top of page
Search

உதயநிதி ஸ்டாலின் அரசியல் வாரிசா? பித்தம் தலைக்கேறியவர்களின் பித்தம் தெளிய! ஒரு அரசியல் ஆய்வு பார்வை!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Dec 15, 2022
  • 5 min read
ree

மணவை, எம்.எஸ்.ராஜா.


தி.மு.கழக இளைஞரணி செயலாளர். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, எம்.எல்.ஏ. தமிழ்நாடு இளைஞர் நலன் - விளையாட்டு மேம்பாடு-சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அரசியல் வாரிசு என பித்தம் தலைக்கேறியவர்களைப் போல் பேசுபவர்களின் பித்தம் தெளிய, ஒரு அரசியல் ஆய்வுப் பார்வை.....


அரசியலில் ஆளுமையாகும் தகுதியும், சுழலும் உதயநிதி ஸ்டாலுக்கும் உண்டு என்பது, கடந்த 10 ஆண்டுகாலமாக தி.மு.கழகத்தின் அவரின் செயல்பாடுகளும், கட்சி வளர்ச்சி. மக்கள் குறைகள் கோரிக்கைகளை மிக மிக எளிதாக அணுகி கேட்டு புரிந்துகொண்டு, அரசியல் கலப்பிட மற்ற தனது எதார்த்த பேச்சுகளே இதற்கு சான்று மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார் என்பதற்கு உதாரணமாகவும் கூறலாம்.......

ree

இதனை மேலும் உறுதிபடுத்தி யதால்தான், எதிர்கட்சி தலைவரும், முன்னால் முதல்வருமான, எடப்பாடி பழனிசாமி, தமிழகபா.ஜ.க.தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரின் , உதயநிதி ஸ்டாலின் மீதான வாரிசு என்கிறவன்மதாக்குதல் அரசியலில் வெளிப்பாடு

என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

1977ம் ஆண்டு நவ 27ம் தேதி பிறந்த உதயநிதி. அதே பின்னொரு நாளில் ஏற்பட்ட கஜா புயல் பாதிப்புகளையடுத்து தனது பிறந்தநாளை கொண்டாட மறுத்து,

புயல் மற்றும் டெங்கு தொற்றுநோய் பாதிப்புகளுக்கு உதவ வேண்டும் முடிவு எடுத்து அறிவித்தார். அரசியலில் எந்த பொருப்புகளும் இல்லாத 2018ம் ஆண்டுகாலத்திலேயே, அதிமுக அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை கடுமையாக கண்டித்து விமர்ச்சிக்கவும் செய்தார் உதயநிதி ஸ்டாலின்......,

ree

முத்தமிழறிஞர் கலைஞர், அரசியல் போராட்ட களத்தில் கைதாகி சிறை சென்றபோது, சிறுவனாக அவரை சிறையில் போய் சந்தித்த மு.க.ஸ்டாலினைப்போல், அவரின் மகனான உதயநிதி ஸ்டாலினும், தனது தந்தை அரசியல்களத்தில் கைதாகி சிறைக்கு சென்றபோது அவரை துர்கா ஸ்டாலின் வயிற்றில் கருவறையிலிருந்த குழந்தையாக சந்திக்கவும் நேர்ந்தது....

இளம் சிறுவனாக தனது தாத்தா முத்தமிமிழறிஞர் கலைஞர், தளபதி மு.க.ஸ்டாலின் ஆகியோர் கருப்பு சட்டை அணிந்து போராட்ட களத்தில் நின்றபோது குழந்தையாக . உதயநிதி ஸ்டாலினும் உள்ள புகைப்படங்கள் இன்றும், சமூக வலைதளங்களில் உலாவருவதை காணாலாம்.உதயநிதியின் அரசியல் பயணம் என் பது கடந்த, தி.மு.கழக ஆட்சியின்போதே, தளபதி மு.க.ஸ்டாலினின், அன்றைய பிரச்சார பயணங்களிலேயே தொடங்கியது என்றே கூறலாம்..

ree

2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக தி.மு.கழகத் தலைவர், மு.க.ஸ்டாலின் முன்னெடுத்த ஊராட்சி சபைக் கூட்டங்களைப் பல மாவட்டங்களில் திறம்பட நடத்தினார் உதயநிதி ஸ்டாலின். தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் சுற்றி, சுழன்று தி.மு.கழகம் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காகத் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். மக்களுடன் எதார்த்த மொழியில் கலந்துரையாடும் வகையிலான இயல்பான பேச்சு, வாக்காளர்களிடம் மிகப்பெரிய அளவில் மனமாறுதல்களை ஏற்படுத்தியது என்றால், அது மிகையல்ல. அந்தத் தேர்தலில் தி.மு.கழக கூட்டணி வேட்பாளர்கள் 39 தொகுதிகளில் வெல்ல இவரின் பிரசாரத்துக்குக் குறிப்பிடத்தக்கப் பங்குண்டு......

ree

2019-ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி தி.மு.கழக இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டார். இவர் பொறுப்பேற்றபோது கழகம் அதிகாரத்தில் இல்லாதபோதும், இளைஞர் அணியினரைக் கொண்டு மக்கள் பணிகளைச் செய்ய முடிவெடுத்தார். மாநிலம் முழுவதும் தூர்ந்து கிடந்த நீர்நிலைகளைத் தூர்வாரவேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி இதுவரை நூற்றுக்கணக்கான ஏரி குளங்கள் கழக இளைஞர் அணியினரால் தூர்வாரப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.

நீட் தேர்வுக்கு எதிராக, கழக மாணவர் அணியுடன் இணைந்து தொடர் போராட்டங்களை, ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தார். நீட் தேர்வால் தன் இன்னுயிரை இழந்த அனிதாவின் சொந்த ஊரில் அவர் நினைவாக அமைந்துள்ள நூலகத்திற்குச் சென்று தனக்கு அன்பளிப்பாக வந்த புத்தகங்களையும் நூலக மேம்பாட்டுக்கான வளர்ச்சி நிதியையும் வழங்கினார். நீட்டால் உயிரிழந்த மாணவச் செல்வங்களின் வீடுகளுக்கும். நேரில் சென்று ஆறுதல் சொல்லியும், ஏ.கே ராஜன் ஆணையத்தில் நீட்டிற்கு எதிரான தன் நிலைப்பாட்டையும் அதனைப் பதிவு செய்வதும்… என நீட்டிற்கு எதிராக தொடர்ந்து இன்றுவரை தொடர்ந்து போராடி வருகிறார்......

ree

கொரோனா காலத்தில் ஊரடங்கை மட்டும் அறிவித்துவிட்டுச் செயல்படத் திறனின்றி நின்றன பா.ஜ.க.ஒன்றிய, அ.தி.மு.க.மாநில அரசுகள். பேரிடரில் வாழ்வாதாரம் இழந்து தவித்த மக்களுக்கு, உதவிக்கரம் நீட்ட இளைஞர் அணி சார்பாக அனைத்து மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்களின் அலைபேசி எண்ணையும் பொதுவெளியில் வெளியிட்டு, ‘உதவித் தேவைப்படுவோர் அந்தந்த மாவட்ட அமைப்பாளரைத் தொடர்புகொள்ளலாம்’ என அறிவித்து அந்த நலத்திட்டப் பணிகளையும் ஒருங்கிணைத்தார். ஆயிரக்கணக்கான அழைப்புகள் வந்தன, தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர் அணி நிர்வாகிகள் பேரிடரிலும் தங்களை மக்கள் பணியில் ஈடுபடுத்திக் கொண்டனர். மருந்துகள், உணவுப் பொருள்கள் என பல லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஊரடங்கு நாட்களிலும் உதவிகள் கிடைக்கக் காரணமானார்.....

ree

பாராளுமன்றத்தில் நாட்டின் ஒற்றுமைக்கே குந்தகம் விளைவிக்கக்கூடிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது ஒன்றிய பா.ஜ.க அரசு. அதற்குத் துணை நின்றது அன்றைய அ.தி.மு.க.. மதச்சார்பின்மைக்கு எதிரான பா.ஜ.க.-அ.தி.மு.க.வின் போக்கைக் கண்டித்து, தமிழகத்தில் முதல் நபராக இளைஞர் அணியினருடன் களத்தில் இறங்கிப் போராடிக் கைதானர்.

எளிய மக்களின் நம்பிக்கையாக இருக்கும் அரசு வேலைக்கும் ஆபத்தை ஏற்படுத்திய அன்றைய அடிமை ஆட்சியாளர்களின் டி.என்.பி.எஸ்.சி.தேர்வு முறைகேட்டைக் கண்டித்து, கழகமாணவர் அணியுடன் இணைந்து மாபெரும் போராட்டங்களை முன்னெடுத்துப் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்று தந்தார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் பெருமையை சீர்குலைக்கும் வகையில் அதை இரண்டாகப் பிரிக்கவேண்டும் என்ற ஒன்றிய அரசின் முடிவைச் செயல்படுத்தத் துணிந்தார் அன்றைய துணை வேந்தர் சூரப்பா. அவரின் முடிவை அன்றைய அடிமை அ.தி.மு.க. அரசும் ஆமோதித்தது. அம்முடிவைத் திரும்பப்பெறக் கோரி மாணவர் அணியுடன் இணைந்து தமிழகம் தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திக்காட்டினார். இவர் அண்ணா பல்கலைக்கழகத்தின் எதிரிலேயே நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்திற்குத் திரண்ட இளைஞர்-மாணவர்களைக் கண்டு அன்றைய மக்கள் விரோத பா.ஜ.க.-அ.தி.மு.க. அரசு அம்முடிவைத் திரும்பப்பெற்றது.....

ree

சட்டமன்றத் தொகுதிக்குச் சராசரியாக 10 ஆயிரம் பேர் என மொத்தம் 25 லட்சம் புதிய உறுப்பினர்களைக் கழக இளைஞர் அணியில் சேர்க்கும் பணியையும் ஒருங்கிணைத்தார். அவர்களில் திறம்பட பணியாற்றிய 3.5 லட்சம் இளைஞர்களை ஒன்றிய கிளைகளிலும், பகுதி-நகர-பேரூர் வார்டுகளிலும் இளைஞர் அணி நிர்வாகிகளாக நியமித்து, கழகத்துக்குப் புத்துயிர் ஊட்டி வலுப்படுத்தினார். 2021 -ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு இப்பணி நடந்ததால், இளைஞர்கள் தேர்தல் களத்தில் எழுச்சியுடன் பணியாற்றக் காரணமாக அமைந்தது.

அதைத்தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலில் இவரின் பிரசாரம் அனைத்துத் தரப்பினரிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. ‘ஒற்றைச் செங்கல்’ மூலம் ஒன்றிய பா.ஜ.க. அரசு-அ.தி.மு.க. கூட்டணியின் தமிழர் விரோதப் போக்கை உலகறியச் செய்து, தேர்தல் வெற்றிக்குக் குறிப்பிடத்தக்கப் பங்காற்றினார்.....

ree

அந்தத் தேர்தலில் இவரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில், சுமார் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று சட்டமன்ற உறுப்பினரானார். கொரோனா பெருந்தொற்று சமயத்தில் தன் தொகுதியில் உள்ள அனைத்து இல்லங்களுக்கும் அரிசி-மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தன் சொந்த செலவில் வழங்கினார். தொகுதியில் கிட்டத்தட்ட அனைவருக்கும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தும் பணியை ஒருங்கிணைத்தார்.

தொகுதியில் பள்ளி மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம், கல்லூரி மாணவர்களுக்கு ரூ.20 ஆயிரம் எனக் கடந்த கல்வியாண்டில் மட்டும் ஒரு கோடி ரூபாய் கல்வி உதவித்தொகையாக வழங்கியுள்ளார்..

ree

சட்டச் சிக்கல் காரணமாக நீண்டநாட்களாக மின் இணைப்பு வழங்கப்படாமல் இருந்த திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கி, தொகுதி மக்களின் நன்மதிப்பைப் பெற்றார். மாநகராட்சிப் பள்ளிகளைத் தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாற்றியமைக்கும் வகையில் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து சிறந்த திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.

பள்ளி-கல்லூரி பயிலும் மாணவ-மாணவிகளுக்கு உதவும் வகையில் தொகுதி முழுவதும் இலவச இணைய வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளார். தொகுதிக்கென பிரத்தியேக செல்போன் செயலியை உருவாக்கி, தொகுதி மக்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் தெரிந்துகொண்டு விரைந்து நடவடிக்கை எடுத்து அவற்றுக்கு உடனுக்குடன் தீர்வு காண்கிறார். இதனால் குடிநீர், மின்சாரம், கழிவுநீர் அடைப்பு போன்ற அத்தியாவசிய தேவை தொடர்பான பிரச்சினைகள் உடனுக்குடன் தீர்வு காணப்படுவதால், தொகுதி மக்கள் பயனடைந்து வருகின்றனர்..

ree
ree

மாற்றுத்திறனாளிகள் மெரினா கடற்கரையில் கடலுக்கு அருகில் சென்று கடலைக் கண்டு ரசிக்கும் வகையிலான தற்காலிக சிறப்பு நடைபாதையை நிரந்த பாதையாக அமைக்கவேண்டும் என்று பட்ஜெட் கூட்டத்தொடரின்போது இவர் வைத்த கோரிக்கையை தி.மு.கழகத் தலைவர். தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஏற்றுக்கொண்டு நிறைவேற்றியும் தந்தார். அந்த நடைபாதையையும் உதயநிதி ஸ்டாலினே திறந்தும் வைத்தார்.

அடையாறு – கூவம் ஆறுகளை இணைக்கும் பக்கிங்ஹாம் கால்வாய் இவரின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் சுமார் 3.5 கிலோ மீட்டர் பயணிக்கிறது. அதன் கரைகளின் இருபுறங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் கால்வாய் மாசடைந்து கழிவுகளாக ஓடுகிறது. இந்தக் கால்வாயைத் தூர்வாரி சுத்தப்படுத்தி கரைகளை அழகுபடுத்தித் தொடர்ந்து அவற்றைச் சுகாதாரமாகப் பராமரிக்கும் பணியில் சென்னை மாநகராட்சி-குடிநீர் வடிகால் வாரியம்-நீர்வளத்துறை-மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் என பல்வேறு துறைகளை ஒருங்கிணைக்கும் பணியையும் திறம்பட மேற்கொண்டும் வருகிறார்........

ree

‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற திராவிட மாடல் அரசின் நோக்கத்தை மனதில்கொண்டு தன் தொகுதிப் பணி ஒவ்வொன்றிலும் முத்திரை பதித்து முன்மாதிரி சட்டமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார். இன்றைய இளம் தலைமுறையைப் பிரதிபலிக்கக்கூடிய உதயநிதி ஸ்டாலின் , தமிழ்நாட்டின் பெருமைமிகு முன்னெடுப்பான ‘செஸ் ஒலிம்பியாட்’ குழுவில் இடம்பெற்றுக் குறிப்பிடத்தகுந்த வகையில், பல பணிகளை ஒருங்கிணைத்து பாராட்டைப் பெற்றார்.......

ree

மக்கள் பணியைப்போலவே தி.மு.கழகப் பணிகளிலும் தன் முத்திரையைப் பதித்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். ‘ஆட்சிக்கு வந்தால் கட்சியைக் கைவிட்டுவிடுவார்கள்’ என்ற வழக்குமொழிக்கு மாற்றாகக் கழகத்தின் கொள்கைகளை, போராட்ட வரலாற்றை, அதன் மூலம் தமிழ்நாடு பெற்ற பலன்களை இளைஞர் அணியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில், ‘திராவிட மாடல் பயிற்சிப் பாசறை’யைத் தொகுதிவாரியாக நடத்தி முடித்துள்ளார்.

இளைஞர்களை, இயக்கத்தை நோக்கி அழைத்து வர ‘பாசறை’ போன்ற கொள்கை பரப்பும் பணிகள் ஒருபுறம் என்றால், கழக வளர்ச்சிக்கு உழைத்த முன்னோடிகளை கவுரவித்து உதவிடும் வகையில், 'இனி நான் எந்த மாவட்டத்திற்குச் சென்றாலும் அங்கு முன்னோடிகளுக்குப் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நிச்சயம் இடம்பெறும்' என அறிவித்து அவற்றைச் செயல்படுத்தியும் வருகிறார்......

ree

திராவிட மாடல் அரசின் மக்கள் நலத்திட்டங்களால் ஈர்க்கப்பட்டு கழகத்தை நோக்கி வரும் இளைஞர்களை வீடுவீடாக சென்று அணியில் சேர்க்கும் இல்லந்தோறும் இளைஞர் அணி’ என்ற முன்னெடுப்பின் மூலம் கழகத்தை அடுத்த தலைமுறையினரிடமும் கொண்டு சேர்க்கிறார்.

இவரின் கழகப் பணியை அங்கீகரிக்கும் வகையில், தலைவர் உள்ளிட்ட தலைமைக் கழகம் இவரை மீண்டும் இளைஞர் அணி செயலாளராகப் பணியாற்றும் வாய்ப்பை வழங்கியது. அதேபோல் மிகச்சிறப்பாக பணியாற்றிய மாவட்ட அமைப்பாளர்கள் 9 பேரை இளைஞர் அணி துணைச் செயலாளர்களாகப் பொறுப்புயர்வும் வழங்கப்பட்டது.

அதேபோல் மாவட்ட அமைப்பாளர்-துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கான இடங்களை நேர்காணல் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பையும் வெளியிட்டு, அப்பணியிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டுள்ளார்.

ree

இவரின் கழகப் பணி - மக்கள் பணிகளை அங்கீகரிக்கும் வகையில், தமிழ்நாட்டின் முதலமைச்சர், மு.க.ஸ்டாலின். மூத்த முன்னோடி அமைச்சர் பெருமக்கள் - கழக நிர்வாகிகளின் ஆலோசனைகள், வலியுறுத்தல்களை தொடர்ந்து

தி.மு.கழக அமைச்சரவையில் இணைத்து மக்கள் பணியாற்றும் வாய்ப்பை வழங்க இருக்கிறார்கள்.

பக்கத்து மாநிலத்தில் ஐபிஎஸ் ஆக இருந்தவரை ஒரே ஆண்டில் நல்லவர், வல்லவர், ஆடு வளர்க்கும் விவசாயி, சிறந்த நிர்வாகி என்றெல்லாம் புரளியை கிளப்பி,ப்ரமோட். செய்து, திட்டமிட்டபடி திடீரென்று கட்சியில் சேர்த்து எந்த கேள்வியும் எழாமல் மாநில தலைவராக்கிய அந்த சாகசமும், பொருளாதார பின்னணியும், அரசியல் நெட்வொர்க்கும் இருக்கும் நாட்டில், அவற்றை எதிர்கொள்ள. திராவிட சித்தாந்த கட்சிகளில் உழைப்பவர்களை முன்னிருத்துவதால், அதுவாரிசு அரசியல் அரசியல் என்றால் அதனை தவிர்க்கவே முடியாது. என்கின்றனர் விபரமறிந்தவர்கள்

ree
ree

உதயநிதி, அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் வாரிசு என்பதால் பதவி கொடுக்கப்பட்டதாக சிலர் விமர்சனம் செய்துவந்தனர். இங்கு உழைப்புக்கே இடம். உழைப்பவரை ஏற்க தயாராக இருக்கிறார்கள். வாரிசு என்ற பெயரில் உதயநிதி திணிக்கப்படவில்லை”

இளைஞர் நலத்துறைக்கு அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றிருப்பது மகிழ்ச்சிதான். இளைஞர்கள், மாணவர்களை சர்வதேச தரத்தில் கொண்டுவரும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. விளையாட்டுத் துறையில் மாணவ, மாணவிகளை அவர் நிச்சயமாக மேம்படுத்துவார்.

ரூ.600 கோடி அளவில் சென்னையில் சர்வதேச அளவிலான விளையாட்டு மைதானத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிறுவ இருக்கிறார். தென்பகுதியான ராதாபுரம் தொகுதியிலும் சர்வதேச அளவிலான விளையாட்டு அரங்கை அவர் தொடங்க இருக்கிறார். விளையாட்டுத்துறையை இந்த அரசு மிகுந்த கவனத்தோடு செயல்படுத்தி வருகிறது. இந்த தி.மு.க அரசுதான், ஒவ்வொரு எம்.எல்.ஏ-க்கும் அவர்களின் தொகுதியில் ஒரு ஸ்டேடியத்தை அறிவித்து விளையாட்டை ஊக்குவிக்கிறது. அதற்கு அமைச்சராக சரியான இளைஞர் கிடைத்திருக்கிறார்.

இளம் வயதிலேயே உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக தமிழகத்துக்கு கிடைத்திருப்பது பெருமைதான்.......

ree

அவரை பார்க்கும் போது அவரின் தாத்தா தான் நினைவுக்கு வருவார். முத்தமிழறிஞர்.கலைஞரை போல மற்றவரை புண்படுத்தாமல் பேசும் திறன் கொண்டவர் உதயநிதி. அவரை அமைச்சராக்கியது வாரிசு அரசியல் எனப் பேசுகிறார்கள்.

முதன்முதலில் கருணாநிதி முதலமைச்சராக பதவிக்கு வரும்போது அண்ணா ஆட்சி போல இருக்காது என்றனர். அவர் மறைவுக்குப் பிறகு மு.க ஸ்டாலின் முதலமைச்சராகும்போது வாரிசு அரசியல் என்றுதான் கூறினர். இந்த இளம் வயதில் தன் குடும்ப வாழ்க்கையில் பல சந்தோஷங்கள், கனவுகளை விட்டுவிட்டு, நாட்டுக்காக ஒருவர் உழைப்பதற்கு முன் வந்திருப்பது பெருமைக்குறியது. எனவே அதை குறுகிய வட்டத்தில் பார்க்க வேண்டாம். என்கிற தி.மு.கழகத்தினரின் விளக்கங்களையும், எளிதில்புறம்தள்ளிவிட முடியாது.....

ree

எனவே,வாரிசு அரசியலை அந்தந்த கட்சியின் சூழலும் நேரமும் முடிவு செய்யும். அவர் அரசியல் வாரிசா, 'கொள்கைகளை ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப பணியாற்ற வார? மக்களுக்கும். தி.மு.கழகத்தின் வளர்ச்சிக்கும் ஏற்றம் பெறும் வகையில் பணியாற்றுவரா என்பதை வருங்காலங்களில் தி.மு.கழகத்தினரும், கூட்டணி கட்சியினரும், வாக்காளர்களும்தான் முடிவு செய்வார்கள்.

என்பதை அரசியலில் பழம் தின்றுகொட்டை போட்ட சில அதிமேதா விகளுக்கு இதற்கு மேலும்,யாரும் புரியவைக்க முடியாதுஎன்பதே அரசியல் விமர்சர்கள் - நடுநிலையாளர்கள். சங்பரிவார - மத அரசியலை ஒடுக்கி. நாட்டையும். மக்களையும் காக்க வேண்டும் என்கிற சராசரி மனிதர்கள் உள்ளிட்டவர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது..

ree

தி.மு.கழக இளைஞரணிச் செயலாளர். தமிழக இளைஞர் நலன் - விளையாட்டு-சிறப்பு திட்டச்செயலாக்கத்துறைஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முத்தமிழறிஞர் கலைஞரின் வழிதடத்தில், தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையிலும், கழகப் பணிகளிலும், தமிழ்நாட்டு மக்களின் மனதில் என்றென்றும் நிலைத்துநின்று சிறப்புற நாமும் வாழ்த்துவோம்....

சிறப்பு,செய்திக்குழு

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page