கூட்டிகழிச்சிபேசினாலும் சிக்கலா! பா.ஜ. அண்ணாமலைக்கு பத்திரிக்கையாளர்கள் கண்டனம்! மேதினம் விடிவாகுமா?
- உறியடி செய்திகள்

- May 1, 2023
- 1 min read

சென்னையில் செய்தியாளர்கள் மீது ஆத்திரப்பட்ட பாஜக தலைவர் அண்ணாமலை!
சென்னை பத்திரிகையாளர் மன்றம் - பத்திரிக்கையாளர்கள் கண்டனம்!!
தொடரும் இந்த போக்கு ஆரோக்கியமானதல்ல !!!
நேற்று ஏப்,30- ஞாயிறன்று சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை.இந்த செய்தியாளர் சந்திப்பில் ,திமுக தலைவர்கள் மீது அண்ணாமலை சுமத்திய குற்றச்சாட்டுகள் தொடர்பாக செய்தியாளர் ஒருவர் ,அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது 2010 கோடி ரூபாய் என்ற தொகையை சுட்டிக்காட்டியது எந்த அடிப்படையிலானது ? என்ற கேள்வியைக் கேட்டுள்ளார். உடனே இந்த கேள்விக்கு கோபப்பட்ட அண்ணாமலை ,கேள்விக்கு பதில் தராமல் ,”வாங்குற சம்பளத்துக்கு வேலை செய்யுங்க, சாப்பிடற சாப்பாடு அப்பதான் ஒட்டும் ,செய்தியை போடச் சொல்லி கெஞ்சவில்லை “என்றெல்லாம் ஆத்திரத்தைக் கொட்டித் தீர்த்திருக்கிறார்.எதற்கு இந்த ஆத்திரமும் அச்சுறுத்தும் போக்கும்?தொடரும் இந்த நிதானமிழந்த செயலை சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டிக்கிறது.
இந்த ஒரு வாரத்தில் மட்டும். செய்தி வெளியிட்ட காரணத்திற்காக இரு செய்தியாளர்கள் மீது காவல்துறையால் இரு வழக்குகள் சேலத்திலும் தாம்பரத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.விவரங்கள் தனியாக விரைவில்....




Comments