top of page
Search

ஜெ.மரணம் சசிகலா பதில் சொல்லியே ஆகவேண்டும்! எடப்பாடி-ஓ.பி.எஸ் நாடகமாடுகின்றனர்!!ஜெ.தீபா பேட்டி!!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Oct 22, 2022
  • 1 min read
ree

கோடிகோடியாய் சம்பாதித்த சசிகலா அதிமுக தலைவர்கள் ஏன் என் அத்தை ஜெயலலிதாவை காப்பாற்ற முன்வரவில்லை அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஜெ.தீபா பேட்டி....


ஜெ.அண்ணன் மகள் ஜெ.தீபா நிருபர்களிடம் கூறியதாவது....


எம்.ஜி.ஆர்.காலத்தில் இவ்வளவு தொழில்நுட்ப வசதிகள் கிடையாது, இருந்தாலும் நோய்வாய்பட்டபோது அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், நோய்பாதிப்புகள் பற்றி விசயங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு வெளிநாட்டில் சிசிச்சையும் அளிக்கப்பட்டது........


இதுபோல, சசிகலாவும், அவரால் கோடிகோடியாய் சம்பாதித்த அதிமுக தலைவர்களும் ஏன் ஜெ.வை காப்பாற்ற முன்வரவில்லை, ஜெ.வுக்கு என்ன நடந்தது என்பதை மூடி மறைக்க வேண்டிய அவசியம் என்ன?

ree

முதல்வராகயிருந்த ஜெ.எப்படி இறந்தார் என்பதை மக்களுக்கு தெரியபடுத்த வேண்டிய கடமை இவர்களுக்கும். ஆட்சியாளர்களுக்கும், சசிகலாவுக்கும் உண்டு. எனது அத்தை உயிரிழந்ததிற்க்கு அவரை சுற்றியிருந்தவர்கள்தான் காரணம். ஜெ.யிடம் கொடுத்த உறுதிமொழியை மீறி சசிகலா, ஜெ.வின் நாற்காலியில் அமரவே ஆசைப்பட்டார்.

அதனாலேயே ஜெ.வுக்கு உரிய சிசிச்சை அளிக்கப்படவில்லை என்பது குற்றசாட்டு, நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை அடிப்படையில் தவறு செய்த அனைவரையும் தண்டிக்க வேண்டும்....

எனது அத்தை ஜெ. மரண மர்மங்களையும் வெளிகொண்டுவர வேண்டும். இந்த விசயத்தில் அப்போதைய ஆட்சியாளர்கள், அதிகாரிகள் கடமை தவறியது யிருப்பது உறுதியாகியுள்ளது. எனவே இதுதொடர்பான அனைவரையும் விசாரனைவலையத்திற்க்குள் கொண்டுவந்த தண்டனை பெற்றுத்தர வேண்டும்.......

ree

இப்போது சசிகலா கூறுவதை எப்படி ஏற்க முடியும் எனது அத்தைஜெ. சிகிச்சையின்போது ஏன் எங்களை பார்க்க அனுமதிக்கவில்லை ,

எனவே எனது அத்தைமரணத்திற்கான பதில் சொல்லவேண்டிய முழு பொருப்பு சசிகலாவுக்கு உண்டு,

அதிமுக,வில் எடப்பாடியும் - ஓ.பி.எஸ்.ம் மிகப்பெரிய நாடகமாடு கிறார்கள்.....

இவ்வாறாக அவர் கூறினார்....

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page