top of page
Search

காவல்துறை மக்களின் நண்பனா? ஒரு ஆய்வு பார்வை!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Apr 24, 2023
  • 2 min read

ree

தமிழ்நாடு காவல்துறை மக்களின் நண்பனா? ஒரு சிறு ஆய்வு பார்வை!!


நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற நிதிநிலை அறிக்கை தொடரில்

காவலர்களுக்கு சீருடை படி உயர்வு.. சட்ட ஆலோசகர் என்ற புதிய பணியிடம் - 101 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர்!

காவலர்களுக்கு சீருடைபடியாக ரூ.4,500 வழங்கப்படும் என்று பேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பு!


கூட்டத்தொடரின் இறுதி நாளில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது அப்போது, காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை குறித்த மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். இதில், தமிழக காவல்துறையில் 101 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

ree

காவல்துறை, தீயணைப்பு துறைக்காக சட்ட ஆலோசகர் என்ற புதிய பணியிடம் உருவாக்கப்படும்.

ஆண்டுதோறும் காவல்துறையினருக்கு சீருடைப்படி ரூ.4,500 ஆக உயர்த்தி வழங்கப்படும். காவலர் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை ரூ.30,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

ஆவடி, தாம்பரம் காவல்நிலையங்களில் காவலர்களுக்கு நாள்தோறும் உன்படி ரூ.300 வழங்கப்படும்.

சென்னை புறநகரில் புதிதாக 3 பெருநகர் காவல் நிலையங்கள் அமைக்கப்படும்.

விழுப்புரம் மேல்மலையனூர், உள்ளிட்ட 5 இடங்களில் புதிய தாலுக்கா காவல்நிலையங்கள் அமைக்கப்படும்.,வானகரம், மேடவாக்கம், ஆவடி மற்றும் புதூர் ஆகிய இடங்களில் புதிய காவல்நிலைய்யங்கள் அமைக்கப்படும்.

காஞ்சிபுரம், திருச்சி, நெல்லை உட்பட 4 இடங்களில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் அமைக்கப்படும்.

தாம்பரம் மாநகர் உட்பட்ட பெரும்பாக்கம், ஓட்டேரி உள்ளிட்ட காவல்நிலையங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும்.

பெண் காவலர்களுக்காக சென்னை சிந்தாதிரிபேட்டையில் மகளிர் காவல் விடுதி கட்டப்படும்.

ree

நெல்லை வட்டார தடய அறிவியல் ஆய்வகத்தில் ரூ.10.15 கோடி மதிப்பில் புதிதாக மரபணு ஆய்வுப்பிரிவு உருவாக்கப்படும்.

குற்றவாளிகளை கைது செய்யும் போது பலத்தை பிரயோகிக்காமல் பாதுகாப்பாகவும் சட்ட ரீதியாகவும் அவர்களை கட்டுப்படுத்த 25 ரிமோட் மூலம் விலங்கிடும் Remote Restraint Wrap கருவி வாங்கப்படும்.க்ரிப்டோ கரன்சி மோசடிகளை கண்டுபிடிக்க செயின் பகுப்பாய்வு ரியாக்டர் (Chain Analysis Reactor Tool) கருவி வாங்கப்படும்.க்ரிப்டோ கரன்சியின் மூலத்தையும், சேரும் இடத்தையும் கண்டுபிடிக்க இக்கருவி பயன்படும்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காக சென்னையில் 3,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்.

காவலர் மருத்துவமனை வசதி ஊர்க்காவல் படையினருக்கும் விரிவு படுத்தப்படும்.

பொதுமக்களின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு பதிலளிக்கவும், சமூக வலைதளங்களில் சட்டம் - ஒழுங்கு குறித்துபரப்பப்படும் தகவல்களை உடனுக்குடன் திரட்டி மேல்நடவடிக்கை எடுக்க, சென்னை காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவில் சமூக ஊடகப் பிரிவு உருவாக்கப்படும்.

தடை அறிவியல் துறையில் சிறப்பாக பணியாற்றும் தொழில்நுட்ப பணியாளர்களை,ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கம் வழங்கப்படும்.

கோயம்புத்தூர் மற்றும் ராமநாதபுரம் வட்டார தடை அறிவியல், ஆய்வகங்களில் போதை மருந்து ஆய்வு பிரிவுகள் அமைக்கப்படும் உள்ளிட்ட 101 அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டார்.

ree

அதேசமயம் என்னதான் அரசும், ஆட்சியாளர்களும் காவல்துறையினருக்கு பல்வேறு அடுக்கடுக்கான தொடர் வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தாாலும. கந்தன் புத்தி கவட்டைக்குள் தான் என்பதைப் போலத்தான், ஆட்சிமாற்றம் ஏற்பட்டு 2 ஆண்டுகளை கடந்தும் காவல்துறையினர் மக்களுக்காகத்தான் என்பதை மறந்துவிட்டு ஏதோ மக்களை அதிகார போதையில்,

வெறியாட்டங்களை தொடர்ந்து கட்டவிழ்த்துவிடுவதை வாடிக்கையாக்கி வருவது, தமிழ்நாட்டு மக்களுக்கோ, அரசுக்கோ, ஆட்சியாளர்களுக்கோ நல்லதல்ல என்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்களும், அரசியல் விமர்சகர்களும். அதனை பிரதிபலிக்கும் வகையில் நாகப்பட்டினம் அருகே ஒரு சம்பவம் மீண்டும் அரங்கேறியுள்ளது.


நாகை அடுத்த தமிழக எல்லையான வாஞ்சூர் ரவுண்டானாவில் இருசக்கர வாகனத்தில் சாராய கடத்தலை தடுக்கும் வகையில் திருமருகல் சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட பிற வாகனங்கள்

பேருந்துகள் செல்லமுடியாதபடி காவல்துறையினர் தடுப்பு களை அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து. சமூக ஆர்வலர்கள் சிலர் கண்டித்து நள்ளிரவில் போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை களைத்து போராட்டத்திற்கு தலைமை வகித்த நபரை நாகூர் காவல் உதவி ஆய்வாளர் பழனிவேல் சக போலீசாரின் உதவியுடன், மனித உரிமை மீறல் செயலாக தன்னுடைய

பூட்ட்ஸ் காலால் முகத்தில் உதைத்து கைது செய்தாக தகவல்கள் கூறப்படுகின்றது.


இதுகுறித்து மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கண்டித்து, கண்டனங்களை எழுப்பி பதிவிட்டுள்ளார்கள். இதுபற்றிய தகவல் அறிந்து, நாகை மாவட்ட எஸ்.பி. எஸ்.ஐ.பழனி வேலுவை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்துள்ளார்.

ree

இதுபோன்று, கரூர் மாவட்டம், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் காவல்துறையினரின் மனித உரிமை மீறல் செயல்கள், எடப்பாடி ஆட்சிகாலம் முதல் கூறப்பட்டும் இன்றுவரை உரிய நேரடி விசாரணையோ, நடவடிக்கையோ இன்றுவரை, எந்த அரசுத்துறை அதிகாரிகளும் எடுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டுகளும் இன்றளவும் கூறப்படுகின்றது.


ஆட்சி மாறியும், 10 ஆண்டு அதிமுக ஆட்சிகாலத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்ட கட்டுப்பாடுகளற்ற துறையாகவே, தமிழக காவல்துறை இன்றும் திகழ்வது அரசையும், ஆட்சியாளர்களையும் எங்கு கொண்டுபோய் நிறுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


திருச்சி வின்ஸி.....


 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page