தமிழகத்தில்,பழங்கலைகளை மீட்ப்பதில் முதல்வர் தனி கவனம் செலுத்தி வருகிறார். அமைச்சர் மூர்த்தி பேச்சு!
- உறியடி செய்திகள்

- Dec 27, 2022
- 1 min read

மணவை. எம்.எஸ்.ராஜா.
தமிழ்நாட்டில், அழிந்துவரும் நம் பண்பாட்டு பழங்கலை மீட்டெடுப்பதில், பழங்கால
கலைஞர்களை ஊக்குவித்து பாதுகாப்பதில், தமிழக முதல்வர் தனி கவனம் செலுத்தி வருகிறார் என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.
தமிழ்நாட்டில் ஆட்சிப்பொருப்பேற்ற தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு தமிழர் பண்பாடு. பழங்கால கலைகள், தமிழர்களின் பாரம்பரியங்களை மீட்டு எடுத்து புத்துயிர்வுட்டுவதில் தனி கவனம் செலுத்தி வருகிறது.
இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி கவனத்துடன், அக்கரையுடன் கூடிய வகையில் கண்காணித்தும் வருகின்றார். முதல்வரின் இத்தகைய திராவிடல் மாடல் ஆட்சியின் செயல்பாடுகளை துளியும், மாறாமல் அனைவருக்கும் முன்மாதிரியாக, தி.மு.கழக துணைப்பொதுச்செயலாளர், நாடாளுமன்ற தி.மு.கழக உறுப்பினர்கள் குழுவின் துணைத் தலைவர், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி கருணாநிதிஊக்கபடுத்தி பல்வேறு முயற்சிகளிலும், விழாக்களையும் முன்னெடுத்துவருகின்றார்.


அதேபோல தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் பள்ளி கல்லூரிகளில் மாணவர்கள் மத்தியில் பழமைவாய்ந்த கலைகள் குறித்து விழிப்புணர்வையும். ஆர்வத்தையும் தூண்டி அழிந்துவரும் தமிழர் பண்பாட்டுக்கலைகளுக்கு முக்கியத்துவமும் அளித்து வருகின்றார். இதனால் தமிழக பள்ளிக்கல்லூரி மாணவர்களால் பழங்கால பண்பாட்டு கலைகள் வெளி உலகுக்கு, அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் திசையை நோக்கிய பயணமாகவும் அமைந்துள்ளது என்றால் மிகையாகாது.


இந்நிலையில் இன்று மதுரை தனியார் கல்லூரியில், பள்ளிக்கல்வித்துறை கீழ் இயங்கிவரும் அரசு நடுநிலை, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் பங்கேற்ற கலைத்திரு விழாவை இன்று காலை. தமிழக பத்திரபதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி குத்து விளக்கேற்றி தொடங்கிவைத்தார்..இதனை தொடர்ந்து விழாவில் அவர் பேசும்போது. தமிழக முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் பழங்கலைகளை அழிவிலிருந்து காத்து புத்தியிர் ஊட்டும் வகையில், தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக முக்கியத்துவம் அளித்து அதனை பள்ளி, உயர்கல்வித்துறைகளின் மூலம் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து மீட்டெடுத்துவருவதுடன், கிராமிய, நாடக. தெரு கூத்து கலைகளையும் புத்துயிர்பெறச் செய்து வருகிறார்.



அதேபோல பழங்கலை பண்பாட்டு கலைஞர்களை ஊக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்துவருகின்றார். என்று குறிப்பிட்டு பேசினார். இதனையடுத்து நடைபெற்ற பள்ளி மாணவர்களின் பழங்கால கலை நிகழ்ச்சிகளையும் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்து பார்த்து, பங்கேற்ற மாணவர்களை பரிசுகள் வழங்கி பாராட்டி வாழ்த்தி உற்சாகப்படுத்தினார்.




Comments