கலைஞரின் வேளாண் வளர்ச்சி திட்டம்! விவசாயிகள் பயனடை ய!! எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேண்டுகோள்!!!
- உறியடி செய்திகள்

- Oct 26, 2022
- 1 min read

தமிழ்நாட்டில் வேளாண்மை வளர்ச்சி, கிராமங்கள் முன்னேற்றத்திற்கான கலைஞர் வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் அனைத்து தரப்பு விவசாயிகளும், நமதுமுதல்வரின் அழைப்பை ஏற்று இணைந்து பயன்பெற வேண்டும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்......
இது குறித்து, தி.மு.கழக உயர்மட்ட செயல்திட்டக்குழு உறுப்பினர், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர், தமிழக வேளாண்-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.....

தமிழ்நாட்டில் சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக 2021 - 2022ம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.......
தமிழக முதல்வர்.தி.மு.கழகத் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் 10 ஆண்டு தொலைநோக்கு திட்டத்தில் நீகரசாகுபடி பரப்பளவை 11.75 லட்சம் ஏக்கராகவும், 12.525,கிராம ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் தரிசு நிலங்களை கண்டறிந்து பாசன நீர் ஆதாரங்களை ஏற்படுத்தி சாகுபடிக்கு கொண்டு வருவதுடன்-வேளாண்மை - உழவர் நலத்துறை, ஊரகஉள்ளாச்சித் துறை உள்ளிட்ட உழவர் நலன் சார்ந்த பற துறைகளுடன் இணைந்து செயல்படுத்தப்படும் திட்டங்களையும் ஒருங்கிணைத்து அனைத்து கிராமங்களிலும் வேளாண் சார்ந்த அனைத்து வளர்ச்சிகளையும் தன்னுரைவு அடையச் செய்வதே முதல்வரின், இத்திட்டத்தின் நோக்கமாகும்.

ஆண்டுதோரும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலாக செயல்படுத்தப்படும் அனைத்து கிராம ஒருங்கிணைந்த கலைஞரின் வேளாண் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்துவதற்கு வேளாண் - உழவர் நலத்துறை நடவடிக்கைகளை துரிதபடுத்தி வருகின்றது.
இதனடிப்படையில் 2021 - 2022,ம் ஆண்டில் 1997 கிராம ஊராட்சிகளில் பணிகளை துவக்கி நடைபெற்று வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் ஊராட்சி பகுதிகளில், கிராம நிருவாக அறுவலர், முன்னோடி விவசாயிகள், இதரத்துறை சார்ந்த அலுவவலர்களை கலந்தாலோசித்து குக்கிராமங்கள் உட்பட அனைத்து தேர்வு செய்யப்பட்ட பகுதிகளையும், நன்கு ஆராய்ந்து, 10 முதல் 15 ஏக்கர் வரையுள்ள, சர்வே எண்,வாரியாக தரிசுநிலங்களை கண்டறிந்து, ஒரே கிராமத்தில் அதிக தரிசு நிலங்களிலிருந்தால், ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுப்புகள் அமைக்கவும், 10 ஏக்கருக்கு குறைவாகயிருந்தால் அவற்றை தனித்தனியாக கணக்கெடுத்து தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் சீரமைப்பு பணிகளை மேற்க்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் கிராம அளவில் இப்பணிகளை மேற்க்கொள்ள ஒவ்வொரு பஞ்சாயத்துகளுக்கும், ஒரு பொருப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது பற்றிய சந்தேகங்கள் - கூடுதல் விவரங்களை அவரிடம் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.
2022 - 2023, ஆண்டில் இத்திட்டம் 3.204. கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்த தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தரிசு நில தொகுப்பு அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
இதில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலியில், அல்லது இணையதளத்திலோ முன்பதிவு செய்துகொள்ளலாம்.
தமிழ்நாட்டில் கழக ஆட்சியில், வேளாண் வளர்ச்சி, கிராமங்கள் தன்னிறைவு பெறவேண்டுமெனும் நோக்கில் நம்முதல்வர் தளபதி, மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அறிமுகபடுத்தியுள்ள கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் இணைந்து பயன்பெற வேண்டும்.
இவ்வாறாக அவர் கூறியுள்ளார்.




Comments