கோவை சம்பவத்தில் பாஜக அரசியல் செய்ய நினைப்பது துரதிஸ்டவசமானாது! கனிமொழி கருணாநிதி பேட்டி!!
- உறியடி செய்திகள்

- Oct 29, 2022
- 1 min read

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் பா.ஜ.க. அரசியல் லாபம் தேட நினைப்பது, துரஸ்திட வசமானதாடும், கனிமொழி கருணாநிதி......
தூத்துக்குடியில் தி.மு.கழக துணை பொதுச்செலாளர். மகளிரணி செயலாளர், நாடாளுமன்ற தி.மு.கழக உறுப்பினர்கள் குழுத் துணைத் தலைவர், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி செய்தியாளர்களிடம் கூறியதாவது.....
தமிழர்களையும், தமிழ்மொழியையும் யார் அழிக்க நினைக்கிறார்கள் யார் பாதுகாக்க பாடுபடுகின்றார்கள். இந்தி மொழியை எப்படியெல்லாம், யாரெல்லாம் மீண்டும். மீண்டும் திணிக்க முயலுகின்றார்கள் என்று உலகமுழுவதுமுள்ள இன, மொழி உணர்வுள்ள அனைத்து தமிழர்கள், அனைவருக்கும் மிக நன்றாகவே தெரியும்.
இலங்கை தமிழர்கள் நம் தொப்புள்கொடி உறவுகள், நம்மில் ஒருவராக வாழ்பவர்கள் என்று தொடர்ந்து, இலங்கை தமிழர்களுக்காக அனைத்து வகையிலும், நமது கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் எப்படி பட்ட திட்டங்களை செயல்படுத்தி வருவதுடன், ஒன்றிய அரசின் கவனத்தையும், இலங்கை தமிழர்களுக்கான நல்வாழ்வுக்காக செயல்பட வலியுறுத்தியும் வருகின்றார்.....
தமிழ்நாட்டின் ஆட்சிப் பொருப்பை ஏற்ற காலத்திலிருந்து தன் தூக்கம் முதல், சுய'தூக்கங்களை கூட தவிர்த்துவிட்டு, தமிழ் மக்களுக்குகாக, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக அர்ப்பணி உணர்வோடு, எவ்வளவோ சோதனைகள் இடையூறுகளை அரசியல் ரீதியாகபலர் ஏற்படுத்தினாலும், தமிழர்கள், இனம், மொழி காக்கப்பட வேண்டும் என்று இரவு - பகலாக நம் முதல்வர் பணியாற்றி வருகிறார் என்பதை நாடும் நாட்டு மக்களும், பிற தலைவர்களும் நன்கு அறிவார்கள்......

தூத்துக்குடியில், முதல்வர் .நம் தளபதி,மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலோடு, இலங்கை பாரம்பரிய உணவான ஓலைப்புட்டு விற்பனை உணவகம் திறக்கப்பட்டு, அதனை முழுக்க இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு இல்லங்களை (முகாம்களை) சேர்ந்த பெண்களே மிகவும் சிறப்பாக நடத்தி வருகின்றார்கள்...
கோவையில் நடந்த கார்வெடிப்பு சம்பவம், அதனை வைத்து அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். தவறு செய்தவர்கள் யாராகயிருந்தாலும், சட்டப்படி கைது செய்து உரிய நடவடிக்கைகளை முதல்வரின் உத்தரவுப்படி எடுக்கப்பட்டு வருகின்றது. தவறு நடந்துள்ளது, அதிலிருந்து மக்களை பாதுகாப்பதற்க்கு, உடனடியாக தலைமைச் செயலகத்தில் சம்பத்தப்பட்ட அதிகாரிகளை வரவழைத்து தீவிர ஆலோசனை நடத்தி உரிய தொடர்நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றது.........
மேலும் இவ்விசயத்தில் மிகவும் கவனமாகவும், உன்னிப்பாகவும் தொடர் கவனம் செலுத்தி தமிழ்நாடு அரசு அடுத்தடுத்த கட்ட நடவடிக்கைகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்தும் வருகின்றது........
இப்படிப்பட்ட துரதிஸ்டவசமான காலகட்டத்தில், பா.ஜ.க. இவ்விவகாரத்தில், மக்கள் நலனை, மறந்து தொடர்ந்து அரசியலாக்க வேண்டும், சகோதரத்துடன், உறவுகளாக வாழும் மக்களுக்கிடையே இன்னம் பிரித்தாலும் சூழலைஅதிகபடுத்த வேண்டுமென்கிற வகையில், மேலும், மேலும், இக்கட்டான இந்த காலகட்டத்தில், கோவை சம்பவத்தை வைத்து,அரசியல் செய்வது மிக தவறான முன்னுதாரம் மட்டுமின்றி, மிகவும்தவறான முன்னுதாரணம் மட்டுமின்றி, மக்கள் விரோதசெயலும் ஆகும்.
இவ்வாறாக அவர் கூறினார்...




Comments