தூத்துக்குடியில் கனிமொழி கருணாநிதி! மாற்றுத்திறனாளிகளுடன் உரையாடல்!! விமானநிலையத்திலும் ஆய்வு!!!
- உறியடி செய்திகள்

- Apr 29, 2023
- 1 min read
திராவிட தமிழர்கள் இணையதள ஊடகம் உறியடி செய்திகள். uriyadi.com

ஆசிரியர் மணவை எம்.எஸ்.ராஜா..
தூத்துக்குடி நெய்தல் கலை விழாவிற்கு வந்திருந்த மாற்றுத்திறனாளி மாணவர்களை சந்தித்து உரையாடிய கனிமொழி கருணாநிதி எம்.பி, தொடர்ந்து விமான நிலைய கட்டுமான விரிவாக்கப் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார்.
திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி அவர்கள் முன்னெடுப்பில் தூத்துக்குடியில் நெய்தல் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதன், இரண்டாம் நாளான இன்று 29 சனிக்கிழமை,கனிமொழி கருணாநிதி நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து கடைகளையும் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும், நிகழ்ச்சிக்கு வந்திருந்த மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் உரையாடினார்.
தமிழர்களின் பண்பாடு, கலை, நாகரிகம் போன்றவற்றை பறைசாற்றும் வகையில் தூத்துக்குடி எட்டயபுரம் ரோடு சங்கரப்பேரி விலக்கு அருகில் உள்ள திடலில் 4 நாட்கள் நெய்தல் கலைத்திருவிழா நடத்தப்படுகிறது. ஏப்ரல் 28 நேற்று தொடங்கி மே 1-ம் தேதி வரை நெய்தல் கலை திருவிழா நடைபெறுகிறது. 30-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, இதில் 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கவுள்ளனர். கலை திருவிழாவில் கலைகள் மட்டுமின்றி நமது பாரம்பரிய உணவு வகைகளையும் அறிந்துகொள்ளும் வகையில் 40 அரங்குகள் மேல் அமைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி கலை விழாவின் இரண்டாம் நாளான இன்று ஏப் 29-சனிக்கிழமை
தூத்துக்குடி இசைக் கல்லூரி,
தமிழண்டா கலைக்குழு,
கொங்கு பண்பாட்டு மையம் - பெரும் சலங்கையாட்டம்,
கலைவாணர் கலைக்குழு - பெரும்முரசாட்டம்,
தூத்துக்குடி நெய்தல் எழுத்தாளர்கள், வாசகர்கள் இயக்கம்,
ஆத்தங்குடி இளையராஜா - மீனாட்சி இசைக்குழு,
கானா முத்து இசைக்குழு. உள்ளிட்டோரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட தி.மு.கழகச் செயலாளர் தமிழ்நாடு சமூக நலன் - மகளீர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இந்திய விமானப் போக்குவரத்து ஆணையத்தின் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய ஓடுபாதை அமைத்தல், புதிய முனையக் கட்டடம், தொழில்நுட்ப பிரிவு, கட்டுப்பாட்டு கோபுரம், புதிய தீயணைப்பு நிலையம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று ஏப் 29,சனிக்கிழமை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர், திமுக துணைப் பொதுச்செயலாளர்,திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவர் கனிமொழி கருணாநிதி
விமான நிலைய விரிவாக்கம் பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்!
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் .ஜெகன் பெரியசாமி, விமான நிலைய இயக்குனர் சிவ பிரசாத், உதவி மேலாளர், .பிரிட்டோ, சிவில் டிபார்ட்மெண்ட் .அருண்குமார், .ஓம் பிரகாஷ், விமான நிலைய மேலாளர் .ஜெயராமன் மற்றும் பலர் உடனிருந்தனர்.




Comments