top of page
Search

ஐ.டி.சோதனை ஒன்றும் புதிதல்ல! ஒரு சதுர அடி நிலம் கூடவாங்க வில்லை! அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்!!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • May 26, 2023
  • 2 min read
ree

மணவை எம்.எஸ்.ராஜா....


குறிவைக்கபட்டாரா செந்தில்பாலாஜி!



தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை - எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்கட்சியினரின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் மின்சாரம்,மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் கரூர் வி.செந்தில்பாலாஜி!


செந்தில் பாலாஜியின் கேள்விகளுக்கும். அதேசமயம் பா.ஜ. அதிமுக, வினரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலிக்கும் விதத்தையும் கண்டு அண்ணாமலை, எடப்பாடி தரப்பு திக்குமுக்காடி வந்ததாகவும் இதனால் மக்கள் மத்தியில் இவர்களின் குற்றசாட்டுகள் மழுங்கி போனதாகவும் இதனால் வெகுண்டு எழுந்த அண்ணாமலை - எடப்பாடி தரப்பினர் கடும் கொந்தளிப்பிலிருந்த நிலையில், அண்ணாமலையோ ஒரு படி மேலேபோய் கடந்த வாரம் செந்தில்பாலாஜி நெருக்கடிக்கடிக்கு ஆளாக்கப்படுவார் என்று சூசமாக பேசியதாகவும், குற்றம்சாட்டி வருகின்றனர் தி.மு.க.வினர்.


கரூரில் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்வீட்டில் வருமானவரித் துறை பெண் அதிகாரி ஒருவர் சோதனைக்காக செல்ல முயன்றார். அப்போது அவரது அடையாள அட்டையை காண்பிக்குமாறு அங்கிருந்த திமுகவினர் கேள்வி கேட்டனர். இதனால் திமுகவினருக்கும் பெண் அதிகாரிக்கும் இடையேகடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது அந்தப் பெண் அதிகாரி, குமார் என்ற திமுக தொண்டரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த திமுக தொண்டர் குமார் திடீரென மயக்கம் அடைந்தார். பின்னர் அவரை ஆம்புலன்ஸ் மூலம் திமுகவினர் கருரில் தனியார் மருத்துவமனையில்அனுமதித்தனர்.

இதனிடையே குமாரை தாக்கிய பெண் அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கூறி திமுகவினர் அவரது காரை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த கரூர் நகர காவல் நிலையத்தினர் திமுகவினரை சமாதானம் செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து காருடன் பெண் அதிகாரியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.


இந்நிலையில், இன்றைய தினம் நடைபெற்று வரும்,வருமானவரித்துறை

சோதனை குறித்து பேசிய போது

ஐ.டி. சோதனை ஒன்றும் புதிதல்ல என்று செந்தில் பாலாஜி கூறினார்.


சட்டமன்ற தேர்தலின்போதே வருமான வரிச் சோதனையை எதிர்கொண்டோம். வருமான வரிச்சோதனை ஒன்றும் எங்களுக்குப் புதிதல்ல என்று தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரிச்சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

ree

அப்போது அவர் கூறியதாவது, பாதுகாப்பைக் கேட்காமலேயே தமிழக காவல்துறையினர் எவ்வாறு பாதுகாப்பை வழங்குவார்கள் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மேலும், வருமான வரிச்சோதனை முடிவடைந்த பிறகு, முழு விவரங்களுடன் விளக்கம் அளிக்கிறேன். சட்டமன்ற தேர்தலின்போதே வருமான வரிச் சோதனயை எதிர்கொண்டோம். வருமான வரிச்சோதனை ஒன்றும் எங்களுக்குப் புதிதல்ல என்றும், வருமான வரிச்சோதனை நடத்தி வரும் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். மேலும்

எனது சென்னை மற்றும் கரூர் வீடுகளில் சோதனை நடைபெறவில்லை. எனது சகோதர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் இல்லங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சோதனைக்கு வரும் போது சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் இது குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி விளக்கம் அளித்துள்ளார்.


சோதனை நடைபெறும் இடங்களில் ஆதரவாளர்கள் யாரும் இருக்கக் கூடாது. அதிகாரிகளுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று நான் அறிவுறுத்தியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். 2006ஆம் ஆண்டு முதல், இன்று வரை ஒரு சதுர அடி நிலத்தைக் கூட நானோ எனது குடும்பத்தினரோ பதிவு செய்யவில்லை. நண்பர் வீட்டில், கேட்டை திறப்பதற்கு முன்பே, வருமான வரித்துறை அதிகாரிகள் சுவர் ஏறிக் குதித்துச் சென்றுள்ளனர். இது ஏன் என்றும் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியிருக்கிறார்.


அதேசமயம் அமைச்சர் செந்தில்பாலாஜி தம்பி அசோக் மற்றும் அவரது நண்பர்கள் உறவினர்கள் இடங்களில் இன்றைய வருமானவரித்துறை, சோதனை அமைச்சர் செந்தில்பாலாஜியை மிரட்டி அச்சுறுத்தும் வகையிலான முழுக்க, முழுக்க அரசியல் உள்நோக்கம்,காழ்ப்புணர்ச்சி கொண்ட பழிவாங்கும் போக்கு என்கின்றனர் தி.மு.கவினர்......


பா.ஜ அமைந்த கடந்த காலங்களில் பொது பொருப்பு வசித்தவர்கள் மீது நடத்தப்பட்ட

சோதனைகளின் முடிவுகள் இன்றுவரை விடை தெரியா கன்னித்தீவுக்கதையைப் போன்றே வுள்ளது என்கிற விமர்சனங்களும் குறிப்பிடதக்க ஒன்றாகவே அரசியல் பார்வையாளர்களால் விமர்சிக்கப்பட்டும் வருகின்றது!


 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page