராக நான் இருப்பதை விட நம்தமிழ்நாடு, அனைத்து வகையிலும், முழுமையான வளர்ச்சி பெற்று,நம்பர் 1 மாநிலமாக இருப்பது தான் எனக்கு பெருமை என்கிறார் நம்முதல்வர் தளபதி.
14வயதில் பொது வாழ்வில் ஈடுபட்ட முத்தமிழ் அறிஞர்கலைஞருக்கு துணையாக இருந்தவர். நம் இனமான பேராசிரியர் க.அன்பழகன். ஜெயலலிதா ஆட்சியில் ஆடு மாடு கோழி போன்றவைகள் வெட்டுவதற்கு தடை செய்யப்பட்டது. பழைய வரலாறுகளை எடுத்துப்பார்த்தால் திருச்செந்தூர் கோவிலுக்குள் சென்று எல்லோரும் சாமி கும்பிட முடியாது.
கோபுரத்தை பார்த்து கும்பிட்டு விட்டு வெளியில் தேங்காய் உடைத்து செல்லும் நிலை இருந்தது. இதையெல்லாம் மாற்றி எல்லோருக்கும் எல்லாம் என்கிற அடிப்படையில்,அந்த உரிமையை பெற்று கொடுத்தது யார் என்று சிந்தித்து பார்க்கவேண்டும். என்றும் மதங்களுக்கு எதிரானவர்கள் அல்ல தி.மு.கழகத்தினர்.மத உணர்வைகளை மதிக்கிறோம். அதேசமயம், நாட்டில் அச்சத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி. சிலர் அரசியல் குளிர்காய மக்களை பிளவுபடுத்தி முயற்சிக்கும் வகையிலான.மத வெறியைத்தான் எதிர்க்கிறோம் அவரவர் பின்பற்றும் தெய்வங்களை வழிப்பட வேண்டும்.

நோட்டாவுடன் போட்டி போட்ட பா.ஜ.க. கூடுதல் வாக்கை பெற.எல்லாவகை புறவழிகளிலும் முயற்சிக்கிறது. தூத்துக்குடி ஸ்மாட் சிட்டி திட்டத்தில் நடைபெறுகின்ற பணிகளில் 50 சதவீதம் தமிழ்நாடு அரசும் 50 சதவீதம் ஒன்றிய அரசும் இணைந்த பங்களிப்புடன் தான் பணி நடைபெறுகிறது.
கடந்த காலத்தில் போட்ட திட்டத்தின் படி மக்கள் பாதிப்படைவார்கள் என்பதை சுட்;டிக்காட்டி எல்லோருக்கும் பலன் கிடைக்கும்படி பிரையண்ட்நகர் பாலவிநாயகர் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகள் மறு ஆய்வின் மூலம் நல்ல முறையில், தரமாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சிக்கு கால்வாய் பணிகளை மேற்கொள்ள ரூ.40 கோடி சாலை வசதிக்கு ரூ.20 கோடி கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.15 கோடி தளபதியின் தலைமையிலான கழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.தி.மு.கழக துணைப்பொதுச்செயலாளர், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி முன்னெடுத்துவரும் மக்கள் நல பணிகள் அனைவரும் பாராட்டும் வகையில் உள்ளது. வரும் காலத்தில் மக்களுக்கான அரசாக திராவிட மாடல் அரசாகஅனைவரும் பயன்பெறும் வகையில் சிறப்பான, வெளிப்படைத்தன்மையுடன், செயல்பட்டு வருகிற கழக அரசுக்கும் நாமும் வலுச்சேர்க்கும், வகையில் நம் முதல்வர் தளபதியின் கரத்தை வலுப்படுத்த துணை நிற்க வேண்டும். இவ்வாறாக அவர் பேசினார். .
தூத்துக்குடி மாநகராட்சி,மேயர் ஜெகன் பெரியசாமி,
தி.மு.கழக, தலைமைக்கழக பேச்சாளர் சரத்பாலா. சரத்பாலா இருதயராஜ், மாநகர தி.மு.கழக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட நிர்வாகிகள். அனைத்து தரப்பு மக்கள் பிரதிநிதுகள். அனைத்து சார்பு
அணிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டார்கள் ...




Comments