முதல்வரின்தொழில், வேலைவாய்ப்புக்கான வெளிநாடு பயணத்தை கொச்சைபடுத்துவதா? அமைச்சர் கே.என்.நேரு ஆவேசம்!!
- உறியடி செய்திகள்

- May 26, 2023
- 1 min read

மணவை எம்.எஸ்.ராஜா....
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திட, வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ள முதல்வரின் பயணத்தை கொச்சைப்படுத்துவதா? எடப்பாடி தனது சகாக்களோடு வெளிநாடு சென்று என்ன? முதலிடுகளை, தொழில்களை ஏற்பத்தி தந்தார், அரசியல் இருப்பை காட்ட எதை வேண்டுமானாலும் பேசுவதா!
கே.என்.நேரு காட்டமான கேள்வி?
திருச்சியில் தி.மு.கழக முதன்மைச்செயலாளர் சேலம் மாவட்ட பொருப்பாளர், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர், கே.என்.நேரு நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலிளித்து கூறியதாவது!
வருகிற 29-ந் தேதி திருச்சி பகுதி மக்கள் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், பணிகள் முற்றிலுமாக முடிக்கப்பட்ட அரிஸ்டோ மேம்பாலம், தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படவுள்ளது. வேலைஆட்கள் வெளிமாநில தொழிலாளர்கள் பற்றாக்குறைகாரணமாக டெண்டர் எடுத்தவர்கள் காலதாமதமாகிவிட்டதாக தெரிவித்துள்ளார்கள்.
பஞ்சாப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்துநிலையம், உயர் மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள், புதிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள்கள். தீவிரபடுத்தப்பட்டு பணிகள் விரைவாக உரிய தரத்துடன் நடைபெற்று வருகின்றது.
அதிமுக ஆட்சிகாலத்தில் எடப்பாடி தனது சகாக்களுடன் அமெரிக்கா சென்றார். எந்த தொழிலை, திட்டத்தை கொண்டு வந்தார்?
ஆனால் திராவிட மாடல் கழக ஆட்சியின் முதல்வர் தளபதியார் தற்போது சிங்கப்பூர். ஜப்பான் நாடுகளுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க, தொழில்துறை சார்ந்த நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகளையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார்.
2. லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்புப் பெறும் வகையில் ஏற்கனவே பல்வேறு திட்டங்களை கொண்டுவந்து செயல்படுத்தி வருகின்றார்.


இப்படி தமிழ்நாட்டின் வளர்ச்சி, தமிழக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை பெருக்கிட தற்போது அயல்நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். முதல்வரின் இத்தகைய ஆக்கப்பூர்வப் பணிகளை அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், அரசியல் இருப்பை காட்டவே ண்டும் என்பதற்காக முதல்வரின் பயணத்தை உள்நோக்கம் கற்பிக்க முயல்வதும், அரசின் வளர்ச்சி திட்டப் பணிகளை தொழில் முதலீடுகளை பெருக்கும் முயற்சிகளை, கேலி
கிண்டல், குறைகள் கூறுவது, தமிழ்நாட்டின் பொருப்புமிக்க எதிர்கட்சியினருக்கு அழகல்ல, அது நாகரீகமும் அல்ல!
புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை, தி.மு.க. மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மீதும், அரசியலமைப்பு சட்டத்தின் மீதும் நம்பிக்கை கொண்டுள்ள தோழமை கட்சிகள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து, கலந்துகொள்ளவதை தவிர்த்துக் கொண்டுள்ளப்பட்டது.
மாநகர மேயர் அன்பழகன், கலெக்டர் பிரதீப்குமார் மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன், மாவட்ட தி.மு.கழகத்துணைச்செயலாளர்.முத்துச் செல்வன்.உள்பட பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள் உடனிருந்தார்கள்.



முன்னதாக அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி பஞ்சப்பூரில் முதல்கட்டமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நடைபெற்று வரும் ஒருங்கிணைந்த புதிய பேருந்து முனையத்தின் கட்டுமானப் பணிகளை ஆய்வு மேற்க்கொண்டார்.
தி.மு.கழகத்தொடர்ந்து எடமலைப்பட்டிபுதூரில் ரூ.9.90 கோடிமதிப்பீட்டில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட்டுவரும், மாநகராட்சி மாதிரிப் பள்ளி கட்டுமானப் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டு, ஆலோசனைகள் அறிவுறுத்தல் களையும் அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.




Comments