top of page
Search

மெரினாவில் கம்பீராய் கலைஞரின் பேனா! ஒன்றிய அரசு அனுமதிக்கு வரவேற்பு - பாராட்டு!!!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Apr 29, 2023
  • 1 min read
ree

ஆசிரியர் மணவை எம்.எஸ்.ராஜா...


முன்னாள் முதல்-அமைச்சரும், மறைந்த தி.மு.கழக. தலைவருமானமுத்தமிழறிஞர் கலைஞர் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி வயது முதிர்வு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு சென்னை மெரினா


கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.


இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க நடுக்கடலிலும் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட 'பேனா' நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த நினைவு சின்னம் அமைக்க ஒன்றிய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அனுமதி பெற விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. இதில் மத்திய அரசின் முதற்கட்ட அனுமதி கிடைத்ததை தொடர்ந்து அண்மையில் பொதுமக்களிடம் தமிழக அரசு கருத்து கேட்பு கூட்டம் நடத்தியது.

ree

இதைத்தொடர்ந்து பேனா நினைவு சின்னம் அமைக்க ஒப்புதல் வழங்க கோரி ஒன்றிய அரசுக்கு தமிழக பொதுப்பணித்துறையின் சார்பில் கடிதம் அனுப்பட்டது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை, மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழுவிடம் தமிழக பொதுப்பணித்துறை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் பேனா நினைவு சின்னத்துக்கு ஒப்புதல் வழங்க தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்தது. இந்த நிலையில், பேனா நினைவு சின்னம் அமைக்க ஒன்றிய அரசு அனுமதி கொடுத்துள்ளது.


இதனை தொடர்ந்து எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட தி.மு.கழகத்தினரும், கூட்டணி கட்சியினரும் உற்சாகம் அடைந்து பாராட்டிவரவேற்றுள்ளாார்கள்.







 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page