ஜெ. ஊழல் குற்றவாளி அண்ணாமலை! கொதிப்பில் அதிமுகவினர்! மெளனம் காக்கும் எடப்பாடி! அடுத்த கட்ட நகர்வு!..
- உறியடி செய்திகள்

- Jun 12, 2023
- 1 min read

மணவை எம்.எஸ்.ராஜா....
ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்று அண்ணாமலை பேசியதால், அதிமுகவினர் அதிர்ச்சி!
எடப்பாடியின் மெளனம் எத்தகைய முடிவுகளை ஏற்படுத்தும் என்கிற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் அக்கட்சியினர் மத்தியில் மிகுந்தபரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளதாகவே கூறப்படுகின்றது!
தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை அடிக்கடி சர்ச்சைமிகுந்த கருத்துக்களை கூறி, அதனை எதிர்கொள்ளுவதும் புதிதல்ல என்பது தமிழக அரசியல் பார்வையாளர்களின் கருத்து! இந்நிலையில் திடீரென்று ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்று அண்ணாமலையின் விமர்சனத்தால் , அதிமுகவினர் மட்டுமில்லாது அரசியல் வட்டாரத்தில் பலரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

ஒருபுறம் கூட்டணி என்று கூறிக்கொண்டு ஜெயலலிதா தண்டிக்கப்பட்டதை பற்றி அண்ணாமலை கூறியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதால்தான் தமிழ்நாடு ஊழல் மயமாகிவிட்டது என்று கூறியதாக கூறப்படும் நிலையில் அதிமுகவின் அடிமட்ட தொண்டன் முதல் முண்ணனி தலைவர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் மாஜி ஜெயக்குமார்,பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை போதுமான அனுபவம் இல்லாமல், தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் கருத்துகளைக் கூறும் சூழ்நிலைகள் வரும்போது இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது, டெல்லியில் உள்ள பாஜக தலைவர்களின் கடமையாக இருக்கும்" என்று அவர் கூறினார்.
தொடர்ந்து அண்ணாமலையின் விமர்சித்திற்கு கடும் எதிர்வினையும் ஆற்றிவருகின்றனர்
தொடர்ந்து அண்ணாமலையின் விமர்சித்திற்கு கடும் எதிர்வினையும் ஆற்றிவருகின்றனர்!
இது எங்கே போய் நிற்குமோ!
ஒருவேளை தாமசோ! தாமசு என்று ஆகிவிடுமோ!
சரி சரி தமிழக லேட்டஸ் அரசியல்லே இதெல்லாம் சகஜம்தானே! புதுசா என்ன? என்பதையும் எளிதில் கடந்து செல்லவும் முடியவில்லை!




அதிமுக பாஜகவினிரிடையே ஏற்பட்டிருக்கிற வாக்குவாதத்தை நம்ப கூடாது.வாக்குவாதங்கள் சண்டை இருப்பது போல் காண்பித்து தேர்தலிற்கு அருகாமையில் திமுக கூட்டணி கட்சிகளை தன்பக்கம் இழுப்பதற்கு முயல்வர்.ஒருவேளை திமுக கூட்டணி முறிந்தால் இறுதியில் அதிமுக,பாஜக ஒன்று சேர்ந்து தேர்தலில் போட்டியிடுவார்கள்.தமிழக மக்களே பாஜக எந்த ரூபத்தில் வந்தாலும் பாஜக,அதிமுக கட்சிகளை தோல்வியுற செய்ய வேண்டும்.இரு கட்சிகளும் தோல்வி அடைந்தால் தமிழகத்திற்கு மிகவும் நல்லது.