நாடாளுமன்றத்தில் சிறுபான்மை மக்களை தரம்தாழ்த்தி பேசுவதா? பா.ஜ.எம்.பி.க்கு குவியும் கண்டனங்கள்!
- உறியடி செய்திகள்

- Sep 26, 2023
- 2 min read

மூத்தப்பத்திரிக்கையாளர் ராஜா....
நாடாளுமன்றத்தில் சிறுபான்மை மக்களை தரம்தாழ்த்தி பேசுவதா? பா.ஜ.எம்.பி.க்கு குவியும் கண்டனங்கள்!
நாடாளுமன்றத்தில் பாஜக எம்பி யின் எல்லைமீறிய சபை நாகரீநகமற்றபகீர் பேச்சு! டென்ஷனான சபாநாயகர் வார்னிங் விடுத்த சம்பவம்! எங்கே, எதை நோக்கி செல்கிறது நாடாளுமன்ற நடவடிக்கைகள்! ஆளும்கட்சியின் அடவாடியா? கண்டனம் எழுப்பிய எம்.பிக்கள்!
நாடாளுமன்றத்தில் பாஜக எம்பி ரமேஷ் பிதுரி மிக மோசமான காதில் கேட்கவே முடியாத வார்த்தைகளால் சமாஜ்வாடி எம்பி டேனிஷ் அலியை பார்த்துப் பேசிய சம்பவம் எதிர்க்கட்சிகளைக் கொந்தளிக்க வைத்துள்ளது.!
நாடாளுமன்றஅவையில் மிக மோசமான சம்பவமும் அரங்கேறியுள்ளது.!

நாடாளுமன்றத்தில் பேசிய பாஜக எம்பி ரமேஷ் பிதுரி சமாஜ்வாதி எம்பி டேனிஷ் அலியை பார்த்து மிக மோசமான காதில் கேட்கவே முடியாத வார்த்தைகளால் பேசினார்.!
மேலும், வகுப்புவாத கருத்துகளையும் அவர் டேனிஷ் அலியை பார்த்துக் கூறியுள்ளார்.!
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் ரமேஷ் பிதுரியை கடுமையாக எச்சரித்தார்.!
மேலும், அவரது கருத்துக்களும் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன.
லோக்சபாவில் சந்திரயான் வெற்றி குறித்து நடந்த விவாதத்தின் போது தான் இந்தச் சம்பவம் நடந்தது.!

இந்த விவாதத்தில் இஸ்லாமிய முஸ்லிம் எம்பி டேனிஷ் அலியை பார்த்து ரமேஷ் பிதுரி மோசமான மற்றும் வகுப்புவாத வார்த்தைகளைப் பயன்படுத்தினார்.!
அவரது பேச்சைக் கண்டித்துள்ள ஒம் பிர்லா மீண்டும் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.!
பா.ஜ.எம்.பி. ரமேஷ் பிதுரியின் பேச்சு குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.!
பல்வேறு தலைவர்களும் ரமேஷ் பிதுரியின் பேச்சு வீடியோவை பகிர்ந்து அவரை கடுமையாக விமர்சித்துள்ளனர்!.

டேனிஷ் அலியை பார்த்து ரமேஷ் காதிலேயே கேட்க முடியாத மிக மோசமான மற்றும் இஸ்லாமிய வெறுப்பு வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்!.
நாடாளுமன்றத்திலேயே அவர் இப்படிப் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருகில் முன்னாள் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இருக்கிறார். அவரும் இந்த மோசமான பேச்சை எதுவும் கண்டிக்கவில்லை.!
இதற்கிடையே டேனிஷ் அலி சபாநாயகருக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர், "உங்கள் தலைமையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடந்த அவை நடவடிக்கையின்போது இது நடந்ததுள்ளது.!
சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த எம்.பி.யாக உள்ள எனக்கு இச்சம்பவம் மிகுந்தமனவேதனையை அளிக்கிறது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்!.
அவர் மட்டுமின்றி பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் பா.ஜ.க எம்.பி.யின் பேச்சை மிகக் கடுமையாகச் சாடினர். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.உங்கள் எம்பி என்ன பேசியுள்ளார் என்பதைப் பாருங்கள்.. முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் பிரதானமாக முன்னிறுத்துகிறார்கள்!
. இந்தளவுக்கு வெறுப்பைப் பரப்பும் பாஜகவை மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்!.
அவர் எங்களைப் பயங்கரவாதி என்று அழைத்தால் ஓகே எப்போதும் சொல்வது எனக் கடந்து போகலாம்!

. ஆனால், ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தையும் பார்த்து மோசமான வார்த்தைகளால் பயன்படுத்தியுள்ளார். அதை ஏற்க முடியாது"
இவ்வாறு கூறியுள்ளார்கள்.
இது சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்தை பதிவிடும்வகையில்
வைரலாகி வருகிறது.!
சனாதனம் என்ன செய்யும்..?
ஜனாதிபதியாகவே இருந்தாலும் அவர் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்றால் அவரை புதிய நாடாளுமன்றத்திற்குள் நுழைய விடாமல் விரட்டி அடிக்கும்.. ஆனால் உயர்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்றால் அவர் ஒரு சினிமா நடிகையாக இருந்தால்கூட பல்லிளித்து வரவேற்கும்..
சனாதனம் இதைத்தான் செய்யும்.. இதுதான் நிலையானது மாற்ற முடியாதது என்றும் இதைத்தான் அழிக்க முடியாது அழிக்கவே கூடாது என கூறிவருகிறது!
சனாதனம்..
சைக்கோக்களின் கொள்கை.. அடித்து ஒழித்து புதைக்க வேண்டிய ஒன்று என்பதில் மாற்றுக் கருத்து இல்லை..!
10. ஆண்டுகள் ஆட்சி பொருப்பிலிருக்கும் பா.ஜ.எம்.பி.ஒருவர் இப்படி பேசியுள்ள கருத்துக்கள், ஏற்கனவே ஜனாதிபதி சர்ச்சை விசுவரூபம் எடுத்துவரும் வேளையில், தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பழங்குடியினத்தவர், மற்றும் சிறுபான்மை மக்களிடத்தில் எத்தகைய எதிர்வினையை வரும் 2024. நாடாளுமன்ற தே ர்தலில் ஏற்படுத்த போகிறது என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.! என்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள்!




Comments