கலைஞர்நூற்றாண்டு விழா! கால்நடை சிறப்புமருத்துவ முகாம்! அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துவக்கிவைத்தார்!
- உறியடி செய்திகள்

- Jun 28, 2023
- 1 min read

மூத்தப்பத்திரிக்கையாளர் ராஜா...
கலைஞர்நூற்றாண்டு விழா! கால்நடை சிறப்புமருத்துவ முகாம்! அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துவக்கிவைத்தார்!
முகாமில் சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கு ஆலோசனைகள், அறிவுறுத்தல் வழங்கி, சிறந்த கால்நடை பராமரிப்பாளர்களுக்கு பரிசுகள் வழங்கியும் பாராட்டினார்....!
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தூத்துக்குடி மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை ஆவின் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய மாபெரும் கால்நடை மருத்துவ முகாம் மற்றும் கருத்தரங்கம் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செக்காரக்குடியில் நடைபெற்றது..!
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.கழகச் செயலாளர் தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன்
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா
ஆகியோர் குத்துவிளக்கேற்றி மாபெரும் கால்நடை மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்கள்.
முன்னதாக மருத்துவ முகாமை திறந்துவைத்து, கால்நடைகளுக்கும், வீட்டுச் செல்லப்பிராணிகளுக்கு நவீன முறை சிகிச்சையளிக்கும் பணிகளை துவக்கிவைத்து, சிகிச்சையளிக்கும் முறைகள், கால்நடைகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் உள்ளிட்டவற்றையும் அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டு, சிகிச்சையளிக்கும் முறைகள் குறித்தும் கேட்டறிந்து, அதிகாரிகளுக்கு ஆலோசனைகள், அறிவுறுத்தல்களையும் வழங்கினார்!
இதில் கால்நடைகள் மற்றும் வீட்டுச் செல்லப்பிராணிகள் உள்ளிட்டவற்றிற்கு மருத்துவக் குழுவினர் பரிசோதித்து சிகிச்சைகளித்தார்கள்.
மேலும் சிறந்த கால்நடை பராமரிப்பாளர்களுக்கு ஊக்கப் பரிசுகள் வழங்கிய அமைச்சர். அனிதா ராதாகிருஷ்ணன் பேசியபோது.....
கால்நடை பராமரிப்பு குறித்த கருத்தரங்கில் தமிழ்நாடு அரசின் மூலமாக கால்நடை பராமரிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விரிவாகவும், விளக்கமாகவும் கூறினார்.....!
மாவட்ட வருவாய் அலுவலர் .அஜய் சீனிவாசன்
திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் . செல்லபாண்டியன்
சார் ஆட்சியர் .கௌரவ்குமார் வட்டாட்சியர் சிவகுமார்
மாவட்ட ஊராட்சி தலைவர் .பிரம்மசக்தி மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் .உமரிசங்கர்
ஆவின் சேர்மன் .சுரேஷ்குமார்
கருங்குளம் யூனியன் சேர்மன் .கோமதி ராஜேந்திரன்
ஒன்றிய கழகச் செயலாளர்கள் .சுரேஷ் காந்தி .ராமசாமி
.SR.சுப்பிரமணியன்
தலைமை செயற்குழு உறுப்பினர்,செந்தூர் மணி
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் .ராமஜெயம்
மாவட்ட பிரதிநிதிகள் .பொன்கணி
கருப்பசாமி
மாவட்ட கவுன்சிலர் திரு.செல்வகுமார்
ஒன்றிய கவுன்சிலர்கள் .ராதா மாரியப்பன் .முருகன்
செக்கரக்குடி ஊராட்சி மன்ற தலைவர் .ராமலட்சுமி
இளைஞரணி .லட்சுமணன்
கருப்பசாமி
கிளைச் செயலாளர்கள் .சிவஞானம்.ஐஸ் மாரியப்பன்




Comments