top of page
Search

புதுமைப்பெண் திட்டம். 90%பெண்கள்உயர்கல்வியை உறுதியாக்கியுள்ளது அமைச்சர்,சிவசங்கர் பெருமிதம்!!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Nov 1, 2022
  • 1 min read

Updated: Nov 3, 2022

ree

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தியுள்ள புதுப்பெண் திட்டத்தால் 90% பெண்களின் உயர்கல்வியை உறுதியாக்கியுள்ளது என்று அமைச்சர், எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார்....

அரியலூர் மாவட்ட தி.மு.கழக செயல்வீரர்கள் கூட்டம், அரியலூரில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் மாவட்ட தி.மு.கழக செயலாளர், தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது.....

கடந்தகால அதிமுக ஆட்சியில் பல லட்சம் கோடி கடன்சுமையையும், ஆதனால் கடும் நிதி நெருக்கடியையும் ஏற்படுத்திவிட்டு சென்றார்கள். இவ்வாறான இக்கட்டான, நோய்தொற்று காலகட்டத்தில் ஆட்சி பொருப்பை ஏற்ற தி.மு.கழக தலைவர், தமிழ்நாட்டின் முதல்அமைச்சர், தளபதி மு.க.ஸ்டாலின் மிக நேர்த்தியாகவும், திறமையுடனும் நிதிநிலையை கையாண்டு மக்களுக்கான திட்டங்களை அனைத்து தரப்பினரும் பெறும் வகையில் திராவிட மாடல் ஆட்சியை முன்னெடுத்து, தமிழ்நாட்டு மக்களுக்கான ஆட்சியாக நடத்தி வருகின்றார்.

ree

தமிழக மக்களின் குறைகளை, கோரிக்கைகளை கடும் நிதி நெருக்கடியிலும் நிறைவேற்றி வருகின்றார். அரசு போக்குவரத்து ஊழியர்கள், பணியாளர்களுக்கு மனநிறைவான போனஸாக, தீபாவளிக்கு கழக அரசு வழங்கியுள்ளது. இதனால் போக்குவரத்துத்துறை ஊழியர்கள் - பணியாளர்கள் மனமகிழ்ச்சியுடன் உள்ளார்கள்.

தீபாவளி பண்டிகையின்போது, பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வர பேருந்து வசதிகள் சிறப்பாக வழங்கபட்டது......

ree

நமது முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் சொல்லாததையும் செய்துவருபவர்கள், அந்த வகையில் புதுமைப்பெண் திட்டத்தை முன்னெடுத்து 90 சதவிகித பெண் குழந்தைகளின் உயர்கல்வி கனவை நினைவாக்கியுள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில், விரைவில் முதல்வர் கலந்துகொண்டு பல்வேறு திட்டப் பணிகளையும் - வளர்ச்சிப் பணிகளையும் வழங்குவார், அதற்கான தேதி விரைவில் முதல்வரின் ஒப்புதல் பெற்று அறிவிக்கப்படும்.

இவ்வாறாக அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் தி.மு.கழக சட்டதிருத்தக்குழு உறுப்பினர் சுப.சந்திரசேகரன். கொள்கைபரப்பு துணைச்செயலாளர் பெருநற்கிள்ளி.ஜெயம் கொண்ட எம்.எல்.ஏ.கண்ணன் மற்றும், மாநில, மாவட்ட, ஒன்றிய நகர, பேரூர்- கிளைகழக, நிர்வாகிகள் சார்பு அணியினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டார்கள்.


மணவை, எம்.எஸ்.ராஜா

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page