ஜெ. மரண விசாரணைக்கு அஞ்சி நீதிமன்றம் செல்ல முயற்சியா! ரகசியத்தை போட்டுடைத்த ஓ.பி.எஸ்!!
- உறியடி செய்திகள்

- Oct 21, 2022
- 1 min read

ஜெ,மரணம் விசாரணைக்கு பயந்து நீதிமன்றத்திற்கு ஓட்டமா,.....
ரகசியத்தை போட்டுடைத்த ஓ.பன்னீர்செல்வம்......
மதுரை விமான நிலையத்தில், ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது.....
ஆரம்பத்திலிருந்தே எடப்பாடியின் நடவடிக்கைகளை பத்திரிக்கையாளர்கள் கவனித்துவருகிறீர்கள் உங்களைப் போல யார்மீது யார் என்ன குற்றம்சுமத்தி வருகின்றனர் என்பதை தமிழக மக்களும், ஜெ.வின் உண்மை தொண்டர்களும் நன்றாக கணித்துத்தான் வைத்திருக்கிறார்கள்.
தற்போது நடந்த,சட்டமன்ற தொடரில், தமிழக முதல்வரை நான் சந்தித்து பேசியதாக சொல்லியிருக்கிறார. இது முற்றிலும் உண்மை க்கு புறம்பான தவறானது. முதல்வரை நான் சந்திக்கவில்லை என நிரூபிக்க நான் தயார்......
இல்லையென்றால் அரசியலைவிட்டே விலகவும் தயார். எடப்பாடி தயாரா?

அதிமுக தொண்டர்களின் இயக்கம், இதில் பல விரும்ப தகாதஉருவாக்கி பெரிய பாவத்தை செய்து விட்டு அடுத்தவர் மீது பழி போடுகிறார்.
பதவியாசையில் மெதுவாக ஊர்ந்து ஊர்ந்து சென்று பதவிகளை வாங்கியது யார்? நம்பிக்கைத்துரோகம் செய்தது யார்? என்று அரசியல் தெரிந்தவர்களுக்கு நன்றாக தெரியும்........
தேவர் தங்க கவச சர்ச்சை நீதிமன்றத்திலுள்ளது. நீதிமன்ற முடிவின்படி நாங்கள் உரிய முடிவுகளை எடுப்போம். நீதியரசர் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை முடிவை எதிர்த்து சிலர் நீதிமன்றம் செல்ல முயற்சித்து வருகிறார்கள்.

இதுகுறுத்து நான் கருத்துச் சொல்ல விரும்பவில்லை. அதிமுக தொண்டர்களுக்கு என்னை நன்றாக தெரியும், தொண்டர்களை பற்றி எனக்கும் நன்றாக தெரியும், உரிய நேரத்தில் அவர்களை அணுகுவோன், அதிமுக இணையும் என்பதிலும் உறுதியாகயிருக்கிறேன்.
இவ்வாறாக அவர் தெரிவித்தார்.




Comments