மிரட்டும் மாண்டஸ் புயல்! மக்களை பாதுகாத்திட எதையும் சந்திக்க அரசு தயார்!! முதல்வர் மு.க.ஸ்டாலின்!!!
- உறியடி செய்திகள்

- Dec 10, 2022
- 3 min read

மணவை, எம்.எஸ்.ராஜா....
கடந்த சில தினங்களாக, தமிழகத்தை மாண்டஸ் புயல் மிரட்டிய வந்த நிலையில், புயல் இறுதிகட்டத்தை எட்டியதையடுத்து கரையை கடக்கும் நிலையில் நிலவரம் உள்ளது. இந்நிலையில் புயல், மழை,வெள்ளங்களை காக்கும் பணியில் அரசு தயார்நிலையில் உள்ளது. மேலும் மக்களின் நலன்காத்திட எதையும் சந்திக்கவும் தயாராக உள்ளது என்று தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்...
சென்னை பட்டினம்பாக்கம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மெரினாவில் கடல் சீற்றம் காரணமாக கரையை தாண்டி அலைகள் வந்து செல்கின்றன. கடல் சீற்றத்தை அடுத்து மெரினா கடற்கரை முழுவதுமாக மூடப்பட்டது, பொதுமக்களை போலீசார் வெளியேற்றி வருகின்றனர்.
புயல் காரணமாக பலத்த காற்று விசியத்தல் கோட்டூர்புரத்தில் மரம் விழுந்து 3 கார்கள் சேதமடைந்தன. கார்கள் மீது விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராச்சி ஊழியர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்......
மாண்டஸ் புயல் சென்னை மெரினா பகுதியில், கடலோர பாதுகாப்பு குழுமத்தை சேர்ந்த கமாண்டோ வீரர்கள் மற்றும் தமிழக காவல் துறையை சேர்ந்த தேசிய நீச்சல் வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்
சென்னை விமான நிலையத்தில் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் வரை கார்கள்அணிவகுத்து நின்றன.....

மல்டிலெவல் கார் பார்கிங்கில் செயல்படும் கட்டண சாவடியால் போக்குவரத்து நெரிசல். புயலில் இருந்து தப்பிக்க ஒரே நேரத்தில் கிளம்பியதால் நெரிசல்.
மாண்டஸ் புயலின் கோரத்தாண்டவ அலையின் ஆக்ரோஷமான சிற்றத்தால் எண்ணூரில் கடலரிப்பு ஏற்பட்டுள்ளது. திருவொற்றியூர், காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது
சென்னையில் சூறைக்காற்றுடன் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது!
சென்னையில்20 இடங்களில் விழுந்த மரங்கள் உடனே அப்புறப்படுத்தப்பட்டது. புயல் தொடர்பாக பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தி.மு.கழகத்தலைவர், தமிழ்நாட்டின் முதல்அமைச்சர், மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தி.மு.கழக முதன்மைச் செயலாளர், தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில், அதிகாரிகள் - மாநகராட்சியினரால் சென்னையில் 300 இடங்களில் தேங்கிய மழைநீர் மோட்டார் பம்ப் மூலம் அகற்றப்பட்டு தொடர்ந்து பணிகளும் நடந்துவருகின்றது..
சென்னைக்கும் புதுச்சேரிக்கும் (ECR Road) இடையே போக்குவரத்து சேவை நிறுத்தம்
மாண்டஸ் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு வருகிறது
மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகத்துக்கு ஏற்ப மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. அத்கபட்சம் இரண்டு மணி நேரத்திற்குள்ளாக மீண்டும் மின்விநியோகம் வழங்கப்படும். புயல் பாதிப்பு ஏற்படக்கூடிய மாவட்டங்களில் மின்வாரிய ஊழியர்கள் தொடர்ந்து பணியில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.....

காற்றின் வேகத்திற்கு ஏற்ப மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கே 90 கி.மீ தொலையில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 14 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது எனவும் மாமல்லபுரத்தில் இருந்து 45,கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது.
இன்று இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 02.30 மணிக்குள் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் மாண்டஸ் புயல் கரையை கடக்கும்போது ,காற்றின் வேகத்திற்கு ஏற்ப மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
புயல் கரையை கடக்கும்போது ஏற்படும் மின்சாரம் தொடர்பான பாதிப்புகளை சரிசெய்ய ஊழியர்கள் தயார் நிலையில் இருக்கவும் காற்றின் வேகத்துக்கு ஏற்ப மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது......

மாமல்லபுரத்தை நெருங்கியது மாண்டஸ் புயல்
மணிக்கு, 12. முதல் 14 கி.மீ. வரையிலான வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தகவல்
புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 60-70 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.....
தென்காசி, மதுரை, அரசு நலத்திட்ட விழாக்களில் கலந்துகொண்டு நலத்திட்டங்களை நாட்டுக்கும், மக்களுக்கும் அர்ப்பணித்த, தி.மு.கழகத்தலைவர், தமிழ்நாட்டின் முதல்அமைச்சர், மு.க.ஸ்டாலின், தி.மு.கழக முதன்மைச் செயலாளர், சேலம் மண்டல பொருப்பாளர், தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், உயர்கல்வித்துறை அமைச்சர் பே ராசியர் ., க.பொன்முடி, வருவாய் பேரிடர் துறை அமைச்சர்,கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பத்திரபதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களுடன் சென்னை விரைந்து வந்தார்.

தொடர்ந்து உடனடியாக
சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை கட்டுபாட்டு அறையில் இருந்து புயல் நிலவரம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார். புயல் வெள்ள பாதிப்புக்குள்ளாவதாக கூறப்படும், இடங்கள், கடலில் மையம் கொண்டுள்ள புயல் நிலவரங்களையும் நேரில் பார்வையிட்டு, அங்கிருந்தபடி, அமைச்சர்கள், அதிகாரிகள் துரிதமாகவும், விரைவாகவும், பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடவும், 24. மணிநேரமும் கட்டுபாட்டு மையங்கள் செயல்படவும், உத்தரவிட்டு, தொடர்கண்காணிப்பு பணிகளையும் மேற்கொண்டார்.

புயல்,மழை, வெள்ள தடுப்பு
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஏற்கனவே, ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் தொடர்பு கொண்டு அனைத்துவித நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளாதாகவும்.களநிலவரங்கள் குறித்து கேட்டறிந்து வந்ததாகவும், எந்த மழை வந்தாலும், என்ன காற்றடித்தாலும் அதை சமாளித்து, மக்களை காக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து அரசு ஈடுபட்டு வருகிறது என்று கூறினார்.

மாண்டஸ் புயல் காரணமாக பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைச்சர் கே.என்.நேரு பல்வேறு இடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, ரிப்பன் மாளிகையில் இயங்கிவரும், வெள்ள தடுப்பு, பேரிடர் தடுப்பு, கட்டுப்பாட்டு அறையில் செயல் மையங்களின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்க்கொண்டார்.
சென்னை (கி) மாவட்ட தி.மு.கழக செயலாளர் அமைச்சர், பி.கே.சேகர்பாபு. மக்கள் சுகாதாரத்துறை அமைச்சர் மா,சுப்பிரமணியன். மேயர் ஆர்.ப்ரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார் அரசு உயர்அதிகாரிகள் பலர் உடனிருந்தார்கள்.

தற்போதைய நிலவரத்தின் படி சென்னை மாமல்லபுரத்திலிருந்து சுமார். 10 கிலோமீட்டர் தொலைவிலருந்து, மணிக்கு 12. கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டு, காற்றின் வேகம் 70 கி. லோ.மீட்டர் வேகத்தில், சூரை காற்று வீசும் நிலையில் சென்னையையடுத்த மாமல்லப்புரத்தில் சில மணிநேரங்களில் புயல் மாமல்லபுரம் சுற்றுப்பகுதியில் கரையை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது......

கடும் கடல் கொந்தளிப்பு அப்பகுதியில் ஏற்பட்டுள்ளதாதால்,
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில், பாதுகாப்பு ஏற்பாடுகள்.தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தீவிரப்படுத்தப்பட்டுசுமார், 50,க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 32. குழுவாக, உயர்அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். மேலும் பல்வேறு இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பொதுமக்கள் புயல் வேகமாக கரையை கடந்துவருவது காரணமாக பாதுகாப்பு கருதி, மிகுந்த எச்சரிக்கை கவனமுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது........
அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 102.மி.மீ. மழையளவு பதிவானதாகவும், தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, தேனி, சேலம், கோவை, உள்ளிட்ட தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் கன மழை தொடரும் என்று,தகவல் வெளியாகியுள்ளது....




Comments